Category Archives: Lang-Tamil

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது

திராவிடர் கழக  தூண்களில் ஒருவரான என்.ஆர் சாமி அவர்களின் பேரனும் சாமி திராவிட மணி மற்றும் ஜெயா அம்மையார் ஆகியோரின் மகனுமான பெரியார் சாக்ரடீஸ் அவர்கள் கடந்த 2014 ம் ஆண்டு மே 12ம் நாள்  சாலை விபத்தின் காரணமாக 44ம் வயதில் உயிர் நீத்தார்.

  பெரியார் திடல் மற்றும் விடுதலை நாளேட்டின் மக்கள் தொடர்பாளராகவும் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றிய தோழர் பெரியார் சாக்ரடீஸ் பிற்பாடு “தமிழக அரசு” இதழிலும் செய்தியாளராக  அரசுப் பணி செய்து வந்தார்.

  சீரியபண்பும் சிறந்த நுண்ணறிவும் பெரியார் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில அளப்பரிய நேசமும், மனித நேயத்தின் பால் மாறாத பற்றும் கொண்ட சாக்ரடீஸ் அவர்கள் பெரியார் கொள்கையின் குணக் குன்றாகவே  வாழ்ந்து காட்டியவர்

.

  2011ம் ஆண்டு செம்மொழி மாநாட்டையொட்டி 100 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முன்னாள் அமைச்சர் திரு.பரிதி இளம்வழுதி, ஆய்வாளர் டாக்டர் திரு,நாச்சிமுத்து எழுத்தாளர் திரு.அஜயன்பாலா ஆகியரோடு இதழாளர் திரு.பெரியார்சாக்ரடீஸ் அவர்களும் இணைந்து செம்மொழி சிற்பிகள் எனும் அரிய நூலை உருவாக்கி தந்து தமிழுக்கு தன் அரிய சேவையை செய்துள்ளார்.

  இந்நூலை உருவாக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளும் காட்டிய தீவிரமும் பட்டியலை உருவாக்குவதில் அவர் காட்டிய முனைப்பும் அவரது தமிழ்த் தொண்டுக்கும் தமிழ் அறிவுக்கும் சிறந்த சான்று. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே மக்களுக்கு தமிழ் ஈழம் என பெயர் வைத்து அழகு பார்த்தவர்.

  அப்படிப்பட்டவருடைய எண்ணங்கள் தொடர்ந்து நீடிக்கும் வகையில் அவரோடு நெருங்கி பழகிய டாக்டர் திரு.நாச்சிமுத்து, எழுத்தாளர் திரு. அஜயன் பாலா ஆகியோர் இணைந்து “பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது”  எனும் ஒரு அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அவரது எண்ணமும் உணர்வும் தொடர்ந்து நம்மோடு இயக்கம் கொள்ள  முடிவு செய்தோம்

 அதன்படி வருடா வருடம் ஊடகம், இதழியல், இணையம், பண்பாடு சமூக சேவை மற்றும் கலாச்சார பணிகளில்  அர்ப்பணிப்புடன் சீரிய தொண்டாற்றி வருபவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது கடந்த இரண்டு ஆண்டுகளின்  விழாக்கள் மற்றும் விருது பெற்றவர்களின் விவரங்களுக்கு  www.periyarsocratesvirudhu.blogspot.com க்ளீக் செய்யவும்

இப்படிக்கு .

டாக்டர். நாச்சிமுத்து =எழுத்தாளர்அஜயன் பாலா

  • திவ்யா பாரதி (ஆவணப்பட இயக்குனர்) – சுய குறிப்பு :

விருதுநகர் மாவட்டம்  அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் வயது 24, .தாயார்.ஜெயபாரதி  தந்தை  கர்ணன் இருவரும் பஞ்சுமில் தொழிலாளர்கள் . சிறு வயது  கம்யூனிஸ் இயக்கத்துடனான ஈடுபாடுகொண்டு மக்கள் கலை இலக்கியப் பண்பாட்டு கழகத்தின் மூலம் சமூக மாற்றத்திற்கான களப்பணிகளில் ஈடுபட்டு வருபவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் காட்சி ஊடக துறை மாணவி. தொடர்ந்து மதுரை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர். கல்லூரி காலங்களில் தொடர்ந்து சமூக மாற்றங்களுக்கான போராட்டங்களில் கலந்துகொண்டவர்.

தலித் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான,  போராட்டம், கவுரவ கொலைக்கு  எதிரான மாணவர் போராட்டம்,  தலித் மாணவர் அரசு விடுதிகளை மேம்படுத்தக் கோரி தொடர் போராட்டம், ஆகியவற்றுடன் வினோதா வித்யா  ஆகிய இளம் பெண்கள் மீதான் ஆசிட் வீச்சுகளூக்கு எதிரான போராட்டம், என மதுரையின் மிக முக்கியமான அரசியல் போராட்டங்களில் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது   இதன் காரண்மாக ஆனந்த விகடன் பத்திரிக்கையின் 2013ஆம் ஆண்டின் Top 10 நம்பிக்கை மனிதர்கள் பட்டியலில் முதல் நபராக இடம் பெற்றார்..

தொடர்ந்து, கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களின் அவலங்களை , வலிகளை , வாழ்வியலை பதிய வைக்கும் வகையில் கக்கூஸ் எனும் ஆவணப்படத்தை இயக்கி இந்த ஆண்டு வெளியிட்டு சமூகத்தில் பெரும் அதிர்வை உண்டாக்கியவர். தொடர்ந்து பல்வேறு தடைகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொண்டு வருவதே இந்த ஆவணப்படத்தின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தக்கூடியது.

  1. ஜெயராணி (எழுத்தாளர்) – சுய குறிப்பு

திண்டுக்கல் மாவட்டம் அழகன்பட்டி என்ற கிராமத்தில் மீனா – மயில்வாகனன் தம்பதியருக்கு இரண்டாவது மகளாக 28.04.1978 அன்று பிறந்தார். மதுரை மீனாட்சிக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இளங்கலையும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் முதுகலையும் பயின்றார். கடந்த 15 ஆண்டுகளாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணியாற்றி வரும் ஜெயராணி தமிழின் முன்னணி வெகுஜன இதழ்களான ஆனந்தவிகடன், குமுதம், இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகளில் பணிபுரிந்த போதும் இவரது எழுத்துகள் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் பாடுகளையே பதிவு செய்தன. சாதி எதிர்ப்பு, சிறுபான்மையினர் நலன், பாலின சமத்துவம்,குழந்தைகள் உரிமை சார்ந்து நூற்றுக்கணக்கான செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். 

தலித் முரசு இதழில் எழுதிய கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை மட்டும் ’ஜாதியற்றவளின் குரல்’ என்ற தலைப்பில் தொகுப்பாக கடந்த ஜனவரி 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. புகைப்படக் கலைஞர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர் என  பல்வேறு தளங்களிலும் இயங்கி வருகிறார்.

இயக்குனர் ரஞ்சித் உருவாக்கத்தில் ஜெய்பீம் மன்றம் மூலம் மேடையேற்றப்பட்ட  கையால் மலமள்ளும் தொழிலாளர்களின் அவலங்களைச் சொல்லும்  மஞ்சள் நாடகத்தின் திரைக்கதை பிரதியை உருவாக்கியது  சமூக மாற்றத்திற்கான  இவரது  சீரிய  பங்களிப்பு .

“எல்லா நேரங்களிலும் சத்தம் பற்றிய யோசனை தான்” ; சவுண்ட் இஞ்சீனியர் உதயகுமார்…!

“எல்லா நேரங்களிலும் சத்தம் பற்றிய யோசனை தான்” ; சவுண்ட் இஞ்சீனியர் உதயகுமார்…!

