Category Archives: Agricalture

Celebrities Talk About Kolai Vilaiyum Nilam Docu-Drama

Celebrities Talk About Kolai Vilaiyum Nilam Docu-Drama

விவசாயிகளின் போராட்ட முறைகளில் மாற்றம் வேண்டும் – விஜய்சேதுபதி

விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது மிகப்பெரிய அவலம் – இயக்குநர் சீனு ராமசாமி
 
விஜய்சேதுபதியை அழ வைத்த ஆவணப்படம்
 
இம்ப்ரெஸ் ஃபிலிம்ஸ் சார்பில் கத்தார் பன்னாட்டு நண்பர்கள் மற்றும் எஸ்.கவிதா இணைந்து தயாரித்து, பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்கியிருக்கும் ‘கொலை விளையும் நிலம்’ ஆவணப்பட அறிமுக விழா நேற்று மாலை பிரசாத் லேபில் நடைபெற்றது. 
  
    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதல் நிகழ்ந்துகொண்டிருக்கும் விவசாயிகள் சாவுகளையும் விவசாயத்துக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களையும் விரிவாக பேசியிருக்கும் ‘கொலை விளையும் நிலம்’ ஆவணப்படம் முதலில் திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள் பார்வைக்கு திரையிடப்பட்டது.  நடிகர்கள் விஜய்சேதுபதி, ஜிவி பிரகாஷ், மூத்த இயக்குநர் பாக்யராஜ், இயக்குநர்கள் என்.லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சீனு ராமசாமி, ராஜு முருகன், எழில், சுப்ரமணிய சிவா, ராகவன், தாஸ் ராமசாமி, ’கணிதன்’ சந்தோஷ், ’மெட்ரோ’ ஆனந்த், இசையமைப்பாளர் ஜோஹன் தயாரிப்பாளர்கள் முருகராஜ், சக்திவேலா, தனஞ்செயன், பூச்சிமுருகன் விவசாய தொழிலாளர் சங்க தலைவர் வெ.ஜீவக்குமார், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பிஆர்.பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். 
50 நிமிடங்கள் ஓடிய கொலை விளையும் நிலம் ஆவணப்படம் பார்த்தவர்களை கண்கலங்க வைத்தது.
முதலில் பேசிய சீனு ராமசாமி ‘இந்தக் காட்சிகளுக்கு முன்பாக எனக்கு பேச்சே வரவில்லை. உலக அரங்கில் இந்தியாவுக்கு விவசாய நாடு என்ற அடையாளம் தான் இருக்கிறது. அந்த விவசாயத்துக்கு அடிப்படையே விவசாயிகள் தான். அவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு தற்கொலை செய்யும் நிலைக்கு ஆளாவது பெரிய அவலம். இதனை யாருக்கும் பயப்படாமல் துணிச்சலாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கும் இயக்குநருக்கு என் பாராட்டுகளும் நன்றிகளும். ஏறக்குறைய விவசாயிகளின் எல்லா பிரச்னைகளையும் இந்த ஆவணப்படம் பேசுகிறது. ஒரு விஷயத்தை படிப்பதை விட காட்சிப்படுத்தும்போது அந்த விஷயத்தின் வீரியம் அதிகமாகும். அப்படி காட்சி ஊடகத்தின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறது இந்த கொலை விளையும் நிலம் ஆவணப்படம். இந்த படம் காவிரி பிரச்னையின் அரசியலை விளக்குகிறது. விவசாயத்தை அழித்து விவசாயிகளை விரட்டி விட்டு அங்கே ரசாயனத்தை எடுக்க முயற்சிக்கும் வஞ்சக அரசியலை அழகாக விளக்கியிருக்கிறார் இயக்குநர். இந்த நாட்டில் ஒரு பல்பு தயாரிப்பவனுக்கு கூட தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு தானே விலை நிர்ணயம் செய்ய முடிகிறது. ஆனால் உணவு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளால் தங்கள் விளைபொருளுக்கு விலை நிர்ணயிக்க முடியவில்லை. இடைதரகர்கள் தான் விவசாயி உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்கிறார்கள். நாற்பது ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பிரச்னையை நமக்கு அடுத்த தலைமுறை கையில் எடுத்து தீர்வுக்கு வழி சொல்கிறது. இப்போதாவது நாம் விழித்துக்கொள்ள வேண்டும். 
சுப்ரமணிய சிவா ’நான் ஆரம்ப காலத்தில் உர விற்பனை டீலராக பணிபுரிந்திருக்கிறேன். எனவே விவசாயத்திற்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கடனும் தண்ணீரும் தான் இன்றைக்கு விவசாயிகளின் பெரிய பிரச்னை. இன்று விதைக்கும்போதே தண்ணீர் இருப்பது இல்லை. இந்தியாவில் நடந்த பசுமை புரட்சி தான் மூன்றாம் உலகப்போர். அதில் தான் விவசாயிகள் அழிந்தனர். விவசாயம் சிதைக்கப்பட்டது.இந்த படத்தை பார்க்கும்போது அழுதுகொண்டே இருந்தேன். இறந்தவர்கள் அனைவருமே நமது உறவினர்கள். ஆண்டுதோறும் இழப்பு வருவதால் விவசாயத்தை கைவிட்டு விடலாமா என்று என் பெற்றோரே என்னிடம் கேட்கிறார்கள். இங்கே விவசாயிகளுக்கு யாருடைய ஆதரவும் இல்லை. 
பத்திரிகையாளர்களாகிய நீங்கள் இந்த ஆவணப்படத்தை அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், அமைச்சர்கள், அதிகாரிகளை பார்க்க செய்யுங்கள்.போதும்’
