Category Archives: CULTARAL

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது

திராவிடர் கழக  தூண்களில் ஒருவரான என்.ஆர் சாமி அவர்களின் பேரனும் சாமி திராவிட மணி மற்றும் ஜெயா அம்மையார் ஆகியோரின் மகனுமான பெரியார் சாக்ரடீஸ் அவர்கள் கடந்த 2014 ம் ஆண்டு மே 12ம் நாள்  சாலை விபத்தின் காரணமாக 44ம் வயதில் உயிர் நீத்தார்.

  பெரியார் திடல் மற்றும் விடுதலை நாளேட்டின் மக்கள் தொடர்பாளராகவும் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றிய தோழர் பெரியார் சாக்ரடீஸ் பிற்பாடு “தமிழக அரசு” இதழிலும் செய்தியாளராக  அரசுப் பணி செய்து வந்தார்.

  சீரியபண்பும் சிறந்த நுண்ணறிவும் பெரியார் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில அளப்பரிய நேசமும், மனித நேயத்தின் பால் மாறாத பற்றும் கொண்ட சாக்ரடீஸ் அவர்கள் பெரியார் கொள்கையின் குணக் குன்றாகவே  வாழ்ந்து காட்டியவர்

.

  2011ம் ஆண்டு செம்மொழி மாநாட்டையொட்டி 100 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முன்னாள் அமைச்சர் திரு.பரிதி இளம்வழுதி, ஆய்வாளர் டாக்டர் திரு,நாச்சிமுத்து எழுத்தாளர் திரு.அஜயன்பாலா ஆகியரோடு இதழாளர் திரு.பெரியார்சாக்ரடீஸ் அவர்களும் இணைந்து செம்மொழி சிற்பிகள் எனும் அரிய நூலை உருவாக்கி தந்து தமிழுக்கு தன் அரிய சேவையை செய்துள்ளார்.

  இந்நூலை உருவாக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளும் காட்டிய தீவிரமும் பட்டியலை உருவாக்குவதில் அவர் காட்டிய முனைப்பும் அவரது தமிழ்த் தொண்டுக்கும் தமிழ் அறிவுக்கும் சிறந்த சான்று. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே மக்களுக்கு தமிழ் ஈழம் என பெயர் வைத்து அழகு பார்த்தவர்.

  அப்படிப்பட்டவருடைய எண்ணங்கள் தொடர்ந்து நீடிக்கும் வகையில் அவரோடு நெருங்கி பழகிய டாக்டர் திரு.நாச்சிமுத்து, எழுத்தாளர் திரு. அஜயன் பாலா ஆகியோர் இணைந்து “பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது”  எனும் ஒரு அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அவரது எண்ணமும் உணர்வும் தொடர்ந்து நம்மோடு இயக்கம் கொள்ள  முடிவு செய்தோம்

 அதன்படி வருடா வருடம் ஊடகம், இதழியல், இணையம், பண்பாடு சமூக சேவை மற்றும் கலாச்சார பணிகளில்  அர்ப்பணிப்புடன் சீரிய தொண்டாற்றி வருபவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது கடந்த இரண்டு ஆண்டுகளின்  விழாக்கள் மற்றும் விருது பெற்றவர்களின் விவரங்களுக்கு  www.periyarsocratesvirudhu.blogspot.com க்ளீக் செய்யவும்

இப்படிக்கு .

டாக்டர். நாச்சிமுத்து =எழுத்தாளர்அஜயன் பாலா

  • திவ்யா பாரதி (ஆவணப்பட இயக்குனர்) – சுய குறிப்பு :

விருதுநகர் மாவட்டம்  அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் வயது 24, .தாயார்.ஜெயபாரதி  தந்தை  கர்ணன் இருவரும் பஞ்சுமில் தொழிலாளர்கள் . சிறு வயது  கம்யூனிஸ் இயக்கத்துடனான ஈடுபாடுகொண்டு மக்கள் கலை இலக்கியப் பண்பாட்டு கழகத்தின் மூலம் சமூக மாற்றத்திற்கான களப்பணிகளில் ஈடுபட்டு வருபவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் காட்சி ஊடக துறை மாணவி. தொடர்ந்து மதுரை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர். கல்லூரி காலங்களில் தொடர்ந்து சமூக மாற்றங்களுக்கான போராட்டங்களில் கலந்துகொண்டவர்.