“எல்லா நேரங்களிலும் சத்தம் பற்றிய யோசனை தான்” ; சவுண்ட் இஞ்சீனியர் உதயகுமார்…!“‘பேராண்மை உண்மையிலேயே சவாலான படம் தான்” ; அனுபவம் பகிர்கிறார் சவுண்ட் இஞ்சீனியர் உதயகுமார்  “வெளிநாட்டு விசாரணைக்கும் உள்ளூர் விசாரணைக்கும் வித்தியாசம் இருக்கணும்” ; ரகசியம் உடைக்கும் உதயகுமார்“ரசிகர்கள் சத்தத்துடன் போட்டிபோட்டு வேலைசெய்ய வேண்டியுள்ளது” ; உதயகுமாரின் ‘சவுண்ட்’ அனுபவங்கள்..!  
ஒரு திரைப்படம் உருவாவதில் கண்ணுக்குத் தெரியாத  திறமைசாலிகள் பலரின் உழைப்பும் பங்கும் ஒளிந்திருக்கும். அதில் ஒரு படத்திற்கு பக்கபலமாக இருக்கும் ஒலிப்பதிவு பொறியாளரும் அடக்கம். படத்தில் டைட்டில் கார்டு போடும் போது ஒலிப்பதிவு பொறியாளர் என்கிற பெயர் நம் கவனம் பெறும்முன் சட்டென கடந்து போய்விடுகிற ஒன்றாகவே இன்றும் உள்ளது.
 சவுன்ட் இன்ஜினீயரான ரசூல்பூக்குட்டி ஆஸ்கார் விருது பெற்றபின் தான் ஒலிப்பதிவாளர் என்கிற வர்க்கமே வெளியே தெரிய ஆரம்பித்தது. அதிலும் டி.உதயகுமார் சமீப வருடங்களாக தனது ஒலி வடிவமைப்பு பணியில் பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்று வருகிறார். 
உலக அரங்கில் பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்த ‘விசாரணை’ படத்தில் ஒளிப்பதிவைப் போலவே ஒலி வடிவமைப்பும் பேசப்படுகிறது. சர்வதேசப் படவிழாக்களில் பாராட்டவும் பட்டது. இந்த பெருமைக்கு சொந்தக்காரரான பிரபல சவுண்ட் என்ஜினியர் டி.உதயகுமார் (‘ஃபோர் பிரேம்ஸ்’ உதயகுமார் என்றால் திரையுலக வட்டாரத்தில் ரொம்பவே பிரபலம்) மீண்டும் ஒருமுறை சிறப்பு மகுடம் சூட்டப்பட்டுள்ளார். . 
ஆம்., சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தமிழக அரசு விருதுகளில் ‘பேராண்மை’ படத்துக்காக சிறந்த சவுண்ட் என்ஜினியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் பிரபல சவுண்ட் என்ஜினியர் உதயகுமார். இவர் இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 300 படங்களில் ஒலிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கிறார்.
லேட்டஸ்ட் தொழில்நுட்ப வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் KNACK ஸ்டூடியோவில் ‘விவேகம்’ படத்தின் மிக்சிங்கில் இருந்தவர் விருது அறிவிப்பின் சந்தோஷ தருணங்களையும் தனது துறைகுறித்த தொழிநுட்ப விபரங்களையும் தனது அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்…
சவுண்ட் இஞ்சினீயரா எப்படி இந்த பீல்டுல நுழைந்தீர்கள்…?
95-98ல பிலிம் இன்ஸ்டியூட்ல சவுண்ட் என்ஜினியர் படிச்சேன். அதுக்கப்புறம் 2000 – 2008 வரை ‘ஊமை விழிகள்’ உட்பட ஆபாவாணன் சாரோட எல்லாப் படங்களுக்கும் வேலை செஞ்ச தீபன் சட்டர்ஜிங்கிற லெஜண்ட்கிட்ட உதவியாளராக இருந்தேன். அவர்கிட்ட தொழிலைக் கத்துக்கிட்டதுக்கப்புறம் தனியா வந்து படங்களுக்கு சவுண்ட் என்ஜினியரா வேலை செய்ய ஆரம்பிச்சேன். அப்படி தனியா வந்ததுக்கப்புறம் 3 வது வருஷத்திலே பண்ணின படம் தான் ‘பேராண்மை’. 
பேராண்மை மாதிரி படங்கள், நடிகர் இயக்குனருக்கு மட்டுமல்லாமல் உங்களை மாதிரி தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சவாலா இருந்திருக்குமே..?
உண்மைதான்.. கடந்த பத்து வருஷத்துக்கும் மேல இந்த துறையில் இருக்கேன். பெரிய பட்ஜெட் படங்களும், சின்ன பட்ஜெட் படங்களும்னு நிறைய பண்ணியிருக்கேன். சில படங்கள் ரொம்ப மெனக்கெட வைக்கும். அப்படி மெனக்கெட வைத்த படமான பேராண்மைக்காக எனக்கு விருது கிடைத்ததில் மிக மிக சந்தோசம்.. காடு சம்பந்தப்பட்ட காட்சிகள், ராக்கெட் லாஞ்ச் ஆகிய விஷயங்கள் தான் அந்தப்படத்துல எனக்கு மிகப்பெரிய சவாலா இருந்துச்சு. ஒரு மரத்தை வெட்டுறப்போ கூட அதோட சவுண்ட் எப்படி இருக்கும்னு யூகிச்சுப் பண்ணினேன். கமர்ஷியலோ, யதார்த்தப் படமோ எல்லாவற்றுக்குமான வேலைகள் ஒன்று தான். அதுக்கேத்த மாதிரி வேலை செய்வேன்.
இப்போ இந்தப்படத்துக்காக சிறந்த சவுண்ட் இன்ஜீனியரா எனக்கு தமிழக அரசோட திரைப்பட விருது அறிவிச்சிருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த மாதிரி விருதுகள் தான் எங்களுடைய அடையாளம். அதுதான் எங்களுக்கு சந்தோஷத்தையும், இன்னும் உழைக்கணும்கிற உத்வேகத்தையும் தருது” என்கிறார்.
ஒலி வடிவமைப்புக்காக நீங்க என்ன மாதிரி சிரத்தை எடுத்துக்கொள்கிறீர்கள்..?
வேலை நேரம் தவிர மீதி நேரங்களில் பெரும்பாலும் சத்தத்தைப் பற்றி எப்போதுமே நான் யோசிச்சிக்கிட்டுருப்பேன். உதாரணமா பீச்சுக்குப் போனா அங்க அடிக்கிற காற்றோட சத்தம் எப்படி இருக்கு? எந்த அளவுல அடிக்குதுன்னு மனசுல போட்டு வெச்சுப்பேன். ஒரு ஜெனரேட்டர் சத்தத்தைக் கூட கூர்மையா கவனிப்பேன். எந்த இடத்துல இருந்தாலும் குண்டூசி சத்தமா இருந்தாக் கூட அதை காதுல வாங்கிக் கொள்வேன். அப்பதான் படங்களில் நாம அந்த சத்தங்களை முறையான ஒலி அளவுல கொடுக்க முடியும்..
என்று சொல்லும் உதயகுமார் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் கமர்ஷியல் படங்கள் என்றால் அதற்கான வேலை முறை நிறைய மாறும்.. அதற்கு ஸ்பெஷலாக வேலை செய்ய வேண்டியிருக்கும் என்று கூறி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்..
ஏன் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனம்..?
அதுக்கு காரணம் அவங்களோட ரசிகர்கள் தான்.., ஏன்னா இந்த மாதிரி முன்னணி ஹீரோக்களோட படங்களுக்கு முதல் ரெண்டு மூணு நாளைக்கு ரசிகர்கள் குவிஞ்சிருவாங்க. தியேட்டருக்குள்ள விசில் சத்தம், கூச்சல், கைதட்டல்ன்னு பட்டைய கிளப்புவாங்க. அந்த மாதிரி நேரத்துல திரையில பேசுற டயலாக்குகள் ரசிகர்கள் சத்தத்தை மீறி அவங்களுக்கு கேட்கணும்னு அதுக்காகவே சத்தத்தை அதிகமாக்கி வைப்பேன். ஆனா இந்த களேபரங்கள் குறைய ஆரம்பிச்ச சில நாட்கள்ல தியேட்டர் ஆபரேட்டரே அவங்களுக்கு தேவையான சத்தத்தை பிக்ஸ் பண்ணிக்குவாங்க..
எல்லா இடங்களுக்கும்  ஒரே அளவிலான சப்தம் செட்டாகுமா..?
நிச்சயமா செட்டாகாது.. உதாரணத்துக்கு ‘விசாரணை’ படத்தை திரைப்பட விழாக்களுக்கு திரையிட அனுப்பும்போது அங்க உள்ள ஆடியன்ஸ், அங்க இருக்கிற தியேட்டர்களை மனசுல வச்சு ஒலியோட அளவை குறைச்சிருவேன்.. அதே படம் நமம ஊர் தியேட்டர்ல திரையிடும்போது சத்த அளவை கூட்டித்தான் ஆகணும்..
வெளிநாட்டு படங்களின் ஒலி வடிவமைப்பை தூண்டுதலாக எடுத்துக்கொள்கிறீர்களா..?
இல்லவே இல்லை.. ஆனால் அந்த மாதிரி சீக்வென்ஸ் அவங்க பண்ணிருப்பாங்க.. அதை போட்டுக்காட்டி இதை பேஸ் பண்ணி நாங்க பண்ணிருக்கோம் பாருங்களேன்னு ஒரு சில டைரக்டர்கள் சொல்வாங்க.. அந்த மாதிரி படங்கள்ல எப்படி ட்ரீட் பண்ணியிருக்காங்கன்னு பார்ப்பேன்.. ஆனா நம்ம ஊருக்குன்னு வரும்போது நம்ம ஊரோட தியேட்டர் சிஸ்டத்தை மனசுல வச்சுத்தான் பண்ணியாகணும்.. 
ஒலி வடிவமைப்பை பொறுத்தவரை பெரும்பாலான இயக்குனர்கள் என்ன எதிர்பார்த்து உங்களிடம் வருகிறார்கள்..?
இன்னைக்கும் என்னைத் தேடி வர்றவங்க ”விசாரணை” படத்துல ஹீரோவை போலீஸ் அடிக்கிற அந்த அடி மாதிரி சவுண்ட் கொடுங்களேன்னு கேட்பாங்க” என்று ஆச்சரியப்படுத்துபவர் சமீபத்தில் தான் சைமா விருதையும் கைப்பற்றி வந்திருக்கிறார்.
‘விவேகம்’ படம் பற்றி சொல்லுங்களேன்..?
‘விவேகம்’ படத்துல சவுண்ட்டுக்கான ஸ்கோப் நெறைய இருக்கு. அதுல சவுண்ட் விஷயங்களை கொண்டு வர்றது தான் ரொம்ப முக்கியம். ‘நந்தலாலா’, ‘விசாரணை’க்கு அப்புறம் ‘விவேகம்’ படம் தான் எனக்கு சேலஞ்சிங்கா இருந்துச்சு.
 என்கிற உதயகுமாரின் கைவசம் தற்போது ‘விவேகம்’, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ‘வீரா’, ‘நெருப்புடா’, ‘செம போதை ஆகாத’ என படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியின் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா இன்று (22 07 2017) இக்கல்லூரியின் வளாகத்தில் உள்ள ஸ்ரீலியோ முத்து உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பத்திரிகை சந்திப்பு, புகைப்படங்கள் காணொளி இணைப்புகள் மற்றும் செய்தி.

ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியின் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா இன்று (22 07 2017) இக்கல்லூரியின் வளாகத்தில் உள்ள ஸ்ரீலியோ முத்து உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பத்திரிகை சந்திப்பு, புகைப்படங்கள் காணொளி இணைப்புகள் மற்றும் செய்தி.

ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியின் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா இன்று (22 07 2017) இக்கல்லூரியின் வளாகத்தில் உள்ள ஸ்ரீலியோ முத்து உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பத்திரிகை சந்திப்பு,  செய்தி.

வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மாணவர்களிடம் இருக்கிறது.பட்டமளிப்பு விழாவில் சாய் பிரகாஷ் லியோ முத்து பேச்சு

இன்றைய சூழலில் பணி வாய்ப்புகள் ஏராளமான உள்ளன. அதை தேர்ந்தெடுக்கவேண்டிய பொறுப்பு மாணவர்களாகிய உங்களிடமே வழங்கப்பட்டிருக்கிறது என்று சாய்ராம் கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி திரு சாய் பிரகாஷ் லியோ முத்து அவர்கள் தெரிவித்தார்,சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியின் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா இன்று (22 07 2017) இக்கல்லூரியின் வளாகத்தில் உள்ள ஸ்ரீலியோ முத்து உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பட்டம் பெற வந்த மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்துகொண்டனர்.இவ்விழாவிற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் தலைவர் பேரா. திரு, அனில் தத்தாரேயா சஹஸ்ரபுத்தே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்கலைகழக அளவில் ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு பட்டமளித்து ஊக்கப்படுத்தினார். மேலும் இவ்விழாவில் சாய்ராம் கல்வி குழுமத்தின் சேர்மன் திருமதி கலைசெல்வி லியோமுத்து, சாய் ராம் கல்வி குழுமத்தின் அறங்காவலர் திருமதி சர்மினா ராஜா, கல்லூரி முதல்வர் பேரா திரு C V ஜெயக்குமார், மேலாண்மைத்துறை இயக்குநர் முனைவர் K.மாறன்,வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி துறை டீன் A.ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவை திருமதி கலைசெல்வி லியோ முத்து அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.வரவேற்புரை மற்றும் மாணவர்களின் கடந்தாண்டு விவரங்களை கல்லூரியின் முதல்வர் பேரா திரு ஜெயக்குமார் அவர்கள் உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து திரு சாய் பிரகாஷ் லியோ முத்து அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசியதாவது…இந்த பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்திருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் வணக்கம். வெள்ளம், வர்தா புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டிருந்தும் இந்த பேட்ச் மாணவர்கள் மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறார்கள். தேர்வுகளையும், தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களையும் அண்ணா பல்கலைகழகம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும்