எழில் ‘நானும் டெல்டா பகுதியை சேர்ந்தவன் தான். இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை எங்கள் பகுதியில் பஞ்சம் வரும். ஒவ்வொரு முறை பஞ்சம் வரும்போதும் பேசுவோம். பின்னர் விட்டுவிடுவோம். ஒவ்வொரு பஞ்சத்தின் போதும் நிறைய உயிரிழப்புகளை சந்திக்கிறோம். ஆனால் அரசியல்வாதிகளோ ஊடகங்களோ இதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. இது ஒரு சாபக்கேடாகவே நீடிக்கிறது. டெல்டா பகுதியில் பெரும்பாலும் அறியாமையில் இருக்கும் அதிகம் படிக்காத விவசாயிகள் தான் வாழ்கிறார்கள்.1986 பஞ்சம் வந்தபோது அப்பாவின் மளிகைக்கடையில் மக்கள் அதிகமாக அரிசியைத் தான் கடனாக வாங்குவார்கள். இந்த ஆவணப்படம் அந்த காலகட்டத்தை எனக்கு நினைவுபடுத்தியது. எது எதற்காகவோ போராடுகிறோம். ஆனால் உண்மையில் பெரிய போராட்டம் தேவைப்படுவது இதற்குதான். ஆனால் இதைத் தொட்டால் வேறு ஒரு பிரச்னையை காட்டி திசைதிருப்பிவிடுவார்கள். ஒரு ஆழமான விஷயத்தை அற்புதமாக படைத்திருக்கிறார் இயக்குநர். இதை பொதுமக்களிடம் கொண்டு செல்ல என்ன உதவிகள் தேவைப்பட்டாலும் செய்ய தயாராக இருக்கிறோம். இந்த ஆவணப்படம் மூலம் ஒரு விடிவு வரும் என நம்புகிறேன்’
இணை தயாரிப்பாளர் எஸ்.கவிதா ‘இதே பிரசாத் லேபில் தொடங்கப்பட்டதுதான் இந்த ஆவணப்படம். ராஜீவ் காந்தி சொன்னபோது இது சரியாகுமா? என்று சந்தேகம் வந்தது. ஆனால் அவர் தைரியம் தந்ததோடு உடனே தொடங்கினார். ராஜீவ் சமூகம் தொடர்பான கட்டுரைகள் எழுதியவர். எனவே எனக்கு நம்பிக்கை இருந்தது. ஜிவி பிரகாஷிடம் பாடலுக்கு இசையமைக்க கேட்டோம். அந்த பிசி நேரத்திலும் உடனே ஒப்புக்கொண்டார். அடுத்த மூன்றே நாட்களில் பாடலை பதிவு செய்து அனுப்பினார். சமுத்திரக்கனியிடம் குரல் கொடுக்க சொன்னோம். ராஜீவின் எழுத்தை படித்துவிட்டு அதில் எந்த மாற்றமும் சொல்லாமல் பாராட்டியதோடு குரல் கொடுத்தார். ராஜு முருகன் மாதிரியான ஒரு ஆள் தான் பாடல் எழுத வேண்டும் என்று ராஜீவ் ஆசைப்பட்டார். அவரிடமே கேட்டோம். நல்ல பாடல் ஒன்றை கொடுத்தார். இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு டிசைன் செய்து கொடுத்த மதன் கார்க்கிக்கு என் நன்றிகள். பின்னணி இசையமைத்த ஜோஹனுக்கும் நன்றிகள். இதில் அரசியல் சார்பு இல்லை. முழுக்க முழுக்க மக்களுக்கான படம். பேருக்காக செய்யவில்லை. ஊருக்காக செய்தது. இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். வந்திருந்து நீங்கள் தந்த ஒத்துழைப்புக்கு நன்றிகள். ’
விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர் வெ.ஜீவகுமார் ‘மருத நிலம் மயான நிலமாக மாறிக்கொண்டிருக்கிறது. அதை எடுத்து சொல்லி நம்மை தட்டி எழுப்பும், உசுப்பி விடும் வேலையை செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தி தொடங்கியிருப்பது வெற்று கோஷம் இல்லை. தீர்வுக்கான படி. இந்த படம் திரையிடுவதற்குள்ளாகவே படத்தில் இடம்பெற்றுள்ள சில குடும்பங்களுக்கு உதவிகள் கிடைத்து விட்டன. வேடிக்கை பார்க்கும் ஆட்சியாளர்கள் மத்தியில் துணிச்சலாக படம் எடுத்து காட்டியிருக்கும் படக்குழுவுக்கு என் நன்றிகள். இதனை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு எங்களுக்கும் உங்களுக்கும் இருக்கிறது.
தயாரிப்பாளர் சக்திவேலா ’விவசாயிகள் விவசாயத்தை நேசித்துதான் செய்வார்கள்.தஞ்சையில் இதை தொழிலாக பார்த்ததில்லை. பதிலாக தங்களை இயக்கும் சக்தியாகவே பார்ப்பார்கள். விவசாயிகளின் தேவை எதிர்பார்ப்பு பெரிதாக எதுவும் இல்லை. நிலம் விளைய வேண்டும் என்பது மட்டும் தான் அவர்கள் எதிர்பார்ப்பு. இந்த படத்தை பார்த்தபோது பத்து முறையாவது அழுதிருப்பேன். இந்த ஆவணப்படத்தை எடுக்க முயற்சி எடுத்ததே மிகப்பெரிய புரட்சிக்கான விதை தான். இலங்கை தமிழருக்காக எப்படி தமிழினம் போராடியதோ அப்படி ஒரு போராட்டத்தை இந்த ஆவணப்படம் உருவாக்கும். 
பத்திரிகையாளர் நெல்லை பாரதி ‘சினிமாவைப் பற்றி அத்தனை விஷயங்களும் தெரிந்திருக்கும் ராஜீவ் காந்தி வணிக ரீதியான படத்தை எடுக்க முனையாமல் இப்படி ஒரு நல்ல பதிவை ஆவணப்படமாக்கியதற்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். எந்த சாயம் வெளுத்தாலும் நிவர்த்தி செய்துவிடலாம். ஆனால் விவசாயம் வெளுத்துவிட்டால் நாம் விளங்க மாட்டோம்’
