Category Archives: High Court

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம்: ஐகோர்ட்டு உத்தரவு

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம்: ஐகோர்ட்டு உத்தரவு

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் விவசாய நிலங்களை அழித்து சட்ட விரோதமாக, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாகவும், இதனால் விவசாயமும், விவசாய நிலங்களும் அழிந்து வருவதாகவும் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி அரசாணை வெளியிட்டது. அதில், ‘பத்திரப்பதிவுச் சட்டம் பிரிவு 22 (ஏ)வின்படி, அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம். ஆனால், அதன்பின்னர் உருவாக்கப்படும் வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது’ என்று கூறியிருந்தது.

இதையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 28-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, பத்திரப்பதிவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை தளர்த்தி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர், இந்த வழக்கு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, செப்டம்பர் 9-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட தடையை நீட்டித்தும், மார்ச் 28-ந் தேதி உத்தரவை ரத்து செய்தும் மீண்டும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து, அங்கீகாரம் இல்லாத நிலங்களை வரையறை செய்யும் விதிகளை உருவாக்கி தமிழக அரசு கடந்த மே 5-ந் தேதி இரு அரசாணைகளை பிறப்பித்தது. இந்த அரசாணைகளை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட்டு, இந்த விதிகளின்படி அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி கடந்த மே 12-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அய்யாத்துரை ஆஜராகி, ‘கடந்த மே 12-ந் தேதி இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்வது குறித்து சில சந்தேகங்கள் உள்ளன. அதை தெளிவுப்படுத்த வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை விற்பனை செய்திருந்தால், அந்த வீட்டு மனைகளை மறுவிற்பனை செய்யலாம். அதுபோன்ற நிலங்களை சார் பதிவாளர், பத்திரப்பதிவு செய்யலாம்.

அதேநேரம், இந்த ஐகோர்ட்டு அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி தடை விதித்தது. இந்த தடை மார்ச் 28-ந் தேதி தளர்த்தப்பட்டது.

இந்த தடை அமலில் இருந்தபோது, அதாவது செப்டம்பர் 9-ந் தேதி முதல் மார்ச் 28-ந் தேதி வரை இடைப்பட்ட காலத்தில் தடையை மீறி பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை, மறு விற்பனை செய்ய முடியாது.

மேலும், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளில் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கும்போது, தமிழக நகரமைப்பு சட்டத்தின்படியும், கடந்த மே மாதம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை பின்பற்றியும், அந்த நிலங்களை வரையறை செய்யவேண்டும். விசாரணையை ஆகஸ்டு 28-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழக அரசின் புதிய விதிமுறைகள்படி பத்திரப்பதிவு செய்ய அனுமதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழக அரசின் புதிய விதிமுறைகள்படி பத்திரப்பதிவு செய்ய அனுமதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, சட்டவிரோதமாக வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர், “அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து” உத்தரவிட்டனர்.

மேலும், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி தமிழக அரசு, தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டம், பிரிவு 22(ஏ)-ல் திருத்தம் கொண்டு வந்து, அரசாணை வெளியிட்டது.

அந்த அரசாணையில், ‘அங்கீகாரம் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது. அதே நேரம், 2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறுவிற்பனை (பத்திரப்பதிவு) செய்யலாம்’ என்று கூறியிருந்தது.

இந்த அரசாணையை ஐகோர்ட்டு ஏற்கவில்லை. அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் எவ்வாறு வரையறை செய்யப்படும் என்பது குறித்து விதிமுறைகளை உருவாக்கி, அதுதொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுத்து, அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை வரையறை செய்தும் தமிழக அரசு விதிமுறைகளை உருவாக்கி, 2 அரசாணைகளை கடந்த 5-ந் தேதி வெளியிட்டது. இந்த அரசாணைகள் ஐகோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசாணைகளை ஏற்கக்கூடாது என்று மனுதாரர் யானை ராஜேந்திரன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.

அதேபோல அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அய்யாதுரை உள்பட பலர் ஆஜராகி வாதிட்டார்கள்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டம் 1908-ல் தமிழக அரசு கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வந்த திருத்தத்தின் அடிப்படையில், தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டம் பிரிவு 22ஏ-ன் கீழ், கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில், அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை (பத்திரப்பதிவு) செய்யலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த அரசாணை பிறப்பிக்கப்படும்போது, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்யும் விதிமுறைகளை தமிழக அரசு உருவாக்கவில்லை. அப்படிப்பட்ட விதிமுறைகள் நடைமுறையிலும் இல்லை. அதே நேரம், குழந்தைகளின் கல்விக்காகவும், திருமணத்துக்காகவும் வாங்கிய அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்ய முடியாமல் பலர் தவிக்கின்றனர் என்று எங்களது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

தமிழக அரசின் புதிய விதிமுறைகள்படி பத்திரப்பதிவு செய்ய அனுமதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

 

மேலும், “தமிழ்நாடு அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் ஒழுங்குமுறை விதிகள் 2017” என்ற புதிய விதியை தற்போது அரசு உருவாக்கி உள்ளது. இந்த விதியில், 2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட அனைத்து வகையான அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்ய விதிவிலக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இது, தமிழ்நாடு நகரமைப்பு சட்டத்துக்கு எதிரானது ஆகும். எனவே, இந்த விதிவிலக்கு செல்லாது.