தன்னம்பிக்கையுடன் காத்திருந்த மாணவர்களுக்கும், அவர்களுக்கு பக்கபலமாக இருந்த பெற்றோர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
வாழ்க்கையில் வெற்றிப் பெறுவதைக் காட்டிலும், போராடி வெற்றிப் பெறுவது தனி அடையாளம். அதனால் தான் அண்ணா பல்கலைகழகத்தின் தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் வேறு எந்த கல்லூரியும் பெறாத 96.82 சதவீத தேர்ச்சி பெற்று சாய்ராம் கல்லூரி சாதனைப் படைத்திருக்கிறது.நம்முடைய கல்வி முறை மதிப்பெண் அடிப்படையிலானது. அதையும் கடந்து எந்த மாணவன் தெளிவான சிந்தனையுடன் தொலைநோக்கு பார்வையுடன் பணியாற்றவேண்டும் என்ற சவாலை தனக்குள் உருவாக்கிக் கொண்டு பயணப்படுகிறானோ அவருக்கு தான் வெற்றியும் வாய்ப்பும் கிட்டும்.தற்போது உலகத்திலேயே இளைய தலைமுறையினரை அதிகமாக கொண்டுள்ள தேசமாக இந்தியா திகழ்கிறது. பாரத பிரதமர் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அவருக்கு கிடைக்கும் வரவேற்பு இந்த நாடு பெற்றிருக்கும் வளமிக்க தொழில்நுட்ப அறிவுக்கு கிடைத்த அங்கீகாரம். ஏனெனில் இன்றைய சூழலில் கூகுளில் இருப்பதும் ஒரு இந்தியர். மைக்ரோசாப்டில் இருப்பதும் ஒரு இந்தியர்.
கடந்த காலங்களில் சிலருக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். சிலருக்கு அதிகமாக மறுக்கப்படும். இப்போது வாய்ப்புகள் ஏராளமான உள்ளன. அதை தேர்ந்தெடுக்கவேண்டிய பொறுப்பு உங்களிடமே வழங்கப்பட்டிருக்கிறது. ஐ டி நிறுவனங்களின் தற்போதைய நிலையைப் பற்றி கவலையடையவேண்டாம். உங்களுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது. உளிகளால் சிலைகள் செதுக்கப்படுவது, சிலை சிறப்பாக வரவேண்டும் என்பதற்காகத்தான். பெற்றோர்களின் கனவு நனவாகியிருக்கிறது. உங்களின் கனவை நிறைவேற்ற விடாமுயற்சியுடன் பணியாற்றத் தொடங்குங்கள். அப்துல் கலாம் ஐயா உங்களைப் போன்ற திறமையான சாதிக்கத்துடிக்கும் மாணவர்களைப் பார்த்து தான் கனவு காணுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.இந்த பேட்சில் படித்து வெற்றிப் பெற்ற மாணவர்கள் தங்களைப் பற்றிய சுயவிவரக்குறிப்புகளை ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் எழுதுங்கள்.பகிருங்கள். இன்றைய மாணவர்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கும் விமர்சனங்கள் இருக்கிறதே..கவலையடைய வைக்கிறது. உதாரணத்திற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா எலிமினேட்

ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியின் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா இன்று (22 07 2017) இக்கல்லூரியின் வளாகத்தில் உள்ள ஸ்ரீலியோ முத்து உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பத்திரிகை சந்திப்பு,   காணொளி இணைப்புகள். 

 

ஆவார்களா? இல்லையா..? இவைகள் தான் அதிகமாக இடம்பிடித்திருக்கின்றன. இதன் மூலம் நெடுவாசல் பிரச்சினை, ஜல்லிக்கட்டு பிரச்சனை போன்றவற்றை மறக்கடித்துவிட்டது. ஓவியாவிற்கும் ஒரு பிரச்சினை என்றால் நாடே கொதித்தெழுகிறது. இது தான் இன்றைய சூழலில் பெரிய சிக்கலாக இருக்கிறது. மக்களையும் மாணவர்களையும் பெரிய பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்ப சிறிய விசயம் போதுமானதாக இருக்கிறது. இது மிகப்பெரிய தவறு. திருத்திக் கொள்ளவேண்டும். திருத்திக் கொள்வதற்கு பல சமயங்களில் வாய்ப்பே கிடைக்காது. வாய்ப்பை கொடுக்கமாட்டார்கள். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது என்று முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். உங்களுடைய அடிமைத்தனம் திருடப்படுகிறது. உங்களுடைய நம்பிக்கை திருடப்படுகிறது. உங்களுடைய எதிர்காலம் திருடப்படுகிறது. அதற்கு வழிவகுத்துவிட்டு. பின்னால் மற்றவர்கள் மீது பழி சொல்லாதீர்கள்.’ என்றார்.
இதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய பேரா. அனில் தத்தாரேயா சஹஸ்ரபுத்தே பேசுகையில்,‘இன்றைய உலகிற்கு தொழில்நுட்பத்தின் தொலைநோக்கு திட்டம் அவசியமாக தேவைப்படுகிறது. அதற்கு ஏற்ப இந்தியாவில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் விஞ்ஞான வளர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது இந்தியாவில் பொறியியல் கல்லூரியின் தரம் மிக நன்றாக இருக்கிறது. இதன் காரணமாகவே நம் நாட்டு தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு அயல் நாடுகளில் பணியாற்றுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கிறது. இதன் காரணமாகவே அநத நாடுகளின் முன்னேற்றத்திற்கு காரணமாகவும் இருக்கிறார்கள். இடையே நம்முடைய நாட்டின் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபடுகின்றனர். உலக வணிகம் மற்றும் தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப நமது தொழில் நுட்ப கல்வியின் பயிற்று முறை மற்றும் தொழில் சார்ந்த அனுபவ முறையை புகுத்துவதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் முனைப்புடன் செயல்படுகிறது.
மேலும் பொறியியல் மாணவர்களின் செயல்திறன்களை வளர்ப்பதற்கு மாண்புமிகு பாரதபிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலின் படி பல்வேறு வகைகளில் ஊக்கமளித்து வருகிறோம். பொறியியல் மாணவர்களுக்கு இந்தியாவில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. தாங்கள் ஒரு சிறந்த தொழில் முனைவோர் ஆவதற்கு ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற வியப்பான உத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியின் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா இன்று (22 07 2017) இக்கல்லூரியின் வளாகத்தில் உள்ள ஸ்ரீலியோ முத்து உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பத்திரிகை சந்திப்பு, புகைப்படங்கள்  

இதன் மூலம் இந்தியாவை இன்றைய பொறியியல் வல்லுநர்கள் உலக அரங்கில் இந்தியாவை வல்லரசு நாடாக எடுத்துச் செல்ல முனைப்புடன் செயல்படவேண்டும்’ என்று குறிப்பிட்டார்.திருமதி சர்மிளா ராஜா அவர்கள் பட்டம் பெறும் மாணவர்களை பட்டியலிட்டும், பாராட்டியும் பேசினார்.முனைவர் மாறன் அவர்களின் வாழ்த்துரைக்கு பின்னர், முனைவர் திரு ராஜேந்திர பிரசாத் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
முன்னதாக அண்ணா பல்கலை கழகத்தின் தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்தில் உள்ள வேறு எந்த கல்லூரியும் பெறாத வகையில் 96,82 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், பல்கலை கழக மற்றும் கல்லூரி அளவில் முதலிடம் பெற்ற 236 மாணவர்களுக்கு 75 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 16-ம் ஆண்டு நினைவு நாள் நடிகர் சங்கம் மரியாதை – 21.7.17

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 16-ம் ஆண்டு நினைவு நாள் நடிகர் சங்கம் மரியாதை – 21.7.17 

நடிகர் திலகம் அமரர் சிவாஜி கணேசன் நினைவு அஞ்சலி – நடிகர் சங்கம் அஞ்சலி 21.7.17      

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 16-ம் ஆண்டு நினைவு நாள் நடிகர் சங்கம் மரியாதை… நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது 16- ஆண்டு நினைவு நாள் இன்று நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், நடிகர் சங்கம் பொருளாளர் கார்த்தி,துணை தலைவர் பொன்வண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா,விக்னேஷ், எம். ஏ.பிரகாஷ், காஜாமொய்தீன்,பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

பிரச்சினை தீர்ந்தது ‘பில்லா பாண்டி ‘ மீண்டும் தொடங்கியது. உடனடியாக தீர்த்து வைத்த விஷால் _செல்வமணி : ஆர்.கே.சுரேஷ் மகிழ்ச்சி

பிரச்சினை தீர்ந்தது ‘பில்லா பாண்டி ‘ மீண்டும் தொடங்கியது. உடனடியாக தீர்த்து வைத்த விஷால் _செல்வமணி : ஆர்.கே.சுரேஷ் மகிழ்ச்சி

பில்லா பாண்டி ‘ படப்பிடிப்பின் போது  ஏற்பட்ட பிரச்சினை தீர்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இதில்உடனடியாகத் தலையிட்டு  தீர்த்து வைத்த விஷால் மற்றும் செல்வமணி ஆகியோருக்கு  ஆர்.கே.சுரேஷ் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். 