தலித் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான,  போராட்டம், கவுரவ கொலைக்கு  எதிரான மாணவர் போராட்டம்,  தலித் மாணவர் அரசு விடுதிகளை மேம்படுத்தக் கோரி தொடர் போராட்டம், ஆகியவற்றுடன் வினோதா வித்யா  ஆகிய இளம் பெண்கள் மீதான் ஆசிட் வீச்சுகளூக்கு எதிரான போராட்டம், என மதுரையின் மிக முக்கியமான அரசியல் போராட்டங்களில் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது   இதன் காரண்மாக ஆனந்த விகடன் பத்திரிக்கையின் 2013ஆம் ஆண்டின் Top 10 நம்பிக்கை மனிதர்கள் பட்டியலில் முதல் நபராக இடம் பெற்றார்..

தொடர்ந்து, கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களின் அவலங்களை , வலிகளை , வாழ்வியலை பதிய வைக்கும் வகையில் கக்கூஸ் எனும் ஆவணப்படத்தை இயக்கி இந்த ஆண்டு வெளியிட்டு சமூகத்தில் பெரும் அதிர்வை உண்டாக்கியவர். தொடர்ந்து பல்வேறு தடைகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொண்டு வருவதே இந்த ஆவணப்படத்தின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தக்கூடியது.

  1. ஜெயராணி (எழுத்தாளர்) – சுய குறிப்பு

திண்டுக்கல் மாவட்டம் அழகன்பட்டி என்ற கிராமத்தில் மீனா – மயில்வாகனன் தம்பதியருக்கு இரண்டாவது மகளாக 28.04.1978 அன்று பிறந்தார். மதுரை மீனாட்சிக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இளங்கலையும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் முதுகலையும் பயின்றார். கடந்த 15 ஆண்டுகளாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணியாற்றி வரும் ஜெயராணி தமிழின் முன்னணி வெகுஜன இதழ்களான ஆனந்தவிகடன், குமுதம், இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகளில் பணிபுரிந்த போதும் இவரது எழுத்துகள் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் பாடுகளையே பதிவு செய்தன. சாதி எதிர்ப்பு, சிறுபான்மையினர் நலன், பாலின சமத்துவம்,குழந்தைகள் உரிமை சார்ந்து நூற்றுக்கணக்கான செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். 

தலித் முரசு இதழில் எழுதிய கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை மட்டும் ’ஜாதியற்றவளின் குரல்’ என்ற தலைப்பில் தொகுப்பாக கடந்த ஜனவரி 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. புகைப்படக் கலைஞர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர் என  பல்வேறு தளங்களிலும் இயங்கி வருகிறார்.

இயக்குனர் ரஞ்சித் உருவாக்கத்தில் ஜெய்பீம் மன்றம் மூலம் மேடையேற்றப்பட்ட  கையால் மலமள்ளும் தொழிலாளர்களின் அவலங்களைச் சொல்லும்  மஞ்சள் நாடகத்தின் திரைக்கதை பிரதியை உருவாக்கியது  சமூக மாற்றத்திற்கான  இவரது  சீரிய  பங்களிப்பு .

SRM University – B.Tech Induction Programme-17th July 2017

SRM University – B.Tech Induction Programme-17th July 2017

SRM University  Induction-2017-B.Tech Programme 

SRM University organized induction programme on 17th July 2017 for the first year B.Tech students of various engineeringprograms. The students and parents in large number were graced the function. The function started with the welcome address of Prof. T.P. Ganesan, Pro Vice – Chancellor (P&D), SRM University. In this address, he stressed on the importance of engineering in mouldingthe careers of the students. Dr. T. R. Paarivendhar, Chancellor, SRM University addressed the students and parents during the function. He has told that SRM University is playing a pivotal role in the engineering programs of the country by bringing world class standards with a vision for next 50 years. The university has state-of-art infrastructure, flexible curriculum, student abroad programmes, student research activities and many more.

