Category Archives: Trailor launch

வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா 1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது.

வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா 1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது.

மக்கள் பாசறை தயாரித்து வழங்கும் ஆர் கே நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா 1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது.

இன்றைய நிலையில் படம் தயாரிப்பது கூட எளிதாகிவிட்டது. ஆனால், விநியோகம் செய்வது மிகவும் கடினம், ஏனென்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே விநியோகஸ்தர்கள் இருப்பதும் , அதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் இருப்பதும் கண்கூடு. அப்படி இருக்க வைகை எக்ஸ்பிரஸ் விழாவில் ஆயிரம் விநியோகஸ்தர்களா..?
அவர்களைப் பற்றி விழாவில் பேசிய ஆர்.கே.,” உலகில் மார்கெட்டிங் சிறப்பாக இருந்தால் எதைவேண்டுமானாலும் சந்தைப்படுத்தி விடலாம். கற்றுக்கொடுப்பது தான் வாழ்க்கை. டேய் நான் உன் தகப்பன்டா என்று தந்தை கற்றுக் கொடுக்கிறார்… டேய் நான் உன் அம்மாடா சேலையைப் பிடிச்சு இழுக்கிற படவா என்று அம்மா கற்றுக்கொடுக்கிறாள்… நான் திரைப்படத்தை எப்படி வியாபாரம் செய்யவேண்டும் என்று கற்றுக் கொடுத்தேன்… மக்கள் மதத்தைப் பற்றி பேசுவார்கள், அரசியலைப்பற்றிப் பேசுவார்கள், சினிமாவைப் பற்றி வெறுமனே பேசாமல்.நேசிக்கவும் செய்கிறார்கள்…
பலகோடி வர்த்தகம் நடக்கும் இடம். பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இடம். ஆனால், நசிந்து கிடக்கிறது. 300 ரூபாய்க்கு விற்கும் டிக்கெட்டை எடுத்துப் படம் பார்த்துட்டு, குடும்பத்தைக் கூட்டிட்டுப் போக முடியலயே என்கிற ஆதங்கத்தில்., இல்லை படம் மொக்கை என்று  நண்பன் சொல்லிட்டான் என்று பொய் சொல்கிறான்… 600 பேர் அமரும் தியேட்டரில் 100 டிக்கெட் கூட விற்கமாட்டேங்குது… நான் 300 ரூ டிக்கெட்டை 100 ரூபாய்க்கு கொடுக்கிறேன். அத்துடன் 3 பேர் டிக்கெட்டு எடுத்தா 2 பேரைக் இலவசமா கூட்டிட்டு வா என்கிறேன்… குடும்பம் குட்டியோட மக்கள்.சந்தோஷமா படம் பார்க்கட்டுமே…
அப்படி உருவானதுதான் ஹிட் பாக்ஸ்… இது பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுக்கான உத்திரவாதமான முதல் படி… ஆயிரம் வி நியோகஸ்தர்களை உருவாக்கினேன்…ஐயா திருட்டு விசிடி விக்கிறாய்ங்கன்னு சொன்னார்கள்.. இது இனிமேல் உங்கள் சினிமா உங்கள் வியாபாரம் என்று ஊக்கப்படுத்தினேன்.. களமிறங்கி ஜெயித்திருக்கிறார்கள்…ஆன் லைன்ல புக் பண்ணா எவனோ ஒருத்தன் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூ சம்பாதிக்கிறான்…கேட்டா சர்வீஸ் சார்ஜுங்கிறான்… 10 டிக்கெட் புக் பண்ணாலும் 300 ரூபாய் வாங்கிவிடுகிறான்… இதை முதலில் ஒழிக்கவேண்டும்…எங்க ஹிட் பாக்ஸ்ல டிக்கெட் விற்கிறவர்கள் ஒரு டிக்கெட்டுக்கு 5 ரூபாய்தான் வாங்குகிறார்கள். 1 லட்சம் டிக்கெட் விற்றால் 5 லட்சம் ரூபாய் சம்பாதிப்பார்கள்…. என் எழைத்தமிழனும் லட்சாதிபதி ஆகட்டுமே… 
ஹிட் பாக்ஸ் மூலமா எட்டு கோடி பேரும் தியேட்டர்ல வந்து படம் பார்ப்பார்கள்…
வைகை எக்ஸ்பிரஸ், தொடர்ந்து நான்கு வாரம் அரங்கு நிறைந்த காட்சிகளாய் ஓடும்…
ஹிட் பாக்ஸ் வி நியோகம் உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ் சினிமாவுக்கு வைகை எக்ஸ்பிரஸ் மூலம் வருகிறது… எதிர் காலத்தில் எங்கள் படங்களையும் ஹிட் பாக்ஸ் மூலம் வி நியோகியுங்கள் என்று எல்லோரும் வருவார்கள்..” என்றார். ஷாஜி கைலாஷ் இயக்கியிருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார், ராஜ ரத்தினம்  ஒளிப்பதிவு செய்ய , சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறார் கனல் கண்ணன். வசனத்தை கையாண்டிருக்கிறார்
 V. பிரபாகர். ஆர் கே, நீதுசந்திரா, இனியா, கோமல் சர்மா, சுஜா வாருணி
 நாசர், ரமேஷ் கண்ணா, எம் எஸ் பாஸ்கர், மனோபாலா, ஸ்ரீரஞ்சனி, காமெடி டைம் அர்ச்சனா,  பவன் ஆகியோர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் கேயார், ஏஎம் ரத்னம், ஏஎல் அழகப்பன், கதிரேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். அர்ச்சனா( V P மணி மகள் ) தொகுத்து வழங்கினார்.
                                                          ——– A. ஜான் PRO———-