பூச்சி முருகன் ‘லாபத்தை கருதாமல் ஏழை மக்களின் கண்ணீரைத் துடைக்க எடுக்கப்பட்ட படம் இது. நிச்சயம் மக்களின் வரவேற்பை பெறும். அரசு விவசாயிகளின் மரணங்களை இயற்கை மரணங்கள் என்கிறது. ஆனால் விவசாயிகளின் மரணங்கள் அத்தனையும் கொலைகள் என்பதை ஆதாரங்களுடன் இந்த ஆவணப்படத்தில் சொல்லியுள்ளார் ராஜீவ் காந்தி. தயவுசெய்து இதை பத்திரிகைகளாகிய தாங்கள் மக்களிடத்தில் கொண்டுசெல்ல வேண்டும்.  கூடிய விரைவில் ஒரு நல்லது நடக்கும்.’
லிங்குசாமி ‘என் சொந்த ஊர் ராமநாதபுரம். பஞ்சம் பிழைக்கவே தஞ்சாவூர் வந்தோம். ஆனந்தம் படத்தில் ஒரு காட்சியில் வறண்டுபோன பாலையில் இருந்து தஞ்சையின் பசுமையை நோக்கி கேமரா நகர்வது போல காட்சி யோசித்திருந்தேன். ஆனால் இந்த படத்தை பார்க்கும்போது இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லாதது போல் தெரிகிறது. அந்த அளவுக்கு டெல்டா வறண்டுவிட்டது. நான் நீச்சல் கற்றுக்கொண்டதே காவிரி ஆற்றில் தான். நான் படித்தது மூலங்குடி என்னும் ஊரில். கேரளா, லங்கோவி போன்ற பசுமையை அங்கே காணலாம். கனவுலகில் இருப்பதுபோல இருக்கும். ஆனால் இப்போது ஊர்ப்பக்கம் போனால் நான் நம்ப முடியாத அளவுக்கு காய்ந்துபோய் கிடக்கிறது. ஊரில் விவசாயத்துக்கு ஆளே கிடைக்கவில்லை என்கிறார்கள். இந்த விஷயங்களை பார்த்தாலும் கேட்டாலும் படித்தாலும் கூட இதுபோன்ற ஆவணப்படம் அவசியம். காட்சியாக்கும்போது ஒரு விஷயத்தின் உணர்வு அதிகமாகிறது. இன்னும் கொஞ்சம் நீளம் மட்டும் குறைத்திருக்கலாம். இப்படி ஒரு பதிவு செய்த க.ராஜீவ் காந்திக்கும் தயாரித்தவர்களுக்கும் என் பாராட்டுக்கள். இதற்கு பாராட்டுவதா கண்ணீர் விடுவதா என்றே தெரியவில்லை. அனைவர் சார்பாகவும் க.ராஜீவ் காந்திக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’.
பிஆர் பாண்டியன் ‘நவம்பர் 4 ஆம் தேதி தஞ்சை டெல்டாவில் விவசாயி தற்கொலை துவங்கியது. அன்றே அடுத்த மரணம் நிகழ்ந்தது. அன்று தொடங்கிய விவசாயிகளின் மரண ஓலம் இன்னும் அடங்கவில்லை. அந்த மரண ஓலத்தை இளைஞர் ராஜீவ் காந்தி அப்படியே பதிவு செய்திருக்கிறார். நாம் இந்த படத்தில் பார்த்த கேட்ட அத்தனையும் உண்மை. சிறு பிசிறுகூட மாற்றமில்லை.சில குடும்பங்களின் நிலை நம்மை தூங்க விடாமல் செய்துவிடும். இந்த ஆவணப்படம் டெல்டா அல்லாத மாவட்ட மக்களுக்கும் கொண்டுசெல்லப்பட வேண்டும். விவசாயிகள் சார்பாக இவருக்கு நன்றிகள். ராஜீவ் காந்திக்கு எந்த நேரத்திலும் விவசாயிகள் துணை நிற்பார்கள்’
மஞ்சப்பை ராகவன் ‘விவசாயம் என்பது ராணுவம் போன்ற ஒரு சேவை. அவர்கள் அரசு அதிகாரிகளுக்கு நிகராக மதிக்கப்பட வேண்டும். இங்கே விவசாயம் என்ற ஒன்று இருந்தது என்று பாடப்புத்தகத்தில் மட்டும் படிக்கும் நிலைக்கு கொண்டு வந்துவிடாதீர்கள்’
தாஸ் ராமசாமி ‘படத்தை பார்த்தபிறகு என்னால் பேச முடியவில்லை. இந்த படத்துக்கு வரிவிலக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று சொன்னார்கள். அப்படி வரிவிலக்குக்கு சென்றால் சென்சார் செய்யப்பட வேண்டும். சென்சார் செய்யும்போது பல உண்மைகள் மறைக்கப்பட்டு விடும். சென்சார் இல்லாமல் இருப்பதுதான் நல்லது’
பாலாஜி சக்திவேல் ‘இந்த ஆவணப்படம் என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு செய்தியாக படிப்பதைவிட ஆவணப்படமாக பார்க்கும்போது அதிகமாக பாதிப்பு தந்து மனதில் பல கேள்விகளை எழுப்புகிறது. இது அரசியல் படம் இல்லை என்றார்கள். இது அரசியல் படம் தான். மக்கள் அரசியலை பேசிய படம். இயக்குநர் கடைசியாக ஒன்று சொல்கிறார். போராடாமல் எதுவும் நடக்காது. இங்கே விவசாயத்துக்காக விவசாயிகள் மட்டுமல்ல அனைவருமே போராட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். இந்த படம் ஒரு புனைகதையோ, உணர்ச்சிகரமான படமோ அல்ல. அத்தனையும் உண்மை. தாய்மார்கள் விட்ட கண்ணீரும் பிள்ளைகளின் முகங்களும் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த தாக்கம் நிச்சயம் பெரிய ரசாயன மாற்றத்தை உண்டாக்கும். உண்மையை சொல்ல நீளம் பிரச்னை இல்லை. சேர வேண்டிய இடத்தை சேர வேண்டும். அதுதான் முக்கியம். எனக்கு நீளம் ஒரு பிரச்னையாக தோன்றவில்லை. ஜிவி.பிரகாஷ், சமுத்திரக்கனி, ராஜு முருகன் என அனைவருமே இந்த படத்தின் அவசியத்தை உணர்ந்து உண்மையாக தங்கள் பங்களிப்பை தந்திருக்கிறார்கள். இதை பொதுமக்களிடம் கொண்டுசெல்லும் பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கிறது. அதற்கு என்ன உதவிகள் வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறோம்’