Prof. Prabir K.Bagchi, Vice Chancellor, SRM University, emphasized on the importance of hard work, focus and perseverance. He has also mentioned on the importance of students communicating with their parents on a daily basis. He even added that the world is full of opportunities for us to make the best of it.Later, Dr. N. Sethuraman, Registrar, SRM University, introduced the Directors, Deans and Heads of various schools and departments of the university. Several parents gave their valuable feedback about the SRM University to choose as their ward’s B.Tech destination. The programme is concluded with the vote of thanks by the Dr. D. KingslyJebasingh, Director in-charge of Engineering and Technology, SRM University.

Velammal Matric. Hr. Sec. School, Mogappair made its grand ECAYLP inaugurated by Shri Santhosh Narayanan, Veteran Indian Music Composer Video Link’s Imges,& News

Velammal Matric. Hr. Sec. School, Mogappair made its grand ECAYLP inaugurated by Shri Santhosh Narayanan, Veteran Indian Music Composer Video Link’s Imges,& News

Velammal Matric. Hr. Sec. School, Mogappair made its grand ECAYLP inaugurated by Shri Santhosh Narayanan, Veteran Indian Music Composer News.

Velammal Matric. Hr. Sec. School, Mogappair made its grand ECAYLP inaugurated by Shri Santhosh Narayanan, Veteran Indian Music Composer  in its premises ECAYLP (Extra Curricular Activities–Year Long Programme) has evoked the overwhelming response of the students in all areas especially Graduation of 501 young ECAYLP Students, Cultural Extravaganza, Yoga demonstration  Music, Dance, Young Learners English, Robotics, Hindi, Sports and many more. The students master the arts and have the privilege of participating in inter school competitions and ‘Arangetram’ too.

 Debutant director Ashok Amirtharaj’s ‘Thrii’ brings together Ashwin Kakamanu and Swathi Reddy again as the lead pair after the 2013 super hit ‘Idharkuthaney Asaipattai Balakumara’. Let’s see what the film has to offer and how it will work for the audience.

Jeeva (Ashwin Kakamanu) is a happy go lucky Engineering college student. His father (Jayaprakash) is a school teacher who is highly disciplined. He is strict with his son outside but loves him within. Jeeva also  is concerned about fulfilling his father’s dreams about him. 

During an accident. Jeeva slaps Kishore (Arjai) the son of a wicked politician Anganna (A. L. Azhagappan) and also the correspondent of the college where Jeeva is studying. Kishore avenges Jeeva by messing up with the latter’s conduct certificate thereby shattering his dreams of higher education. On the other hand Angannan is the reason for the death of the father of Swathi who happens to be Jeeva’s neighbor. 

Velammal Matric. Hr. Sec. School, Mogappair made its grand ECAYLP inaugurated by Shri Santhosh Narayanan, Veteran Indian Music Composer Video Link’s.  

Jeeva decides to take on the powerful politician and his son and teach them a lesson and how he does that forms the Story the film.

Velammal Matric. Hr. Sec. School, Mogappair made its grand ECAYLP inaugurated by Shri Santhosh Narayanan, Veteran Indian Music Composer News.

PANKAJ UDHAS LIVE AT FORUM ON 28TH JULY

PANKAJ UDHAS LIVE AT FORUM ON 28TH JULY

All the ghazal enthusiasts out there, get ready for the time of your life, India’s legendary ghazal artist Padmashree Pankaj Udhas is performing LIVE at the Forum Mall on 28th July. Padashree Pankaj Udhas hails from Gujarat and has spent nearly 4 decades of his life in performing and perfecting his love for Ghazals.