Ayyanar Veethi Teaser Launch News Release and Images

Ayyanar Veethi Teaser Launch News Release and Images

எம்ஜிஆர் தோட்டத்தில் நடந்த விழாவில் ‘அய்யனார் வீதி’ பட டீசரை ராதாரவி வெளியிட நடிகர் ரித்திஷ் பெற்றுக் கொண்டார். அப்போது எம்ஜிஆரின் உறவினர் சுதா விஜயகுமார், இப்படத்தின் தயாரிப்பாளர்களான  P.செந்தில்வேல் மற்றும் விஜயசங்கர் ,இயக்குனர் ஜிப்ஸி N.ராஜ்குமார் ,சிறப்பு விருந்தினர்களாக ஆடிட்டர் ராஜா ,கபீர் ,சம்சுதீன் உட்பட பலர் இருந்தனர். 

ஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் P.செந்தில்வேல். விஜயசங்கர், இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்  ‘அய்யனார் வீதி’.

முக்கிய கதாபாத்திரத்தில்  K.பாக்கியராஜ், பொன்வண்ணன் நடிப்பில், கதாநாயகனாக யுவன், கதாநாயகிகளாக சாராஷெட்டி, சிஞ்சுமோகன் அறிமுகமாகிறார்கள். மேலும் சிங்கம்புலி, ராஜா, வின்சென்ட்ராய், செந்தில்வேல், விஜயசங்கர், தாஸ் பாண்டியன், முத்துக்காளை, மார்த்தாண்டம், கோட்டைப்பெருமாள் மற்றும் பலமுன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை பாஸ்கரன் எழுத, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜிப்ஸி N.ராஜ்குமார்.

பழக்க வழக்கங்கள், நாகரீகம், பண்பாடு, கலை இலக்கியம், இவை எல்லாம் தமிழக வரலாற்றில் ஒன்றோடு ஒன்று மெல்லிய இழைகளாக பின்னிக் கிடக்கிறது. இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டினர் இந்தியாவை வியப்போடு பார்க்க துவங்கியிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இன்னும் பண்பாட்டுச்  சுழல் கெட்டுப் போகாமல் இருக்கும் ஒரு  சில மாநிலங்களில் முக்கிய இடம் தமிழகத்திற்கு  தான் உண்டு.

அத்தகைய சூழல் மாறாமல், ஆபாசம்,  அசிங்கம், இரட்டைஅர்த்த வசனங்கள்.. புரையோடிப்போன வன்மங்கள் எதுவுமின்றி அன்பு…பாசம்… நட்பு…வீரம்…அளவான கோபம்…  இவை அனைத்தும் இன்னும் நம்மை  பாதுகாக்கும் கவசகுண்டலங்கள் என்பதை மக்களுக்கு சொல்வதற்காகவும், குடும்பத்தோடு திரைப்படம் பார்க்கும் ஆவலை துண்டும் வண்ணம்… இந்த படத்தின் கதைக்களம்  அமைக்கப்பட்டுள்ளதுதான் “அய்யனார் வீதி’ படத்தின் வெற்றிக்கான சூட்சமம்.

இப்படத்தில் மொத்தம் 5 பாடல்களை இசையமைப்பபாளர் U.K.முரளியின் இசையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, ராஜபாளையம், மேலுர்,  மேலப்பூங்குடி, குற்றாலம்,  கொடைக்கானல், சொக்கலிங்கபுரம்,  சென்னை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் டீசர் வெளியீடு சென்னையில் உள்ள எம்ஜிஆர் தோட்டத்தில் நடந்தது. எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது ‘அய்யனார் வீதி’ படத்தின் டீசரை நடிகர் ராதாரவி வெளியிட நடிகர் ரித்திஷ் பெற்றுக் கொண்டார். 

