Category Archives: ACTOR MALE

நடிகர் பிராபாசிற்கு ஒரு புதிய சிறப்பு அங்கீகாரம்

நடிகர் பிராபாசிற்கு ஒரு புதிய சிறப்பு அங்கீகாரம்

பாகுபலி நாயகன் பிரபாசுக்கு மேலும் ஒரு சிறப்பு அங்கீகாரம்.
சாஹு படப்பிடிப்பில் பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கும் இளைய தலைமுறை நாயகன் பாகுபலி புகழ் பிரபாசுக்கு ஒரு புதிய சிறப்பு  அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பாகுபலியின் இரண்டு பாகங்களிலும் முன்னணி வேடத்தில் நடித்துப் புகழ் பெற்ற இளம் நாயகன் இப்போது தேசிய நாயகனாக திகழ்கிறார் என்றால் மிகையில்லை. சமீபத்தில் GQ இதழ் வெளியிட்டுள்ள “அதிக செல்வாக்கு நிறைந்த  இளம் இந்தியர்கள்” இன் தரவரிசைப் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.  இந்தப் பொன்னான தருணத்தில், பிரபாசை வாழ்த்தி மகிழ்கிறோம்.
இந்த இதழின் பட்டியலில் இடம் பிடித்துள்ள மற்ற பிரபலங்கள் பிவி சிந்து, டில்சித் டொசாஞ்ஜ், அலாக்ரிடா ஸ்ரீவஸ்தவா, கரண் கில், மனு சந்திரா, ராஜ் குமார் ராவ், பாட்ஷா, சஞ்சய் கார்க், ராதிகா ஆப்தே, மற்றும் நீரஜ் சோப்ரா.

பாகுபலி-1 2ம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு நடிகர் பிரபாசின் நன்றி கடிதம்

பாகுபலி-1 2ம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு நடிகர் பிரபாசின் நன்றி கடிதம்

பாகுபலி-1 2ம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு நடிகர் பிரபாசின் நன்றி கடிதம்
இன்றோடு பாகுபலி-1 திரையிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. என் வாழ்வின் பொன்னான, மிக சிறந்த அந்த நாளின் நினைவுகளை ஆழமான நன்றியோடு நினைவு கூறுகிறேன். பாகுபலி குழுவினர் அனைவரும் ஒருமித்த எண்ணத்துடனும் மிகப் பெரிய ஆர்வத்துடனும், ஒற்றுமையாக பணியாற்றிய, அந்த நாட்களின் நினைவுகள்  என்னை சிலிர்ப்போடுத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. என்னை இவ்வளவு பெரிய உயரத்தில் வைத்து அழகு பார்க்கும் ரசிகர்களுக்கும், நான் இந்த வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து மகிழ்கிறேன். குறிப்பாக எஸ். எஸ். ராஜமௌலி சாருக்கும், பாகுபலி குழுவினர் அனைவருக்கும் இந்த மாபெரும் வெற்றியை, நன்றியோடு சமர்ப்பிக்கிறேன்.
நன்றி
பிரபாஸ்

Actor Arjai Interview News

Actor Arjai Interview News
Arjai, the main villian in both ‘PANDIGAI’ and ‘THIRI’ has got very impressive and positive feedback from those who have seen n with the movies. The promising artist, who hails from Palani has given some small but impressive Villanic perfomances in few films earlier. 
This  Friday he has two releases to his name in PANDIGAI, an action thriller starring Krishna and Anandhi  and THIRI,  a social- family drama starring Ashwin Kakumanu and Swathi.
Actor Arjai says, ” I have been trying to get into movies from the year 2009. I trained myself and was searching for. Arjai means peace and valour ..The power of the name i suppose haa gained meprojects.  I then starting getting small but good villanic roles in ‘Naan sigappu manidhan’, ‘Naaigal jakkiradhai ‘, and ‘Theri’. I also did a character in ‘Yeman’ which travels throughout with the hero Vijay Antony sir. Many found  my name unique that actually helped me . Now I have played the main villian in both THIRI and PANDIGAI which are releasing on July 14th. In THIRI I play a minister’s son and since PANDIGAI IS all about illegal underground fighting, i play the main fighter against hero Krishna.

On director feroz’s demand I joined and trained in mixed martial arts for this role. The fight sequences, Choreographed by master Anbu and Arivu have come out brilliantly. I must thank hero Krishna sir for the support and co operation he lent me during the shoot. He himself is such a good fighter. He was so hard working. I am very excited and looking forward for both these releases. I am hopeful that these two movies will take my carreer graph higher. I would like to position myself as an artiste who could possibly fit into any role with content and challenge. Iam indeed glad with the titles of my  films which are releasing tomorrow. Both very  positive, Thiri on encouragement and Pandigai to celebrate . The best part was though I played baddy to both Krishna and Ashwin kakamanu in their respective films, in reality they actually bully me. All.said and done they have been my best of friends ” says Arjai .

‘விருச்சககாந்த்’ திற்கு உதவிய நடிகர் அபி சரவணன்!

‘விருச்சககாந்த்’ திற்கு உதவிய நடிகர் அபி சரவணன்!