Through the years, he has travelled and promoted ghazal form of music all over the world and has won the hearts of millions through his music. He was a playback singer for many Hindi films as well, including Maahiya Teri Kasam,  Rishta Tera Mera (male version),  Main Khiladi Tu Anari (Original Motion Picture Soundtrack), HothonPe Tera,  Na Kajare Ki and MaiyyaPukaare.

His achievements include a plethora of awards through the years for his excellence in the field of Music and promotion of ghazal music in India and abroad, few notable ones are Padmashree in 2006, Outstanding Artists Awards from the state of New York, London, Atlantic City, Texas, New Jersey, South Africa amongst others.

Watch Pankaj Udhas perform LIVE at the Forum Mall on 28th July from 6:30 pm onwards. Gift a ticket to a ghazal lover you know and make it their special memory.

Grab your tickets soon! Tickets available on www.bookmyshow.com

For details contact 044 4904 9000.

Romeo Juliet – An Indian Musical Stage Show – Day 1 & 2 Images Cast List

Romeo Juliet – An Indian Musical Stage Show – Day 1 ImagesRomeo Juliet – An Indian Musical Stage Show – Day 1 & 2 Images Cast List

Romeo & Juliet Play Produced By Ms.Varalakshmi Sarathkumar in the name of  The Hot Shoe Dance Company

Directed  by Jeffery Vardon ,,Salsamani as Romeo,,Varalakshmi as Juliet,,Ms Roshan as  Mrs Muthalay (Juliet’s Mother),,Yogan as James Muthalay (Juliet’s Father),,Deepa Nambiar as Sosamma,,Tyson ( Mark Thomas ) as Juliet’s Brother ,,Yosuf as Nayagar,,Felix as Father Lawrence,,Britto ( Jay ),,Singh (Navjoth) as Romeo’s Friends,,Mahesh as Messenger,,Dinesh as Philip

Romeo Juliet – An Indian Musical Stage Show – Day 1  

Romeo Juliet – An Indian Musical Stage Show – Day 2 

Balamurali Krishna Memorial Trust Launch Images & News

Balamurali Krishna Memorial Trust Launch Images & News

Legendary musician Dr.M.Balamurali Krishna’s memorial trust was launched yesterday in Chennai. This memorial was launched by  Isaignani Ilayaraja. The event was attened by Dr.T V Gopalakrishnan, Nalli kuppusami chetty, Smt. Sudha Ragunathan, Unni Krishnan and cleaveland Sundaram.
Speaking on this occasion, Nalli kuppusami chetty said, ” Balamurali Krishna sir is a musical genius. Once when i asked him how he is so relaxed even when other instrumentalist are tensed before his concerts, he casually said, “the strings should be tensed but not the playing fingers” . I am happy Ilayaraja sir launched this memorial. I must say Raja sir’s re recording is the best in the world. I was shocked when i learnt ‘Mundaanai mudichu’ ‘s re recording was completed in just 3 hours !!!”

Isaignani Ilayaraja said , ” Balamurali sir’s talent and knowledge in music is unimaginable and unmatchable. Once Balamurali sir and Beem Singh joshi had gone for a song recording. Balamurali sir had gone about his usual habit of having lots of coffees and butter milk and has offered them to beem Singh joshi as well. Beem Singh joshi refused to have anything saying it might affect his voice. On hearing this , Balamurali sir has told , “if just a coffee can harm ur voice , how do you expect the 7 swarangal to heed to you “. Such was his confidence and Character !!! I am really honoured to inaugurate this memorial trust. I always feel Carnatic music is superior to all other forms of music. Almighty might have taken away Balamurali sir too soon from us but his fame, works and achievement will live forever “
It was announced that Andhra Pradesh state goverment will give one lakh rupees every year to Dr.M.Balamurali Krishna memorial trust to help music students. They have also announced his birthday as their ‘Music day’ and have renamed their goverment music college to his name. 
Dr.M.Balamuralikrishna Memorial Trust
Trustees are:
1. Mangalampalli Abhiram
2. Dr.Mangalampalli Sudhakar 
3. Dr.Vamsie Mohan
4. Dr.K.Krishnakumar
5. Vibhu Balamurali