அதிவேக நாயகனாக வளர்ந்துவரும் ஆர். கே.சுரேஷ் நடித்து வரும் படம் ‘பில்லா பாண்டி ‘. ‘தர்மதுரை’க்குப் பிறகு ஸ்டுடியோ 9 தயாரிப்பில்  அதிக பொருட்செலவில்  உருவாகும் இப்படத்தில்  நாயகன் ஆர்.கே.சுரேஷ் ஒரு அஜீத் ரசிகராக வருகிறார். இதன் படப் பிடிப்பு மதுரைப் பகுதிகளில் தொடங்கி நடை பெற்று வந்தது. ஜல்லிக்கட்டுக்குப்  புகழ் பெற்ற வாடிவாசல் அமைந்துள்ள அலங்காநல்லூரில்  நடைபெற்றுக் கொண்டிருந்தது . சரவண சக்தி இயக்கிக் கொண்டிருந்தார் . ஜீவன் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார். ஆர்.கே சுரேஷ் , இந்துஜா, சாந்தினி  , யோகிபாபு, நமோ நாராயணா , இயக்குநர் மாரிமுத்து ஆகியோர் நடித்துக் கொண்டிருந்தனர்.  தேர்த்திருவிழா நடப்பது போன்ற காட்சி படமாகிக் கொண்டிருந்தது.  துணை நடிகர்கள் கூட்டம், பார்வையாளர்கள் கூட்டம் என் ஜனத்திரள் மிகுந்திருந்தது.
அப்படிப்பட்ட சூழலில் படப்பிடிப்பில் தொழிலாளர் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு தடைபட்டது. எப்போது படப்பிடிப்புக்குத் தடங்கல் ஏற்பட்டாலும் தயாரிப்பாளரே பாதிக்கப்படுவார் என்பது சினிமாவின் சோகம்.

இந்தப் பிரச்சினை குறித்து படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமான ஆர்.கே. சுரேஷ் உடனடியாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் , மற்றும் திரைப்படத் தொழிலாளர் சங்கமான பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோரிடம் முறையிட்டு பிரச்சினையை எடுத்துச் சென்றார். அவர்கள் இருவரும் சம்பந்தப்பட்டவர்களை அழைத்தனர் . பேச்சு வார்த்தை நடத்தினர். பிரச்சினை சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்டது.

இரண்டு நாட்கள் தடைபட்டு நிறுத்தப் பட்டிருந்த பில்லா பாண்டி படப்பிடிப்பு இன்று மீண்டும் உற்சாகத்துடன் தொடங்கியது .

இப்பிரச்சினையில்  உடனடியாகச் செயல்பட்டு தீர்த்து வைத்த தயாரிப்பாளர்  சங்கத்  தலைவர்  விஷால் மற்றும் பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோருக்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிப்பதாக தயாரிப்பாளர் ஸ்டுடியோ 9 சுரேஷ் கூறியுள்ளார்.

பாலு மகேந்திராவின் உதவியாளர் இயக்கியுள்ள ‘புயலாய் கிளம்பி வர்றோம் ‘ ஜூலை 28 -ல் வெளிவருகிறது.

பாலு மகேந்திராவின் உதவியாளர் இயக்கியுள்ள ‘புயலாய் கிளம்பி வர்றோம் ‘ ஜூலை 28 -ல் வெளிவருகிறது.

பாலு மகேந்திராவின் உதவியாளர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள ‘புயலாய் கிளம்பி வர்றோம்’ படம் ஜூலை 28 -ல் வெளிவருகிறது.

ஜெயஸ்ரீ மூவி மேக்கர்ஸ் வி .ஹரிஹரன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள படம் ‘ புயலாய் கிளம்பி   வர்றோம் ‘. இது மதுரை மண் சார்ந்த கதை. படித்து விட்டு தானுண்டு தன் வேலையுண்டு என்று  இருப்பவர்கள் கோழைகள் அல்ல .அவர்களைச் சீண்டி விட்டால் தாங்க முடியாது என்று சொல்கிற கதை .நாயகனாக தமன் , நாயகியாக மதுஸ்ரீ நடித்துள்ளனர். தவிர இயக்குநர்  ஆர்.என்.ஆர். மனோகர் , சிங்கம்புலி , திருமுருகன் , அழகன் தமிழ்மணி , ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் கதையை  எழுதி இயக்கியுள்ள ஜி.ஆறுமுகம்  பாலு மகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். சில குறும்படங்கள் இயக்கிய அனுபவமும் கொண்டவர்

.இயக்குநரிடம்  படம் பற்றிக் கேட்ட போது ,

” இது படித்த இளைஞர்களின் கோபத்தின் முன் எப்படிப் பட்ட பலசாலியும் வீழ்ந்து விடுவான் என்று சொல்கிற கதை.இது மதுரைப் பகுதியில்  நடக்கும் கதை என்றாலும் மதுரை , சென்னை, கொடைக்கானல் , பாண்டிச்சேரி போன்ற பல  ஊர்களில் படப்பிடிப்பு நடந் துள்ளது. பல நாட்கள் இரவில் படப்பிடிப்பு நடத்தினோம். 
31 நாட்களில் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்தோம்.” என்றவர் தயாரிப்பாளரை நன்றியுடன் நினைவு கூர்கிறார். 
” தயாரிப்பாளருக்கு இதுதான் முதல் படம். நானும் அறிமுக இயக்குநர் தான் . இருந்தாலும் , எனக்கு முழு சுதந்திரம்  கொடுத்தார். படப்பிடிப்பு நடக்கும்  இடத்துக்கு ஒரு நாளும் அவர்  வந்ததில்லை. படத்தில் வேலை பார்த்தவர்களுக்கே நான் தான் தினமும் பணப்பட்டுவாடா செய்தேன் . அந்த அளவுக்கு என்னிடம் நம்பிக்கை வைத்து பொறுப்பு கொடுத்தவர் அவர் . ” என்கிறார் .

இப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் விஜய்.வி. , இசையமைத்திருப்பவர் சார்லஸ் தனா இருவருக்கும் இதுவே முதல் படம் . எடிட்டிங் – எஸ்.சதிஷ் குமார் , வசனம் _ கே.நந்தகுமார் ,கலை இயக்கம் – முத்துவேல் , நடனம் -பாலாஜி ,தினா , ராதிகா. ஸ்டண்ட் – ஆக்ஷன் பிரகாஷ் , தயாரிப்பு நிர்வாகம் -ஒய்.எஸ்.டி. சேகர்.
படத்துக்குத் தணிக்கை முடிந்து யூ சான்றிதழ் கிடைத்து இருக்கிறது.

‘ புயலாய்  கிளம்பி வர்றோம் ‘படம் ஜூலை 28-ல் வெளியாகிறது.

Oviya Movie Images & News

Oviya Movie Images & News

குழந்தைகளை கவனிக்காத பெற்றோருக்கு ‘பாடம்’ சொல்லும் ஓவியா..!

பேமிலி திரில்லராக உருவாகும் ஓவியா..! புரிதல் இல்லாத பெற்றோரை திருத்த வரும் ‘ஓவியா’..!

இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் தான் ‘ஓவியா’. புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார்.

காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ஓவியா’வாக நடிக்கிறார் 

இன்றைய எந்திரமயமான, அதேசமயம் வேகமாகிப்போன வாழ்க்கை சூழலில் பெரும்பாலான கணவன்-மனைவியர்க்கிடையே சரியான புரிதல் இல்லாத நிலைதான் இருக்கிறது. அதுவே இவர்கள் பெற்றோர்களாக மாறியபின்பும் இந்த புரிதல் இல்லாமை தொடர்வதால், பாதிக்கப்படுவது பெரும்பாலும் அவர்களது குழந்தைகள் தான்.