விருச்சககாந்த்’ திற்கு உதவிய  நடிகர் அபி சரவணன்! 
‘விருச்சககாந்த்’ திற்கு நடிக்க வாய்ப்பு வழங்கிய நடிகர்

  அபி சரவணன்!
கடந்த ஒரு வாரமாக  காதல் படத்தில் நடித்த  ‘விருச்சககாந்த்’ சென்னையில் உள்ள ஒரு கோவிலில் மனநலம் பாதித்தவர் போல் உள்ளார், திரையுலகம்  அவரை கண்டு கொள்ளுமா என செய்திகள் வந்து கொண்டிருந்தது..
கடந்த ஞாயிறு அன்று  சென்னையில் நடந்த ‘வேகத்தடை ‘ குறும்பட நிகழ்ச்சி திரையிடலுக்கு சிறப்பு விருந்தினராக  வந்த அபி சரவணன் கூடவே நடிகர்  ‘விருச்சககாந்த்’ அவர்களையும் அழைத்து வந்து அவருக்கு தேவையான சில உதவிகளை செய்தார்..நேற்றும் ‘உறுதிகொள்’  ஆடியோ வில்   ‘விருச்சககாந்த்’ அவர்களுக்கு  ஒரு காசோலையை அளித்தார்.நிகழ்ச்சி முடிந்து  சென்ற வரை.. சில மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில்  உங்களை பார்க்க முடிந்தது .. இன்னைக்கு  ‘விருச்சககாந்த்’ அவர்களுக்கு உதவி .. சொல்லுங்க.. இவரை  எப்படி தொடர்பு கொண்டீங்க என்ற போது… 
அவரின் பதில் அப்படியே.. 
முதலில் இதற்கு காரணமான அண்ணன் சாய் தீனா & மோகன் அவர்களுக்கு நன்றி! மனதை ஒருவாரமாக உறுத்திகொண்டிருந்த ஒரு செய்தி.. பிச்சை எடுத்த நடிகர் ‘விருச்சககாந்த்”. அவரை கண்டுபிடிக்க முயற்சி செய்தும் இயலாத நிலையில் வாட்ஸ்அப்பில் அண்ணன் சாய்தீனா  அவர்களுடன் வீடியோவாக கண்டேன். உடனடியாக சாய்தீனா.அண்ணனை தொடர்புகொண்டேன். மோகன் அவர்கள் உதவியுடன்… அவரிடம் பேசி என்ன மாதிரியான உதவிகள் தேவை என கேட்டறிந்தேன்.மன இறுக்கம் காரணமாக மட்டுமே அவர் இப்படி ஆனதாகவும்  அவருக்கு தேவை..

சினிமாவில் நல்ல வாய்ப்பும் .. தங்க இடமும் .. தொடர்புகொள்ள ஒரு மொபைல்போனும் .. நல்ல உடையும் போதும் என்றார்… சரியாக மாலை  நான்கு மணிக்கு தான்  தகவல் கிடைத்தது.இன்று மாலை ஆர்.கேவி யில் ஒரு குறும்படத்தின் வெளியீடுக்காக  சிறப்புவிருந்தினராக ஆறுமணிக்கு செல்ல வேண்டியிருந்தது… எனவே விழா நடைபைறும் இடத்திற்க்கு  விருச்சிககாந்த் அவர்களை வரவழைத்தேன். அந்த விழா மேடையில் உடனடி அவருக்கு தேவையான ஒரு புதிய சாம்சுங் ஆண்ட்ராய்டு மொபைல் போனும். ஒரு செட் சர்ட்ம் ஐிுன்ஸ்ம் நானும் நண்பர் ‘ஓவியா’  எனும்  படத்தின் நடிகரும்  தயாரிப்பாளருமான காண்டீபனும் இணைந்து வழங்கினோம்.
தற்போது சென்னையில் படப்பிடிப்பு   நடந்து கொண்டிருக்கும் எனது படத்தின் இயக்குனரை தொடர்பு கொண்டு தகவலை கூறியவுடன்… நாளையே அவருக்கான நடிப்பு வாய்ப்பை வழங்கினார்.. மேலும் அடுத்த வாரமே  தொடங்க இருக்கும் எனது புதுப்படமான “சூறாவளி”யின்  இயக்குனர் குமார்நந்தாவும்  ‘விருச்சிகாந்த்’ நடிக்க வாய்ப்பு உடனே வழங்கினார்… இன்றும்  அண்ணன் மன்சூரலிகான் எனது வேண்டுகோளை ஏற்று அவரின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கி உள்ளார்.
மேலும் பெங்களூருவை சேர்ந்த பேஷன் டிசைனர் ‘கிரிஷ்’, விருச்சிககாந்த் மனநல சிகிச்சைக்கு உதவுவதோடு அவரை மாடலாகவும் பயன்படுத்தி கொள்கிறேன் எனவும் உறுதி அளித்துள்ளார்.சக நடிகரான ‘விருச்சிக காந்த்’ அவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை உடனடியாக சில  மணி நேரத்திற்குள்  செய்ய உதவிய இறைவனுக்கு நன்றிகள் என்கிறார் அபி சரவணன் மிக மகிழ்ச்சியோடு…. 

மாண்புமிகு நீர்ப்பாசனத்துறை அமைச்சர்க்கு நடிகர் விஷால் கடிதம் – 2.7.17

மாண்புமிகு நீர்ப்பாசனத்துறை அமைச்சர்க்கு நடிகர் விஷால் கடிதம் – 2.7.17

மாண்புமிகு நீர்ப்பாசனத்துறை அமைச்சர்க்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளரும்மான நடிகர் விஷால் கடிதம் – 2.7.17 

« Older Entries