சென்னையில் மான்யா ஹஸ்தகலாவின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி

சென்னையில் மான்யா ஹஸ்தகலாவின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி

சென்னையில் கலாஷேத்ரா பவுன்டேசன் பிரதான நுழைவு வாயிலின் எதிரே அமைந்துள்ள மைதானத்தில் மான்யா ஹஸ்தகலாவின் கைவினைப் பொருட்களின் கண்காட்சியை பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள் குறித்து இதனை தொடங்கி வைத்த நடிகை சாக்ஷி அகர்வால் பேசும் போது,‘ இந்த கண்காட்சியில் இந்தியாவிலிருந்து பத்தொன்பது மாநிலங்களில் உள்ள கைவினை கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றிருக்கிறது. பாரம்பரியம் மாறாமல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டகலம்காரி புடவைகள், ஆர்கானிக் மற்றும் இயற்கையான வண்ணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், வீட்டின் உள் அலங்காரத்திற்கான பொருட்கள், வரவேற்பறையில் வைக்கக்கூடிய கண்கவர் கலைப்பொருட்கள் என அனைத்து வகையான பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன. இது ஒரு வித்தியாசமான கண்காட்சியாக நிச்சயமாக இருக்கும். ’ என்றார்.

இந்த கண்காட்சியில் டோக்ரா பழங்குடியின மக்களின் கைவண்ணத்தில் உருவான அணிகலன்கள் காண்போரை கவரும். ஆக்ராவிலிருந்து மார்பிள் கற்களில் குடையப்பட்ட கைவினைப் பொருட்களும், ஒடிஷா மாநிலத்தில் வாழும் சௌரா என்ற பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரியமான இயற்கை வண்ணத்தைக் கொண்டு வரைந்த துணி ஓவியங்களும் பார்வையாளர்களை ஆச்சரியப்படவைக்கும். இந்திய பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான கோடீஸ்வர் என்ற கிராமப்பகுதியிலிருந்து வந்திருக்கும் கிராமீய கலைஞர்களின் கைவினைப் பொருட்களும், செட்டிநாட்டு கைவினைப் பொருட்களும் இந்த கண்காட்சியை அலங்கரிக்கின்றன.
பிற மாநில கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான வித்தியாசமான கலைப்பொருட்களின் சங்கமமாக இருக்கும் இந்த மான்யா ஹஸ்தகலா கைவினைப் பொருட்களின் கண்காட்சி சென்னையில் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது என்பதும், இந்த கண்காட்சி இன்றிலிருந்து பத்து நாட்கள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேறு யாரும் முன் வராததால் பா.இரஞ்சித் வந்திருக்கிறார்! -தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர் பேச்சு

வேறு யாரும் முன் வராததால் பா.இரஞ்சித் வந்திருக்கிறார்! -தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர் பேச்சு

வேறு யாரும் முன் வராததால் பா.இரஞ்சித் வந்திருக்கிறார்!

“மஞ்சள்” நாடக நிகழ்வில்! தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர் பேச்சு

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் ஜெய்பீம் மன்றம் இணைந்து சென்னை காமராஜர் அரங்கத்தில் “மஞ்சள்” நாடகம் நிகழ்த்தப்பட்டது. “சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்” என்ற கோஷத்துடன், கையால் மலம் அள்ளும் இழிவையும் அதற்கு சாதிய கட்டமைப்பு எப்படி காரணமாக அமைகிறது என்பதையும் இந்த நாடகம் மிக தெளிவாக எடுத்துரைத்தது.