Thanks & Regards-S.Selvaragu-PRO -(Film – Media – Event- Castg mgr )

Koditta Idangalai Nirappuga

Koditta Idangalai Nirappuga

“My character Mohini will not have any Make-Up…” reveals Parvathy Nair, the female lead of ‘Koditta Idangalai Nirappuga’
 Parvathy Nair has already skipped the hearts of Tamil Audience with  her beast-beauty performance in ‘Yennai Arindhaal’ and now she is all set to steal the hearts of youngsters from 14th January, 2017 by the upcoming film ‘Koditta Idangalai Nirappuga’. Directed by one of the most creative creator Radhakrishnan Parthiban, the most expected film ‘Koditta Idangalai Nirappuga’ has Shanthnu Bhagyaraj in the male lead.

“I play as a Malayali girl in ‘Koditta Idangalai Nirappuga’ whose name is Mohini, and importantly my character will not have any make-up throughout the film. Parthiban sir explored my acting calibre by giving me confidence, and we have completed our shoot without any rehearsals in just one month. I am very much happy to say that ‘Koditta Idangalai Nirappuga’ has taught me better Tamil, which I consider as one of my greatest developments.  From the starting date of my film career to till date, I feel this is the most challenging role.My co star Shanthanu was very helpful and  going by the hype and expectations KIN had created , iam confident that we will excel as one of the best on screen pairs.  Being in Tamil Nadu and acting in a Tamil film has made me a Tamilan i would say . Like every Tamil i also eagerly await 14th January to know the answers of ‘Fill in the Blanks.that will give me a distinction in acting “says Parvathy Nair enthusiastically.

Thanks & Regards-Suresh Chandra

Saaya Movie Audio Launch பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன்! நமீதா பேச்சு !

Saaya Movie Audio Launch பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன்! நமீதா பேச்சு !

பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன்! நமீதா பேச்சு  பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன் என்று  நமீதா ஒரு

படவிழாவில் துணிவாகப் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ். பழனிவேல் கதை திரைக்கதை

வசனம், பாடல்கள்,இயக்கி தயாரித்துள்ள படம் ‘சாயா’. இப்படத்துக்கு ஒளிப்பதிவு -பார்த்திபன், இசை- ஏ.சி.ஜான்பீட்டர். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது.பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார் .

​ ​தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் ,நடிகைகள் நமீதா, வசுந்தரா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். 

விழாவில் நமீதா பேசும் போது “ -;

இந்தப் படம் ஒரு சமூகக் கருத்தைச்  சொல்லும் படம் என்று அறிந்து மகிழ்ச்சி.
 சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும்,செய்ய வேண்டும் என்றால்  திரைப்படம், அரசியல் என இரண்டு வழிகள்தான் இருக்கின்றன .அதனால்தான் நான் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறேன்.
இந்தப் படம் பற்றி பேசும்போது-

குழந்தைகளுக்கு பேரண்டிங் பற்றி ,அதாவது நல்ல பெற்றோராக இருப்பது முக்கியம் என்று உணர முடிகிறது. எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.ஆம். நான் மூன்று நாய்க்குட்டிகள் வளர்க்கிறேன் எனக்கு அவங்கதான் குழந்தைகள். நான்தான் பெற்றோர் மாதிரி கவனித்துக்கொள்கிறேன். என் அண்ணாவுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக்கொள்கிறேன்.

ஒரு விஷயம் ,ஆனால் இந்த விஷயத்தை பிரபலங்கள் யாரும் மேடையில் சொல்ல மாட்டார்கள். நான் சொல்கிறேன். இன்று பாலியல் சீண்டல்கள் குழந்தைகளுக்கு எதிராக நிறைய நடக்கின்றன. நம் அருகிலிருந்து கூட நடக்கின்றன. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி மட்டும் கொடுத்தால் போதாது,நல்ல டியூஷன்  மட்டும் கொடுத்தால் போதாது.  நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும். எது நல்ல தொடுதல் எது கெட்ட தொடுதல் என்று  சொல்லிக் கொடுக்க வேண்டும்,அதாவது குட் டச் எது, பேட் டச் எது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். 