தற்போது அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்ய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள, வரையறை கட்டணம், மேம்பாட்டு கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்தி, அனைத்து அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளையும் வரையறை செய்த பின்னரே, அதை பத்திரப்பதிவு செய்ய வேண்டும். அதாவது, புதிய விதிமுறைகளை பின்பற்றித்தான் பத்திரப்பதிவுகளை செய்யவேண்டும்.

தற்போது வழங்கியுள்ள இந்த அனுமதி கூட, இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்திக்கொள்கிறோம்.

மேலும், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று ஐகோர்ட்டு பிறப்பித்த தடை உத்தரவு, 2016-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி முதல் 2017-ம் ஆண்டு மார்ச் 28-ந் தேதி வரை அமலில் இருந்தது.

இந்த காலகட்டத்தில், செய்யப்பட்ட பத்திரப்பதிவு சட்டப்படி செல்லாதது ஆகும். இந்த காலகட்டத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகளை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, (வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது) பத்திரப்பதிவு செய்யக்கூடாது. இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 14-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

போலி ஆவணம் தயாரித்து ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கோவை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தனர்.

போலி ஆவணம் தயாரித்து ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கோவை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தனர்.

_mg_0878
போலி ஆவணங்கள் தாயரித்து நிலமோசடி. நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் புகார். 

கோவையை அடுத்த போத்தனூர் மேட்டூரில் பொதுமக்களுக்கு சொந்தமான வீட்டு மனை பிரிவுகளை சிலர் போலி ஆவணம் தயாரித்து ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கோவை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தனர்.

போத்தனூர் மேட்டூரில் கடந்த 1962 ம் ஆண்டு மரகதராஜம்மாள் என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தை பத்து சென்ட், எட்டு சென்ட் என மனைகளாக பிரித்து டி.டி .பி. அனுமதி பெற்று விற்றுள்ளார். இவாறு விற்கப் பட்ட 234 மனைப் பிரிவுகளை இருநூறுக்கும் அதிகமாணவரக்ள் வாங்கி உள்ளனர்.

அந்த வீட்டு மனைகள் உள்ள பகுதி அப்போது வளர்ச்சி அடையாத பகுதியாக இருந்த காரணத்தால். அதில் யாரும் வீடுகள் காட்டவில்லை. இந்நிலையில் மரகதராஜம்மாள் கடந்த 1.1.1999 ஆண்டு மறைந்து விட்டார். அதன் பின்னர். அந்த இடத்திற்கு போத்தனூரை சேர்ந்த ஹாஜாகான், பெங்களூருவை சேர்ந்த சையத் இணையத்துல்லா உள்ளிட்ட சிலர் போலி ஆவணங்கள் தாரித்துள்ளதாகவும். சமீபத்தில் சம்மந்தப் பட்ட நிலத்தில் நிலை அளவைக் கற்களை அப்புறப் படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும். இதை கேட்கச் சென்ற மனை உரிமை யாளர்களை மிரட்டியதாகவும் கூறி, மனை உரிமையாளர்கள் இன்று காவல் துறை ஆணையரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். இதில் வழக்கறிஞர் ரிச்சர்டு, அந்தோணி, சுரேஷ்குமார்,வழக்கறிஞர் பாலு உள்பட முப்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பார் கவுன்சில்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ்,

பார் கவுன்சில்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ்,

bar-council-of-india-bci
சட்ட பல்கலைக்கழகங்கள் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கான தேதி ஜனவரி 31-ந் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

விசாரணையின் போது தமிழக பார் கவுன்சில் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சஞ்சய் ஹெக்டே தனது வாதத்தில் புதிய வக்கீல்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை சரிபார்க்க ரூ.1,500 வரை சட்ட பல்கலைக்கழகங்கள் வசூலிப்பதாக தெரிவித்தார்.இதற்கு நீதிபதிகள், நாடு முழுவதும் உள்ள சட்ட பல்கலைக்கழங்களை எதிர் மனுதாரர்களாக இந்த வழக்கில் சேர்க்குமாறு உத்தரவிட்டனர். மேலும் வக்கீல்கள் சரிபார்ப்புக்காக தங்கள் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நவம்பர் 30-ந் தேதிவரை நீட்டிப்பதாகவும், எக்காரணம் கொண்டும் இந்த தேதி மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தனர்.

‘சட்ட பல்கலைக்கழகங்கள் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கான தேதி ஜனவரி 31-ந் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது, சான்றிதழ்கள் சரிபார்ப்பு வேலை நிறைவு அடைந்தவுடன் பிப்ரவரி முதல் வாரத்துக்குள் இந்திய பார் கவுன்சில், நிலவர அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை ஐகோர்ட்டில், ராஜேந்திரன் என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை ஐகோர்ட்டில், ராஜேந்திரன் என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

highcourt_2597637f
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட செந்தில்பாலாஜி, கே.சி.பழனிசாமிக்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் மனு.

சென்னை ஐகோர்ட்டில், ராஜேந்திரன் என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த வழக்கு மனுவில், ‘தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. அப்போது அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், தி.மு.க. சார்பில் கே.சி. பழனிசாமியும் போட்டியிட்டனர். அப்போது இவர்கள் இருவரும் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டனர்.

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டனர். இதனால், எழுந்த புகாரின் அடிப்படையில் அரவக்குறிச்சி தொகுதிக்கு நடைபெற இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த தொகுதிக்கு தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எனவே, நடைபெறுள்ள தேர்தலில், செந்தில்பாலாஜி, கே.சி.பழனிசாமி ஆகியோர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். இவர்கள் இருவரால்தான் ஏற்கனவே நடைபெற இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. எனவே, இவர்களது வேட்பு மனுக்களை ஏற்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.