ஜிவி.பிரகாஷ் ‘இது மிக முக்கியமான பதிவு. இதில் என்னுடைய பங்களிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.  இப்படி ஒரு முயற்சி எடுத்ததற்காகவே இயக்குநர் க.ராஜீவ் காந்திக்கும் கவிதாவுக்கும் பாராட்டுகள். பத்திரிகையாளர்கள் இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதில் என்னை சேர்த்துக்கொண்டதற்கு நன்றி. வலிமையாகவும் ஆழமாகவும் வரிகளைத் தந்த இயக்குநர் ராஜு முருகனுக்கு நன்றிகள். என் குழுவினரும் இந்த பாடலுக்காக மிகவும் சிரத்தை எடுத்து பணிபுரிந்தனர். பாடலை பதிவு செய்த சூர்யா, பாடகர்கள் ராஜகணபதி, அனிதா ஆகியோருக்கும் என் நன்றிகள். ஒரு நல்ல நோக்கத்துக்கான முயற்சியை பத்திரிகையாளர்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்’
விஜய்சேதுபதி ‘என்னை கண்கலங்க வைத்த ராஜீவ்காந்திக்கு மரியாதை கலந்த வணக்கம். இந்த ஆவணப்படம் என்னை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வீடுகளுக்கே என்னை அழைத்து சென்று உட்கார வைத்தது. அழுதுவிட்டேன். இது யாரால் நடக்கிறது எதனால் நடக்கிறது என்று வெகுநாட்களாகவே பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நாம் போராடுவதும் போராடும் முறைகளும் எட்ட வேண்டிய காதுகளுக்கு பழகி விட்டது என்று நினைக்கிறேன். எதோ தினமும் காலையில் டிபன் சாப்பிடுவது போல வழக்கமான ஒன்றாகி விட்டது என நினைக்கிறேன். இந்த ஆவணப்படம் இன்னும் சிறிது குறைக்கப்பட்டு பெருவாரியான மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். போராடும் முறைகளிலும் புதிய மாற்றங்கள் வேண்டும். ஆட்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நம் நிலைமை மாறவில்லை. போராட்டங்களை முன்னெடுக்கும் தலைவர்கள் இந்த போராட்டங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதை பற்றியும் வேறு போராட்ட வழிமுறைகளையும் சிந்திக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன். மரணம் பிறர் வீட்டுக் கதவைத் தட்டும்போது கண்டுகொள்ளாமல் தான் இருப்பார்கள். ஆனால் அது நம் வீட்டுக் கதவை தட்டும்போது தான் அய்யோ அம்மா என்று அடித்துக்கொண்டு அலறுவார்கள். அதுவரை காத்திருக்காமல் இந்த ஆவணப்படம் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும்’. 
இறுதியாக பேசிய இயக்குநர் க.ராஜீவ் காந்தி ‘நவம்பர் முதல் ஃபிப்ரவரி வரை மட்டுமே 150 விவசாயிகள் பலியானார்கள். அது இன்று 250 ஐத் தாண்டி விட்டது. விவசாயிகள் பலியை சொந்தக் காரணங்களுக்காக இறந்தார்கள் என்று அரசு அறிக்கை அனுப்பியதே நான் இந்த படத்தை எடுக்க முக்கிய காரணம். சொந்தக் காரணங்களுக்காக எப்படி மரணம் நிகழும்? ஒரு இடத்தில் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு அவர்களது தொழில் நசுக்கப்பட்டால் அது நிச்சயம் குடும்பத்தில் எதிரொலிக்கும். பெரும்பாலான குடும்ப பிரச்னைகளுக்கு பொருளாதார சிக்கல் தானே முக்கிய காரணம். அப்படி நிகழும் மரணங்களுக்கு வறட்சி தானே காரணம்? எல்லா பிரச்னைகளுக்குள்ளும் அரசியல் இருக்கிறது. அரசியலுக்குள் எல்லா பிரச்னைகளுமே இருக்கின்றன என்பதை நம்புபவன் நான். ஐந்தரை மணி நேர ஃபுட்டேஜை ஐம்பது நிமிடமாக்கியதில் எனது உயிர் நண்பன் ராஜேஷ் கண்னனுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. அவருக்கு நன்றிகள். இது ஆவணப்படமா இல்லை டாக்கு ட்ராமாவா என்றெல்லாம் விமர்சனங்கள் எழலாம். கவலை இல்லை. நான் விருதை குறி வைத்தோ விழாக்களை குறி வைத்தோ இந்த படத்தை எடுக்கவில்லை. மக்களிடம் இந்த உணர்வை கடத்தி அவர்களை தட்டி எழுப்பவே ஆசைப்பட்டேன். இந்த படம் உருவாகி இந்த அளவுக்கு பேசப்பட காரணமாக இருந்த கவிதா அக்காவுக்கு என் நன்றிகள்’
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய க.நாகப்பன் ‘விவசாயிகள் எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள், எப்படி மறைந்தார்கள், எப்படி வீழ்ந்தார்கள் என்பதெல்லாம் நமக்கு தெரியும். ஆனால் எப்படி எழப்போகிறார்கள் என்பதற்கான விதை தான் இந்த ஆவணப்படம். இந்த விதை விருட்சமாக வேண்டும். அது நம்முடைய கையில் தான் இருக்கிறது. உங்களை எழுப்புவதற்கும் உசுப்புவதற்கும் இந்த ஆவணப்படம் போதும்’
முன்னதாக நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், சினிமா பத்திரிகையாளர் சங்கம், சினிமா பிஆர்.ஓ சங்கம் சார்பில் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் சிறப்பு செய்யப்பட்டது. 