‘கட்டியக்காரி’ நாடகக்குழு நிகழ்த்திய “மஞ்சள்” நாடக நிகழ்வில், அரசியல், சினிமா, ஊடகம் மற்றும் பல துறைகளில் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

கனிமொழி,  தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், சு.திருநாவுக்கரசர், கொளத்தூர் மணி, சுப.வீரபாண்டியன், கு.ஜக்கையன், சதானந்த் மேனன்,  மதிவண்ணன், சத்யராஜ், கலையரசன், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, எஸ்.பி.ஜனநாதன், தாமிரா, மீரா கதிரவன், சுசீந்திரன், உஷா, லெனின் பாரதி, ஆடம் தாசன், எங்கேயும் எப்போதும் சரவணன், நலன் குமரசாமி, ஸ்ரீகணேஷ், இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன், நிரோ பிரபாகர், கவிஞர் உமாதேவி, கவிஞர் சல்மா, அஜயன் பாலா, ஆனந்த் குமரேசன், முருகன் மந்திரம், முத்தமிழ் கலைவிழி, கவிதா முரளிதரன், கவின்மலர், பிரேமா ரேவதி, திவ்யபாரதி, விஜி பழனிசாமி, கொண்டை வெள்ளை, அன்பு வேந்தன் உள்பட இன்னும் பெயர் குறிப்பிடாத பல்துறை பிரபலங்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொள்ள அரங்கம் நிரம்பி வழிந்தது.

60 நாடக கலைஞர்கள் தெளிவான ரிகர்சலுக்குப் பின் அரங்கேற்றிய, “மஞ்சள்” நாடகத்தை எழுதியர், ஜெயராணி. இயக்கியவர் ஸ்ரீஜித் சுந்தரம், மேற்பார்வை செய்தவர்கள் பாரதி செல்வா மற்றும் சரவணன்.

நாடகத்திற்கு பின் நிகழ்ந்த கருத்துரையில், திருமாவளவன், ஜக்கையன் பேசிய போது இது யாருக்கான நாடகம், யாருக்கு செல்லவேண்டும் என்று தெளிவாக எடுத்துச்சொன்னார்கள்.

திருமாவளவன் பேசுகையில்,

சாதியத்தை ஒழித்தால் தான், மலம் அள்ளுவதை ஒழிக்க முடியும். காந்தியம் சாதியை அழித்தொழிக்க எப்போதும் உதவாது. அம்பேத்கரியம் தான் சாதியை அழித்தொழிக்க முடியும். காந்தி சுத்தம் செய்யும் தொழிலை புனிதம் என்றார். அது சேவை என்றார். அது தொடர வேண்டும் என்றார். எனவே காந்தியம் சாதியை ஒழிக்க உதவாது, அம்பேத்கரியம் தான் அதைச்செய்ய முடியும் என்றார்.

இயக்குநர் சமுத்திரக்கனி பேசுகையில், ‘

எல்லா சாதியிலயும், சாதி வேணும்னு சொல்றவன விட வேணாம்னு சொல்றவன்தான் அதிகமா இருக்கான். அவன்லாம் அமைதியா இருக்கறதாலதான் சில சில்லரைக சத்தம் அதிகமா கேக்குது. இனி அவங்க எல்லாரும் பொதுவில் வந்து பேசணும். சாதி ஒழியணும்’ என்று குறிப்பிட்டார்.

நடிகர் சத்யராஜ் பேசுகையில்,

‘மனுசனே மனுச மலம் அள்ளுற வேலைய நிறுத்தறதுக்கு ஒரு சிம்பிள் வழி இருக்கு. வாரம் ஒவ்வொரு சாதிக்காரன் மலம் அள்ளணும்னு சொல்லிப் பாருங்க. உடனே டிசைன் டிசைனா மெஷின் கண்டுபுடிச்சு மலத்த அள்ள ஆரம்பிச்சுருவானுங்க’ என்ற பகடியாக பேசினாலும் உண்மை நிலையை சொன்னார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில்,

இந்த நாடகம் பேசிய கருத்துகள் அனைத்தும் உண்மை, கையால் மலம் அள்ளும் இழிவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது. அதற்காக முன் வந்திருக்கும் தம்பி இரஞ்சித்திற்கு பாராட்டுகள். வேறு யாரும் இதைச்செய்ய முன் வரவில்லை. எனவே இரஞ்சித் முன்வந்திருக்கிறார். அவரை பாராட்டவேண்டியது என் கடமை. சின்ன சின்ன விசயங்கள் தவிர மொத்த நாடகமும் மிகச்சிறப்பு என்றார்.