அப்படி ஒரு தம்பதியின் குழந்தை ஒன்று, அதன் பெற்றோர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு, சண்டையினால் சரியான கவனிப்பின்மை காரணமாக இறந்து பேயாக மாறுகிறது.. அதன்பின் தனது இந்த நிலைமைக்கு காரணமான தனது பெற்றோருக்கு அது பாடம் புகட்டுகிறதா, இல்லை பாவம் என விட்டுவிடுகிறதா என்பது தான் படத்தின் கதை.

மலையும் மலைசார்ந்த இடமும் தான் கதைக்களம் என்பதால் இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்படிப்பு நடைபெற்று வருகிறது.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

நடிகர்கள்:

காண்டீபன், மிதுனா, சுவிக்சா ஜெயரத்தினம் மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு: நிஷாந்தன் & விபின் சந்திரன்..இசை: பத்மஜன்..டனம்: அனீஸ் ரஹ்மான்  பாடல்கள் : அண்ணாமலை, முருகன் மந்திரம் & M.F.ஜான்சன்..பாடியவர்கள் : வைக்கம் விஜயலக்ஷ்மி,  ஆனந்த் அரவிந்தக்ஷன், ஜாஸின் & பூர்ணிமா இயக்கம்: கஜன் சண்முகநாதன் ..தயாரிப்பு: காண்டீபன் ரங்கநாதன் (இமாலயன் என்டர் டெயின்மென்ட்)

ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளையின் 38வது வருட விழா செய்தி மற்றும் படங்கள்

ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளையின் 38வது வருட விழா செய்தி மற்றும் படங்கள்

ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளையின் 38வது வருட விழா இன்று நடைபெற்றது இதில் நடிகர் , ஓவியர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
​​
நடிகர் சிவக்குமார் பேசியது..
​சென்ற ஆண்டு சிவக்குமார் 75 என்ற நிகழ்ச்சி கொண்டாடும் போது, ஒவ்வொரு ஆண்டும் ஓவியக் கலையில் சேவை செய்த ஒருவரைத் தேர்வு செய்து மரியாதை செய்ய வேண்டும் என முடிவெடுத்தோம். அந்த அடிப்படையிலே முதலாவதாக தேர்வு செய்யப்பட்டு மரியாதை செய்யப்படுகிறவர் அம்புலிமாமா பத்திரிகையிலே 55 ஆண்டுகள் வரைந்த ஷங்கர் ஐயா. அவருக்கு வயது 92. 60 ஆண்டுகளாக வரைந்து வருகிறார். தற்போதும் வரைய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கிறார். 
அகரம் என்ற அற்புதமான அமைப்பை கட்டுக்கோப்பாக நடத்திக் கொண்டிருக்கின்ற என் குழந்தைகள், தா.செ.ஞானவேல், ஜெயஸ்ரீ, ஆர்வலர்கள் மற்றும் இவர்களுக்கு எல்லாம் வழிக்காட்டியாக இருக்கின்ற கல்யாண் ஐயா உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம். ஒவ்வொரு சந்திப்பிலுமே என்னைப் பற்றியே பேசுவதாக உங்களுக்கு சந்தேகம் வரலாம். நீங்கள் 100 மடங்கு பெரிதாக வரலாம் என்று தான் ஒவ்வொரு முறையும் என்னை உதாரணமாக சொல்கிறேன். எனக்கு முன்னேடியாக இருந்த சரித்திரம் படைத்த கலைஞர்கள் எல்லாம் 70 வயதில் காலமாகிவிட்டார்கள். அவர்கள் எல்லாம் உலகப்புகழ் பெற்றவர்கள். 
மகாபாரதம் படித்து பேச ஆரம்பித்த போது, எனக்கு 74 வயது முடிந்துவிட்டது. அந்த வயதில் அப்பா – அம்மா பெயரே சிலருக்கு மறந்து போகும். அவ்வாறு பேசுவதற்கு முன்பு சுமார் நான்கரை ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அந்நிகழ்வை நடத்தினேன். அதற்கு முன்பு கம்பராமாயணத்தை ஒர் ஆண்டிலே ஆய்வு செய்தேன். இதனை சாதனையாக நினைக்க வேண்டாம். உலகளவிலே கம்பராமாயணம் என்ற மாபெரும் காவியத்தை பற்றி முழுமையாக யாருமே பேசியதில்லை என்று சொல்கிறார்கள். 2 மணி 20 நிமிடத்திலே 100 பாடல் வழியாக பேசினேன். பேப்பரில் எழுதி வைக்காமல், ஒரு சொட்டு தண்ணீர் குடிக்காமல் பேசியது யாருமில்லை என்றார்கள். 
கம்பராமாயணத்தை விட மகாபாரதம் என்பது 4 மடங்கு பெரிய காவியம். அதனை 4 வருடம் ஆராய்ச்சி செய்து, அதே 2 மணி 20 நிமிடத்தில் பேசி 10 ஆயிரம் டிவிடி போட்டு உலகம் முழுவதும் போய் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன அடிப்படை என்று பார்த்தால் உடம்பைப் பேண வேண்டும். முகம், கை, கால்கள் தான் உங்களது அடையாளம். இதை தவிர்த்து பார்த்தால் ஒன்றுமே இல்லை ஜீரோ தான். 
ஷங்கர் ஐயாவுக்கு 92 வயதாகிறது. அதற்கு காரணம் தன்னுடைய உடம்பை அந்தளவுக்கு பேணியுள்ளார். இதுவரை அவருடைய வாழ்க்கையில் காப்பியைத் தொட்டதே இல்லை என்றார். முதலில் உடம்பைப் பேணுவதை பழகிக் கொள்ள வேண்டும். மாதத்தில் கண்டிப்பாக 20 நாட்களாவது வாக்கிங் செல்வேன். 4 மணிக்கு காலையில் எழுந்திருப்பேன். 4:15 – 5 மணி வரை யோகா செய்வேன். 5:10 போட் கிளப் சென்று ஒரு மணி நேரம் வாக்கிங் செல்வேன். அதற்குப் பிறகு வீட்டுக்கு வந்து பேரக் குழந்தைகளை பள்ளிக்குக் கூட்டிக் கொண்டு செல்லும் வேலையைச் செய்துவிட்டு, படிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறேன். கடைசி மூச்சு வரைக்கும் நீங்கள் ஏதாவது சாதிக்க வேண்டுமென்றால், உடம்பு ஆரோக்கியத்தை காக்க வேண்டும். 
இந்த உலகத்திற்கு பிறந்ததிற்கு அடையாளமாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால் லட்சிய நோக்கம் வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும், கல்வி வேண்டும், ஒழுக்கம் வேண்டும். இதனை கடைப்பிடித்தால் உங்களை யாராலும் தடுக்க முடியாது. கிராமத்தில் பிறந்துவிட்டோம், அப்பா – அம்மாவுக்கு படிப்பில்லை என்று வருத்தப்படலாம். அப்படி எந்த வருத்தமும் படத் தேவையில்லை. உங்களை எல்லாம் விட மிகவும் மோசமான சூழ்நிலையில் பிறந்தவன். பிறந்ததிலிருந்து எங்கப்பாவின் முகத்தைப் பார்த்ததே இல்லை. அப்பா என்று சினிமாவில் மட்டுமே வசனம் பேசியுள்ளேனே தவிர, அப்பா என்று யாரையும் அழைத்ததில்லை. 32 வயதிலே விதவையான அம்மா காட்டிலே பாடுபட்டு தான் என்னை படிக்க வைத்தார். எங்களது ஊரில் குடிக்கத் தண்ணீர் கிடையாது. சைக்கிளில் 3 கிமீ சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டும். வாரத்துக்கு ஒரு முறை தான் குளிக்க முடியும். அந்த தண்ணீரை வைத்து வாய் கொப்பளிக்க எல்லாம் முடியாது. 
பெண்கள் டாய்லெட்டுக்கு செல்ல சூரியன் உதிக்கும் முன்னும், அஸ்தமனத்துக்குப் பின்னும் செல்லும் காலம் இன்னும் கிராமப்புறங்களிலே இருக்கிறது. சிம்னி விளக்கு வெளிச்சத்தில் தான் எஸ்.எஸ்.எல்.சி வரைக்கும் படித்தேன். பள்ளிக்கூடத்துக்கு எங்களது ஊரிலிருந்து 1 கி.மீ செல்ல வேண்டும். நான் படித்த பள்ளிக்கூடத்தில் ஒரு குரூப் போட்டோ எடுக்க முடியவில்லை. அதனாலேயே அப்பள்ளிக்கூடத்துக்குப் போவதை தவிர்த்துவந்தேன். 50 ஆண்டுகள் கழித்து 2007-ம் ஆண்டு அப்பள்ளிக்கு சென்று, முன்னாள் மாணவர்கள் அதனை தத்தெடுத்துக் கொள்கிறோம் என்று கூறினோம். 
ஏழையாக பிறந்துவிட்டோம், கிராமத்தில் பிறந்துவிட்டோம், அப்பா – அம்மா படிக்கவில்லை என்பது பாவம் கிடையாது. அது வரம். அதற்கு உதாரணம் நான். என்னை விட 100 மடங்கு பெரிய ஆட்களாக நீங்கள் வரலாம். 
பல்வேறு கஷ்டங்கள் கடந்து நடிகனானேன். 192 படங்கள் நடித்தேன். 40 வருடங்கள் நடித்தது போதும் என முடிவு செய்து, பேச ஆரம்பிக்கிறேன். இந்த சாதனை எல்லாம் ஒன்றுமே இல்லை. 100 சதவீதம் நீங்களும் இதைப் போன்று சாதிக்கலாம். சூர்யா – கார்த்தி இருவருமே இந்த அறக்கட்டளை நல்லபடியாக நடத்துவதற்காக தான் இவ்வளவு தூரம் பயணப்பட்டு வந்துள்ளேன். உங்களுக்கு எல்லாம் கடவுளே கல்வியும், ஒழுக்கமும் தான். அதைத் தொடர்ந்து கடைபிடியுங்கள்.​