குழந்தைகளிடம் நிறைய கேளுங்கள்,நிறைய பேசுங்கள் .இதை அம்மா அப்பா இரண்டு பேருமே செய்யுங்கள் இந்தப் படம் குழந்தைகள் பற்றி சிந்திக்க வைக்கும்படி இருக்கும் என நம்புகிறேன் .இந்தப் படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தினார்.
,
பாடல்களை வெளியிட்டு நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது 

”எனக்கு சினிமாவில் ஒவ்வொரு விழா நடக்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதில் கலந்து கொள்ள பிரபலங்களை அழைத்து வருவது பற்றிய எண்ணமும் வரும். இதுமாதிரி விழாக்களுக்கு அழைக்கும் போது பிரபலங்கள் யாரும் வர முன்வருவதில்லை. சாக்கு போக்கு சொல்லி பொய்யான காரணம் சொல்லிதவிர்ப்பார்கள், வரமாட்டார்கள். இதை எண்ணி வேதனை அடைந்து இருக்கிறேன். இதை நான் அனுபவத்திலும் கண்டு இருக்கிறேன். விழா நடத்துபவர்கள் பலரது  தவிப்பையும் உணர்ந்து இருக்கிறேன்.அதன் வலிகளைப் புரிந்து பிறகு நான் ஒரு முடிவு செய்தேன். என்னை அழைப்பவர்களின் விழாவுக்குச் சென்று அவர்களை வாழ்த்துவது என்று முடிவு செய்தேன். நான் சம்பந்தப்ப ​​

டாத விழாவாக இருந்தாலும் சென்று வாழ்த்தி வருகிறேன். ஊக்கப்படுத்துகிறேன் .அப்படித்தான் இங்கே வந்திருக்கிறேன்.சினிமாவில் எல்லாரும் இப்படி ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்தி ஒற்றுமையாக இருக்கவேண்டும். இப்படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்றார்.

முன்னதாக அனைவரையும் வரவேற்ற   ‘சாயா’  பட இயக்குநர் வி.எஸ். பழனிவேல் படம் பற்றிப் பேசும் போது -;

 ”பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல்தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும்அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படமாக ஆத்மாவை மையமாக வைத்துஉருவாகியுள்ளது ’சாயா’ கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காகஎடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் ஒருமுறையாவது இந்த படத்தைப்பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் அவசியம் புரியும். 

ஆத்மா என்பது எப்படிப்பட்டது? ஒரு மனிதன் இறந்தபின் அவன் ஆத்மா அவனதுஉடலைப் பார்க்க முடியுமா? பார்த்தால் என்ன செய்யும்? இந்தகேள்விகளுக்கெல்லாம் ”சாயா” படம் பதிலளிக்கும் ” என்றார் .

இவ்விழாவில் இயக்குநர்கள் மனோஜ் குமார், கே.எஸ்.அதியமான், தாமிரா,
இசையமைப்பாளர் ஏ.சி. ஜான் பீட்டர் , படத்தின் நாயகன் சந்தோஷ் கண்ணா,

​ ​நடிகர்கள் கராத்தேராஜா, ‘பாய்ஸ்’ராஜன், சின்ராஜ் ,

​ ​நடிகைகள்  வசுந்தரா ,பட நாயகி காயத்ரி,  தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம்  ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். 

நிறைவாக தயாரிப்பாளர் சசிகலா பழனிவேல் நன்றி கூறினார்.–

                                                    ——– A. ஜான் PRO———-

நடிகர் சந்தானம் வெளியிட்டார் “ஆளுக்கு பாதி 50-50” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை

நடிகர் சந்தானம் வெளியிட்டார் “ஆளுக்கு பாதி 50-50” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை

15085518_2027136767512558_1691293647132597019_n 15073407_2027136770845891_8776171806001284699_n

14991268_2027137377512497_3422596683499770819_o

 

       லிபி சினி கிராப்ட்ஸ்  V.N.ரஞ்சித் குமார் தயாரிப்பில் கிருஷ்ண சாய் இயக்கத்தில் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” சேது நாயகனாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நாயகியாக நடித்திருக்கும் “ஆளுக்கு பாதி 50-50” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சந்தானம்  வெளியிட்டார், இப்படத்தின் டீசரை இன்று மாலை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்

Regards,- C.N.Kumar P.R.O

காதல் கண் கட்டுதே” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை இயக்குனர் பாலாஜி மோகன் அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டார்.

காதல் கண் கட்டுதே” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை இயக்குனர் பாலாஜி மோகன் அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டார்.

img_2479 img_2502

காதல் கண் கட்டுதே” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை இயக்குனர் பாலாஜி மோகன் அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டார். அவருடன் Montage Media தயாரிப்பாளர் சுமீ.பாஸ்கரன், கோவை பிலிம் மேட்ஸ் தயாரிப்பாளர் தேவா, இப்படத்தின் இயக்குனர் சிவராஜ் மற்றும் C.N.குமார், கோபி ஆகியோர் உடன் இருந்தனர்.

Regards- C.N.Kumar P.R.O
« Older Entries