THE REGREEN CHENNAI, an intense movement for reviving green cover of the city was inaugurated.Video Links,,Images & News

THE REGREEN CHENNAI, an intense movement for reviving green cover of the city was inaugurated.Video Links,,Images & News

THE REGREEN CHENNAI, an intense movement for reviving green cover of the city was inaugurated. News

  • About 1 lakh well grown saplings to be planted before the oncoming monsoon
  • Targets at planting 5 lakh saplings over a period of 5 years
  • Over 20 organizations under the leadership of EARTHSMILES Trust to restore the beauty of the urban landscape

THE REGREEN CHENNAI, an intense movement for reviving green cover of the city was inaugurated today (July 7, 2017). THE REGREEN CHENNAI is systematically planned initiative to strengthen and escalate the ongoing many efforts to enhance the green cover of Chennai, specifically in the background of green cover loss caused by cyclone Vardah.

Envisioned by Fr. Jegath Gaspar Raj on behalf of EARTHSMILES Trust, the initiative is to be jointly orchestrated by more than 20 civil society organizations which include Rotary International, CREDAI, Y’s Men International, EXNORA, Federation of Tamil Nadu Farmers Associations, Vanagam, Osai, Madras Social Service Society, Inthinai, Chennai Trekking Club, Good News TV, Brand Avatar, Classic Hymms, Tamil Chamber of Commerce, News Media Association of India, Catalyst PR, YMCA and Confederation of Tamil Agriculture Commerce Industry and Services.

“We will be planting 1 lakh of well grown saplings, not less than 4.5 feet size, before the monsoon this year. However, THE REGREEN CHENNAI project will inspire, encourage, facilitate and support like-minded NGO groups and individuals to plant as many number as possible to reach a target of 5 lakh over a period of 5 years. Only in locations where small dense forest making is possible we will use small saplings and seed balls. We will also be simultaneously making efforts to enhance the suburban Chennai’s green cover by focusing on 100 villages. However, no time limit has been fixed for this component,” said Fr. Jegath Gaspar Raj.

THE REGREEN CHENNAI, an intense movement for reviving green cover of the city was inaugurated.Video Links.

Native species of trees which have endurance to natural disasters and drought, namely Pungai Maram, Poovarasu, Vembu, Naaval, Naagalingam, Panai Maram, Maa Maram, Nelli Maram are to be planted.THE REGREEN CHENNAI is envisioned as people’s participatory movement involving widest possible stake holders. To this effect, plans have been devised to organize 100 seminars in colleges and schools across the city, conduct 3 small marathons and a grand finale marathon and other awareness programmes.

THE REGREEN CHENNAI, an intense movement for reviving green cover of the city was inaugurated. Images 

“In the process we will also be creating massive awareness about urban disaster risks and ways to be prepared for them, creating a pool of technology and information-enabled disaster volunteers in multiple locations, and bring in personal attitude changes that in the long run will critically contribute to urban disaster risk reduction,” he added.“As we upkeep our home, we need to help our neighborhood have healthy environment. Plants and trees are the unique elements of our planet and primary producers of food. To support our healthy and peaceful living on the earth, people need to come together and support initiatives like this,” opined Fr. Jegath Gaspar Raj

Authored article – Away from Patents, Indian PPVFR Act pnarash2325@gmail.comrotects Breeders and Farmers Rights by .S.N Reddy, President, Seedsmen Association

Authored article – Away from Patents, Indian PPVFR Act pnarash2325@gmail. comrotects Breeders and Farmers Rights by .S.N Reddy, President, Seedsmen Association

Away from Patents, Indian PPVFR Act protects Breeders and Farmers Rights

A.S.N Reddy, President, Seedsmen Association, Email:  president@seedsmen.in

India as a sovereign nation has chosen the Sui generis option for protection of Plant varieties in line with its obligation to meet the article 27.3(b) of TRIPS (Trade related intellectual property rights) agreement of WTO (World Trade organization). Balancing the national interest with international trade obligations, India has adopted a unique framework of a special kind, outside the known IPR framework (eg: patents), in the form of Protection of Plant Varieties and Farmers Rights act, 2001 or PPVFRA act.