இயக்குநர் நலன்குமாரசாமி பேசுகையில்,

இரஞ்சித் எங்கள் தலைமுறையில் இருப்பது எங்கள் அனைவருக்குமே பெருமையான விசயம் என்றார்.

இறுதியில் பேசிய இயக்குனர் பா.இரஞ்சித்,

‘இத்தனை நாள் எங்க வலியா மட்டுமே இது இருந்துச்சு. அத நீங்களும் உணரணும்னு தான் இதை நாடகமா போட்டோம். எந்த ஒரு விசயமும் கலை மூலமா போகும்போதுதான் ஒரு விஷயம் நிறைய மக்கள சென்றடையும். அதுதான் நம்ம இலக்கு. இது நமக்கான உரிமை, நாமளே அதை எடுத்துக்குவோம் என்று முடித்தார்.

இந்த நிகழ்வில் ஒரு அங்கமாக கையால் மலம் அள்ளுவதற்கு எதிராகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் களப்பணி ஆற்றுகிற, கொண்டை வெள்ளை, அன்புவேந்தன், “கக்கூஸ்” ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி ஆகியோருக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

மேலும் மஞ்சள் வண்ணம், மலத்தையும் அடையாளப்படுத்துவதால், அதற்கு எதிராக, நிரோ பிரபாகர் இசையில், ஜெயராணி எழுதியுள்ள “மஞ்சள் எதிர்ப்புப்பாடல்” (Anti Yellow – Compaign Song) வெளியிடப்பட்டது.

இந்த நாடகம் மேடையேறுவதற்கு முழு காரணமாகவும் இருந்துள்ளார் இயக்குனர் ரஞ்சித். வணிக சினிமாவின் உச்சத்தில் செயல்பட்டாலும், தன் அரசியலில் இருந்து கொஞ்சமும் கலையாமல், கலையை தான் நம்பும் அரசியலுக்கான ஆயுதமாக பயன்படுத்துவதோடு நிற்காமல், அப்படி பயன்படுத்தும் அத்தனை பேருக்கும் மேடையாகவும் இருக்கிறார். 

கையால் மலம் அள்ளும் இழிவைப்பற்றி, அதனால் பாதிக்கப்பட்டவர்களே பேசிக்கொண்டிருக்காமல் பொதுவெளியில் பொது சமூகத்தில் அதை ஒரு பேசு பொருளாக, விவாதப்பொருளாக மாற்ற இந்த நிகழ்வு முதல் புள்ளியை வைத்திருக்கிறது. இன்னும் இதை அடுத்தடுத்த கட்டத்திற்கும் அனைவருக்கும் எடுத்துச்செல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு என்றார், பா.இரஞ்சித். அதுதான் உண்மை. அது தான் இன்றைய தேவையும் கூட.

எல்லா சாதியிலயும் சாதி வேணும்னு சொல்றவனை விட,

வேணாம்னு சொல்றவன் தான் அதிகமா இருக்கான்!

“மஞ்சள்” நாடக நிகழ்வில் இயக்குநர் சமுத்திரக்கனி

 ————————————————————————

பா.இரஞ்சித் எங்கள் தலைமுறையின் பெருமை!

“மஞ்சள்” நாடக நிகழ்வில் இயக்குநர் நலன் குமாரசாமி

 ——————————————————————-

காந்தியத்தால் சாதியை ஒழிக்க முடியாது, அம்பேத்கரியத்தால் தான் சாதியை ஒழிக்க முடியும்.

“மஞ்சள்” நாடக நிகழ்வில் திருமாவளவன்

 ———————————————————————–

இதை நிறுத்தணும்ணா வாரத்துக்கு ஒரு சாதிக்காரனை

இதை செய்யச் சொல்லணும்.

“மஞ்சள்” நாடக நிகழ்வில் நடிகர் சத்யராஜ்

« Older Entries