​நடிகர் கார்த்தி பேசியது​
​பொதுவாக அகரம் மாணவர்கள் அனைவருமே அரசு பள்ளிகளில் இருந்து வந்தவர்கள். தமிழ் மொழியில் மிகவும் வலிமையானவர்களாக இருக்கிறார்கள். அனைவருமே கவிதை எழுதுகிறார்கள். முதலில் கவிதையை புரிந்து கொள்வதற்கே ஒரு அறிவு வேண்டும். கவிதை எழுதுவதற்கு அதை விட அறிவு வேண்டும். அகரம் மாணவர்கள் அனைவருமே அழகாக கவிதை எழுதுகிறார்கள். அது எப்படி என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களுடைய சிந்தனையே ரொம்ப ஆழமாக இருப்பதாக நம்புகிறேன். 
சிவக்குமார் கல்வி அறக்கட்டளைக்கு இது 38-வது ஆண்டு. அப்பா ஒரு சிறு கிராமத்திலிருந்து வந்தவர். 14 வயது வரைக்கும் 14 படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறார். அவருடைய வசதி அவ்வளவு தான். அரிசி சாதம் சாப்பிடுவதே பெரிய விஷயம். படிக்கிற பையன் என்பதால் மூன்று வேளையும் அப்பாவை சாப்பிட வைத்துவிடுவார்களாம். 
ஓவியத்திலிருந்து சினிமாவுக்குள் வந்து, 14 ஆண்டுகளில் 100 படங்கள் நடித்து முடித்துவிட்டார். நான் 10 ஆண்டுகளில் 15 படங்கள் மட்டுமே நடித்துள்ளேன். ஒருவர் வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்றால் சுயம்பாக தனியாக வர இயலாது. அவர்களைச் சுற்றியுள்ள பலர் ஊன்றுகோளாக இருந்திருப்பார்கள். 60 ஆண்டுக்கு முன்பு அப்பா “நான் பொம்மை படம்” படிக்கப் போகிறேன் என்ற போது யாருமே உதவ முன்வரவில்லை. அப்போது அப்பா “யாராவது எனக்கு பண உதவி அளித்தால், நான் உங்களுக்கு அடிமை என சங்கிலியில் எழுதி வைத்துக் கொள்கிறேன்” என கடிதம் எழுதி வைத்திருக்கிறார். அப்பாவின் மாமா தான், அவரை சென்னைக்கு அழைத்து வந்து படிக்க வைத்திருக்கிறார். 
ஒரு மாதத்துக்கு 85 ரூபாய். அதற்குள் படிக்க வேண்டும், வாடகை கட்ட வேண்டும், சாப்பிட வேண்டும் என அனைத்து செய்ய வேண்டும். 6 ஆண்டுகளுக்குள் 3000 ரூபாயில் படித்து முடித்து, 100 ஓவியங்களுக்கு மேல் வரைந்து முடித்துவிட்டார். எனது வாழ்க்கையில் சிறந்த 6 ஆண்டுகள் என அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். அப்படியிருந்தவர் எத்தனையோ இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பார்த்து, நடிக்க வைத்ததால் இந்தளவுக்கு வளர்ந்து நிற்கிறார். அவர்களுக்கு திருப்பி என்ன செய்ய முடியும். 
நம்மை உருவாக்கியவர்களுக்கு கல்வியை கொடையாக கொடுப்பதே சரியாக இருக்கும் என அப்பா தீர்மானித்தார். அதனால் ப்ளஸ் 2 மாணவர்கள் பரிசுத்தொகை கொடுக்க ஆரம்பித்தார். அப்பாவின் 100 வது படம் வெளியாகி 100 நாட்கள் ஓடிய விழாவில் எம்.ஜி.ஆர்  அவர்கள் முதல்வராக இருந்த போது சிவக்குமார் கல்வி அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது. 1980-ல் முதல் விழா நடைபெற்றது. அப்போது மாநிலத்தில் முதல் மாணவராக வந்தவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக 25 வருடங்கள் நடத்தி, 25 ஆண்டு விழாவில் தலா 10,000 ரூபாய் விதம் கல்வி முறையில் வழங்கப்பட்டது. 
2004-ம் ஆண்டில் அகரம் பொறுப்பெடுத்து, 14 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மட்டுமன்றி, கஷ்டப்படுகிற மாணவர்களுக்கும் உதவிகள் செய்து வருகிறோம். கல்வி என்பது மதிப்பெண் வாங்குவதில் மட்டுமே இல்லை என்று, அறிவுக்கூர்மை தேவை, உணர்ச்சி பலம் தேவை. தற்போது விளையாட்டில் முதல் ஆளாக வந்தவர்கள், கண்டுபிடிப்புகளில் பெரிய ஆளாக வந்தவர்கள் என தேர்ந்தெடுத்து இந்தாண்டு பரிசுகள் கொடுத்திருக்கிறோம். ஆகையால் இந்த விழா ரொம்ப நிறைவாக இருக்கிறது. 
அப்பாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, வருடந்தோறும் ஓவியக்கலையில் பங்காற்றியவர்களை கெளரவிக்க விரும்பினோம். அந்தவகையில் அம்புலிமாமா ஷங்கர் ஐயாவை கெளரவப்படுத்தியதில் சந்தோஷம். ஓவியத்துக்கு நாம் எப்போது மதிப்பளிக்கப் போகிறோம், எப்போதுமே வருமானத்தை நோக்கியே ஓடப்போகிறோமா? ஓவியக் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இந்தாண்டு முதல் தொடங்கியுள்ளோம்.
அகரம் ஆரம்பித்ததில் இருந்து பள்ளிக் கட்டணம் யாராவது கட்ட வேண்டும் என உதவிக் கேட்டால் உடனே கொடுக்கும் அளவுக்கு தூண்டுகோளாக இருக்கிறது. பிரபலங்கள் என்பதால் வெளியே தெரிகிறது. ஆனால், எங்களுக்கு தூண்டுகோளாக இருந்தவர் வாழை என்று சொல்லலாம். ஞானவேல் தான் அதனை முதலில் கொண்டு வந்தார். நிறைய பணமிருந்தால் மட்டுமே உதவி செய்ய முடியும் என்பது கிடையாது. நம்மால் மதிப்பிட முடியாதது நமது நேரம். அந்த நேரத்தைக் கொடுத்தால் பல இளைஞர்களை மேலே கொண்டு வர முடியும் என்பது வாழை நிரூபித்தது. அதனை பெரிதாக செய்ய முடியும் என்று ஆரம்பிக்கப்பட்டது தான் அகரம்.
அகரத்துக்கு தன்னார்வலர்கள் தான் மிகப்பெரிய சொத்து. அந்த தன்னார்வலர்கள் சனி மற்றும் ஞாயிறு அகரம் அலுவலகம் வந்து மாணவர்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கிறார்கள். மாணவர்களோடு தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசி அவர்களை ஊக்குவிக்கிறார்கள். கிட்டதட்ட 250 மாணவர்கள் அகரத்திலிருந்து வெளியே வந்து வேலையில் சேர்ந்துவிட்டார்கள். அது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம். 
அகரத்தின் தேவை என்பது பெரிதாக இருக்கிறது. தன்னார்வலர்கள் வந்து உதவுகிறார்கள். பொருளாதாரம் என்பது மிகப்பெரிய தேவையாக இருக்கிறது. ஏனென்றால் அனைத்து குழந்தைகளையும் ஹாஸ்டலில் தங்க வைக்கிறோம். நிறைய கல்வி நிறுவங்கள் எங்களுக்கு இலவசமாக சீட்கள் கொடுத்துவிடுகிறார்கள். அது சாதாரணம் விஷயம் கிடையாது. ஆனால், ஹாஸ்டல் என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஆகையால் அகரமே ஹாஸ்டல் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. கிராமத்திலிருந்து வெளியே வந்து படித்தால் தான் நிறைய விஷயங்கள் புதிதாக இருக்கும் என வெளியே படிக்க வைக்கிறோம். எங்களுக்கு பொருளாதார உதவி புரியும் அனைவருக்குமே நன்றி.
மாதம் 300 ரூபாய் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து சுமார் 2000 பேர் அனுப்ப தொடங்கியுள்ளார்கள். இப்படி பல பேருடைய கை சேர்த்து தான் அகரம் நடைபெற்று வருகிறது. 
மேலே இருப்பவர்கள் கீழே சென்றால் மறுபடியும் மேலே வருவதற்கு பலம் வேண்டும். ஆனால், கீழே இருப்பவர்கள் மேலே வருவதற்கு பெரும் பலம் தேவை. அந்த பலம் உங்களிடமே தான் இருக்கிறது. நான் இதில் சாதிப்பேன் என நினைத்தால் கண்டிப்பாக முடியும். சாதிக்க வேண்டும் என்று நம்புங்கள். நமக்கு அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, செல்வம் இருக்கிறது என்றால் அது அடுத்தவர்களுக்கு கொடுப்பதற்கு தான். அதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.​ இவ்விழாவில் மிகவும் ஏழை எளிய  மாணவர்கள் 22 பேருக்கு தலா 10000 ரூபாய் வழங்கப்பட்டது. அது போக இந்த வருடம் 5​00​  மாணவர்களை படிக்கவைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