The preamble to the PPVFR act, 2001 clearly defines the reasons for its existence viz., protection of breeders and farmers rights, accelerated agricultural development and facilitation of growth of seed industry in India. Other countries who developed sui generis systems include Thailand, Malaysia, Countries of African Union, etc.

The PPVFR act, 2001, empowers the Government of India to create a legal and governance framework for protection of plant varieties including transgenic plant varieties and a benefit sharing mechanism to reward plant breeders and farmers. Accordingly the PPVFR authority, an independent institution has been established for this purpose, which registers plant varieties and also fixes benefit or royalty for the breeder and farmers in line with article 26 of the act.

India has consciously chosen to keep plants, varieties and seeds outside of the Patent Act by inserting Section 3(j) in the Indian Patent Act (IPA), 1970 under category of inventions which cannot be patented.

Though both the IPR enactments provide protection to the innovators, there are certain subtle differences between the provisions of these Acts.The differences between the provisions of PPVFR Act and the Patent Act are as follows.

PPVFRA IPA
Covers plant varieties and seeds as per the definition Excludes plant varieties and seeds
Registration of a variety provides an exclusive right to the breeder Patent gives a right to exclude others of its usage
The criteria for registration of a new plant variety are Novelty, Distinctiveness, Uniformity and Stability (NDUS) The criteria of an invention are patentability involve Novelty, Industrial use and Inventive step or Patentability.
Section 30 gives a right to use a registered (protected) variety for developing new varieties which become eligible for registration and thereby exclusive marketing rights.

 

However, the right is subject to an obligation for a benefit sharing with the trait developer under Section 26

No such provisions

 

The provisions of the PPVFRA cannot give monopoly for a GM trait. In countries like USA where transgenic plant varieties are patentable, the trait developer can have a monopoly on the trait and thereby can control all the new varieties developed by other breeders. This is the importance difference between the IPA compared to USA.
The benefit share (trait value) to be determined by the Authority based on the claims made by the trait developer and after hearing the stakeholders like farmers, breeders etc., The trait value can be decided by the trait developer on their own.

Despite above differences, the PPVFR act provides a comprehensive framework by rewarding developers of plant varieties with both IPR protection and also benefits fixed by authority after assessment of claims. All in all, it is a win-win for the farmers and the Indian seed industry.

‘CAFINO The Game Yard’ donates its one month’s revenue to farmers – Images & News

‘CAFINO The Game Yard’ donates its one month’s revenue to farmers – Images & News

விவசாயிகளுக்கு ஒரு மாத வருமானத்தை வழங்கிய ‘கேஃபினோ தி கேம் யார்டு’..!

 ‘கேஃபினோ’ சார்பாக விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கிய நாசர்..!

 “குளம் குட்டைகளை தூர் வாருங்கள்”; விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் விழாவில் நாசர் பேச்சு..!

 நண்பர்களுடன் சேர்ந்து சிறப்பான பொழுதுபோக்கு, விளையாட்டுகளுடன் கூடிய உணவகம் அல்லது காபி ஷாப் போகவேண்டும் என்று விரும்பினால், உங்களது தேர்வு நிச்சயம் சாலிகிராமத்தில் உள்ள ‘கேஃபினோ’வாகத் தான் இருக்கமுடியும். சென்னை சாலிகிராமத்தில் ‘கேஃபினோ’ தி கேம் யார்டு’ என்கிற பொழுதுபோக்கு மையம் கடந்த மாதம் துவங்கப்பட்டது.. இதனை இயக்குநர் மீரா கதிரவன், நடிகர் அபி சரவணன், நடிகை அதிதி ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.

அந்த சமயத்தில் நடிகர் அபிசரவணன் விவசாயிகளுக்கான போராட்டங்களில் முன்னின்று பங்கேற்று வந்தார். அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் மூலமாக சிறுசிறு உதவிகளையும் செய்து கொடுத்து வந்தார். அதனால் இந்த ‘கேஃபினோ’ திறப்பு விழா நிகழ்விலும் விவசாயிகள் பற்றி பேசிய அபிசரவணன், இந்த ‘கேஃபினோ’வின் ஒரு மாத லாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை விவசாயிகளுக்கு அளித்தால் நன்றாக இருக்கும் என ஒரு கோரிக்கையையும் பேச்சுவாக்கில் வைத்துவிட்டு சென்றார்.

ஆனால் ‘கேஃபினோ’ தி கேம் யார்டு’ உரிமையாளர்களோ அபிசரவணனின் இந்த கோரிக்கையை சீரியஸாகவே எடுத்துக்கொண்டார்கள். இந்த ‘கேஃபினோ’ தி கேம் யார்டு’ மையம் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிந்தநிலையில் இந்த ஒரு மாதத்தில் வந்த லாபத்தை மட்டுமல்ல, ஒருமாத மொத்த வருமானமான ரூ.58 ஆயிரத்தையும் டில்லியில் போராடிய விவசாயிகளுக்கு வழங்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.

நேற்று மாலை இந்த தொகையை விவசாயிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த நிகழ்வில் நடிகர்சங்க தலைவர் நாசர் கலந்துகொண்டு ‘கேஃபினோ’ தி கேம் யார்டு’ சார்பாக அந்த உதவித்தொகைக்கான காசோலையை டில்லி போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளின் பிரதிநிதிகளிடம் வழங்கினார்..

விழாவில் பேசிய அபிசரவணன், “நான் பெரிய நடிகர் எல்லாம் இல்லை.. விவசாயிகள் டெல்லியில் போராடியதை ஒரு வீடியோவில் பார்த்துதான் நானும் டெல்லிக்கு கிளம்பினேன்.. நான் நடிகர்சங்கத்தின் உறுப்பினர் என்பதால் இங்கிருந்து கிளம்பியது முதல் அங்கே நடக்கும் நிகழ்வுகளை அவ்வப்போது நடிகர்சங்க செயலாளர் விஷால் சாரிடம் தெரிவித்தவாறே இருந்தேன். விஷால், பிரகாஷ்ராஜ் சார்  அவர்கள் டெல்லி வந்ததும் தான் விவசாயிகளின் போராட்டத்துக்கே மீடியா வெளிச்சம் கிடைத்தது:” என தன்னடக்கத்துடன் கூறினார்.

அடுத்ததாக பேசிய நாசர், “அபிசரவணன் விவசாயிகளுக்கு உதவும் ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டதாலேயே, வரலாற்றில் உனக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.. இது ஒரு நல்ல நிகழ்வு.. பணம் பொருள் கொடுத்து உதவிசெய்ய முடிந்தவர்கள் ஒருபக்கம் செய்யட்டும்.. ஆனால் ஓவ்வொரு கிராமத்திலும் சிறு நகரத்திலும் உள்ள குளம், குட்டைகளை தூர்வாரி, ஏரிகளை சுத்தமாக்கி மழைபெய்யும் சமயங்களில் அவற்றில் நீர் தேங்க அங்கிருக்கும் இளைஞர்களும் தன்னார்வலர்களும் உதவினாலே அது விவசாயிகளுக்கு நாம் செய்யும் பேருதவியாக இருக்கும்.. அவர்களுக்கு தேவையானதும் அவர்களது முக்கிய பிரச்சனையும் நீர் தான்” என பேசினார்..

இந்த நிகழ்வில் நடிகைகள் அதிதி, அதுல்யா, மீரா மிதுன், நடிகர்கள் சௌந்தர்ராஜா, ஹரீஷ், நாசரின் மகன் லுத்புதீன், இசையமைப்பாளர் சாம் டி.ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு உதவும் விதமான இதுபோன்ற விஷயங்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார்கள். விழாவில் கலந்துகொண்ட விவசாய சங்க பிரதிநிதிகள் நாசருக்கும் நடிகர்சங்கத்திற்கும் இந்த தொகையை வழங்கிய கேபினோ மையத்திற்கும் இதற்கான முயற்சியை செய்த அனைவருக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டார்கள்.

விவசாயத்தை காக்க தமிழ் நாட்டிலுள்ள அனைத்து விவசாய சங்கங்களும் ஒன்றினைய வேண்டும் – நெடுவாசல் களத்தில் ஆரி

விவசாயத்தை காக்க தமிழ் நாட்டிலுள்ள அனைத்து விவசாய சங்கங்களும் ஒன்றினைய வேண்டும் – நெடுவாசல் களத்தில் ஆரி

விவசாயத்தை காக்க  தமிழ் நாட்டிலுள்ள அனைத்து விவசாய சங்கங்களும்  ஒன்றினைய வேண்டும் –  நெடுவாசல் களத்தில் ஆரி.
   நெடுவாசல் போராட்ட களத்தில் கலந்து கொண்ட ஆரி நெடுவாசல் மக்களின் கோரிக்கை ஏற்று மீத்தேன் திட்டத்தை அரசு  கைவிட வலியுறுத்தினார்.தமிழ் நாட்டிலுள்ள  விவசாய சங்கங்கள்  அனைத்தும் அவர்களுக்குள்  ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதனை கலைத்து  ஒன்று சேர வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் முன்னிலையில் கோரிக்கை வைத்தார்.  
மேலும் இம்மண்ணையும் விவசாயத்தையும் காக்க மாணவர்கள்  அனைவரும் இனி வரும் காலங்களில்  மருத்துவராக வருவேன் நான் பொறியாளராக வருவேன் நான் கலெக்டராக வருவேன் என்கிற மனப்பான்மையை விடுத்து நாங்கள் விவசாயிகளாகவே தோன்றி  இம்மண்ணில் விதைகளாவோம் என உறுதி கொள்ளவேண்டும் என்றார் அதை ஏற்றுக் கொண்ட பெற்றோர்களும்   எங்கள் பிள்ளைகளை விவசாயிகளாக மட்டுமே ஆக்குவோம் என்றும், மாணவர்களும்  வரும் காலத்தில் விவசாயிகளாகவே வருவோம் என்று  ஆரியின் முன்னிலையில்  உறுதிமொழி எடுத்தனர். 