Seemathanni Movie Pooja Images and News

Seemathanni Movie Pooja Images and News

கிரேட் எம்பரர் புரொடக்‌ஷன்ஸ் சி.பிரேம்குமார் தயாரிப்பில் விதார்த் விஜய் வசந்த் நடிக்கும்
“சீமத்தண்ணி”
கிரேட் எம்பரர் புரொடக்‌ஷன்ஸ் எனும் புதிய படநிறுவனம் சார்பில் சி.பிரேம்குமார் மிகுந்த பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் சீமத்தண்ணி…
பல முன்னனி இயக்குனர்களிடம் 25க்கும் மேற்ப்பட்ட படங்களில் துணை,இணை இயக்குனராக பணியாற்றிய விஜய்மோகன்..இப்படத்தின் கதை,திரைக்கதை,வசனம் எழுதி.இயக்குனராக அறிமுகமாகிறார்..
விதார்த்,விஜய் வசந்த கதாநாயகரகளாக நடிக்க,கதாநாயகிகளாக சாந்தினி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கின்றனர்..இவர்களுடன் யோகிபாபு,ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்..ரேஷன் கடையே தாய் வீடாக நினைத்து வாழும் 2 அநாதை நண்பர்கள் ,10க்கும் மேற்ப்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் “தங்கமாரி” எனும் கதாபாத்திரத்திற்க்கும் நடக்கும் வாழ்க்கை பதிவுகளை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் யதார்த்தமாகவும்,ரசிக்ரகும் படியும் உருவாகிறது “சீமத்தண்ணி”  இவர்களுட்ன் “மலர்விழி” எனும் முக்கிய வேடத்தில் நடிக்ககிறார் “சாந்தினீ”
இயக்குனர் A.சற்குணம் இன்று கிளாப்  அடித்து பட்படிப்பினை துவக்கி வைத்தார்..

மஞ்சள் படத்நிற்கு பின் “மசானி” ஒளிப்பதிவு செய்ய… இசை.திருமூர்த்தி… எடிட்டிங்..சி.எஸ்.பிரேம்குமார்.கதை  திரைக்கதை வசனம் இயக்கம் : விஜய்மோகன்சண்டைப்பயிற்ச்சி..நாதன் ,லீ. கலை..விஜயராஜன்..நடனம்…தினேஷ்,ஜாய் மதி,உடைகள்..நடராஜன் பாடல்கள்…நந்தலாலா,சீர்காழீ சிற்பி,மோகன்ராஜ்,தயாரிப்பு ஒருங்கினைப்பு..விஜய் kசெல்லையா..தயாரிப்பு…சி.பிரேம்குமார்

வீதிக்கு வந்து போராடு”

வீதிக்கு வந்து போராடு”

வீரம், வேதாளம்,  வேகம், படத்தின் கேமராமேன் வெற்றி  “வீதிக்கு வந்து போராடு” தலைப்பை வெளியிட்டார்           

நாட்டு நடப்பை பிரதிபலிக்கும்  படமாக ‘வீதிக்கு வந்து போராடு’ உருவாகிறது.இன்று நம் நாட்டில் நாளொரு பிரச்சினை பொழுதொரு போராட்டம் என்று மாறி வருகிறது. எதையும் போராடியே பெற வேண்டியிருக்கிறது  போராடவேண்டியவை நிறையவே இருக்கின்றன. ஆனால் வீதிக்கு வந்து போராடுவது என்றால் தயங்குகிறார்கள்.

பல பிரச்சினைகளை வீதியில் இறங்கிப் போராடாமல்  தீர்க்க முடியாதது என்பது தான் நம் நாட்டு நிலையாக உள்ளது. இதை மையமாக வைத்துஉருவாகிற படம் தான் ‘வீதிக்கு வந்து போராடு’.இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்கி வைத்தியநாதன் இயக்குகிறார். வி.பீப்பிள் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஒளிப்பதிவு வி. முரளி ஸ்ரீதர் , இசை  : வசந்தராஜ் சிங்காரம் . எடிட்டிங் ராஜ் – வேல் , வசனம் பாடல்கள் கார்த்திகேயன் .ஜெ  இணைத் தயாரிப்பு சக்தி சரவணன் ,

« Older Entries