இதில் நெடுவாசல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த  இளம்விவசாயிகள் (சிறுவர் சிறுமியர்) பச்சை துண்டும் முண்டாசும் அணிந்து விவசாயம் காப்போம் ஹைட்ரோகார்பனை எதிர்ப்போம்  கருத்தை   வலியுறுத்தி உறுதிமொழி ஏற்று   கொண்டனர்.
இதில் மக்களோடும் மாணவர்களோடும் ஆரி கலந்து  கொண்டு தற்போது விவசாயிகளுக்கு  அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆதரவு  அளித்து வருகின்றனர் இந்நேரத்தில்  தமிழ் நாட்டில்  உள்ள அனைத்து  விவசாய சங்கங்களும்  ஒன்றிணைந்து  இந்தியாவில் இருக்கும் அனைத்து விவசாய சங்கங்களை ஒருகிணைத்து போராட வேண்டும் எனவும், அனைத்து   விவசாய கடன்களையும் அரசு ரத்து செய்ய வேண்டும்   என்றும் கோரிக்கை விடுத்தார். தமிழ் இனமே… ! நெடுவாசல் காப்போம்!நம் விவசாயம் மீட்போம்!

“விவசாயம்” இசை வெளியீட்டு விழா

“விவசாயம்” இசை வெளியீட்டு விழா

இந்தியாவின் முதுகெலும்பாக கருதப்படுவது விவசாயம்.  ஆனால் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள் நாடு முழுவதும் நலிந்து வருகின்றனர்.

விவசாயிகள் மற்றும் அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளையும் அவர்கள்  எதிர்கொள்ளும் சிரமங்களையும்  மையமாகக் கொண்ட இசைத்தொகுப்பை முனைவர் ச. பரிவு சக்திவேல் (SO WHAT STUDIOS) தயாரிப்பில் இயக்குநர் எம்.சி.ரிக்கோ இசையமைத்து பாடலை உருவாக்கியிக்கிறார்.

“விவசாயம் என்ன ஆனது ?”  எனத் தொடங்கும் இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியிலும்,   விவசாயிகள் படும் துன்பத்தையும் அதற்கு இளைஞர்கள் ஆக்கபூர்வமாக  முன்னெடுக்க வேண்டியவை குறித்தும் உணர்த்தி  இயக்கியிருந்தார். அதற்கு ஏற்றார் போல காணொளி தொகுப்பும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த இசைத்தொகுப்பின் வெளியீட்டு விழா சென்னையில்  ஞாயிற்றுக்கிழமை  சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில்  முனைவர் பரிவு ச.சக்திவேல்  சிறப்புரையாற்றினார். 

அதில் வாழை தோட்டத்திற்கு தண்ணீர் இல்லாததால் மனமுடைந்த 38 வயதே ஆன விவசாயி தற்கொலை செய்துகொண்டதை 
அவர் பகிர்ந்துகொண்டபோது அவ்விடத்தில் சில நொடிகள் மயான அமைதி நிலவியது.  பின்னர் இறந்த விவசாயிகளுக்கு 30 நொடிகள் 
மவுன அஞ்சலி செலுத்தி நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர்கள் ஏ.எம்.நந்தகுமார், கௌதமன், நடிகர்கள் ஆரி, போஸ்வெங்கட், ஈஸ்டர், அபி சரவணன், சமூக ஆர்வலர்கள் அப்துல் கனி, ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரெஹானா மற்றும்  ராப் பாடகர் எம்.சி.ஜாஸ் மற்றும் தயாரிப்பாளர் ஏ.பி.ஸ்ரீதர், டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கணேசன், மில்கி ராஜ், செல்வராஜ், ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

“விவசாயம் அழிந்தால், அரிசியை டவுன்லோடு செய்யமுடியாது” என்று கெளதமன் பேசினார்.

“உழவுத்தொழில் தான் உலகத்தின் அச்சாணி . உழவன் வீழ்ந்தால் உலகமே வீழ்ந்து போகும்” என்று இயக்குநர் ஏ.எம்.நந்தகுமார் குறிப்பிட்டார்.”விவசாயம் பற்றி ஏதுமறியாத நகர இளைஞர்கள் கூடும் இதுபோன்ற வணிகவளாகத்தில் விவசாயம் சார்ந்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்துவது சிறப்பான ஒன்று ” என்றார் நடிகர் ஈஸ்டர்.”விவசாயி தற்கொலை செய்துகொள்வது அல்லது அழிவது என்பது உணவுச்சங்கிலி அறுபடுவது போன்றது, இது தேசத்திற்கே பெரிய அழிவை ஏற்படுத்தும்” என்று எச்சரித்தார் அப்துல்கனி.”விவசாயம் காக்க இன்றைய இளைஞர்கள் முன்வரவேண்டும் ” என்று கேட்டுக் கொண்டனர் ஆரியும் அபி சரவணனும்.”சாதி, மத, அந்தஸ்து வேறுபாடு இல்லாமல் தமிழர்கள் ஒன்றுபடவேண்டும் ” என்று கேட்டுக் கொண்டார் ஆரி.  

டெல்லி போராட்டக் களத்தில் விவசாயிகளுடன் கலந்து கொண்ட நடிகர் அபி சரவணன்,  அவர்களின் துன்பங்களை எடுத்துரைத்தார்.இந்த நிகழ்ச்சியில், டெல்லி போராட்டத்தில்  கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.விவசாயம் பாடலை விவசாயிகள் வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.பின்னர் பாடல் திரையிடப்பட்டது. இறுதியாக உறுதி மொழியுடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.விவசாயம் என்றால் என்னவென்கிற புரிதல் இல்லாதவர்கள், முனைவர் பரிவு ச. சக்திவேல் தயாரித்திருக்கும் விவசாயம் பாடல் தொகுப்பை இணையதளத்தில் பார்த்து, விவசாயம் பற்றி ஓரளவாவது புரிந்துகொள்ள முடியும் .