Category Archives: POLICE

கோவை மாநகர காவல்துறை, போக்குவரத்து துறை சார்பில் பெண்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி முகாம்

கோவை மாநகர காவல்துறை, போக்குவரத்து துறை சார்பில் பெண்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி முகாம்

கோவை 13 தமிழகத்தில் முதன் முறையாக கோவை மாநகர காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் இணைந்து குழந்தைகள் போக்குவரத்து பூங்காவில் மகளிருக்கான இருசக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி முகாம் ஒன்று துவக்கப் பட்டது.

கல்லூரி மாணவிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்த 100 பேர் கலந்து கொண்டனர். 30பேருக்கு பழகுனர் உரிமம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர் A.அமல்ராஜ் IPS, காவல் துணை ஆணைய‌ர் S. லட்சுமி IPS வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உதயகுமார், குமாரவேல் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதில் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) லட்சுமி, துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன், வட்டார போக்குவரத்து அலுவலர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பெண்களுக்கு பழகுநர் உரிமங்களை வழங்கினர்.

FB_IMG_1494604426924
 காவல்துறை ஆணையர் அமல்ராஜ் பேசுகையில், ‘தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த சாலை விபத்துகளில் மட்டும் 14 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளில் நடக்கும் விபத்துகளில் பலியாவோர் எண்ணிக்கையை விட இது அதிகமாக உள்ளது. எனவே, அனைவரும் சாலை விதிகளை கடைபிடித்து சரியான முறையில் வாகனங்களை இயக்க வேண்டும். வாகன ஓட்டிகள் அல்லாது, பாதசாரிகளுக்கும் விதிமுறைகள் உள்ளது. அனைத்து தரப்பினரும் சாலை விதிகளை கடைபிடித்தால் தான் விபத்துக்களை குறைக்க முடியும்’ என்றார்.

சென்னை மாநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம்

சென்னை மாநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம்

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த கரண் சின்ஹா பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர துணை ஆணையராக சாம்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் பொக்குவரத்துக்கழக தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக ஜெயஸ்ரீ நியமனம் செய்யப்பட்டுள்ளர்.

சென்னை மாநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம்

மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையராக மணிவண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல் தலைமை அலுவலக துணை ஆணையராக எஸ்.சரவணன் நியமனம். மெட்ரோ ரெயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக ஜெயகவுரி நியமனம். ஊர்க்காவல் படை ஏடிஜிபியாக சுனில்குமார் சிங் மாற்றப்பட்டுள்ளார். காவல் தலைமை அலுவலக ஏடிஜிபியாக எம்.ரவி நியமனம்.

தமிழகத்தில் 17 காவல் அதிகாரிகளை பணியிடங்கள் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Vodafone HSW ( Health Safety & Well-Being) Day Videolink’s & Images

Vodafone HSW ( Health Safety & Well-Being) Day Videolink’s & Images

To commemorate​​ Vodafone HSW ( Health Safety & Well-Being) Day, S Murali, Business Head-Tamil Nadu, Vodafone India, presented reflective jackets for the safety of traffic police in Chennai, to Shri. V Balakrishnan IPS Deputy Commissioner of Police.

Vodafone HSW ( Health Safety & Well-Being) Day Videolink’s & Images

Thank you-Jay S-ADFACTORS
P R

இளைஞர்களே உஷார்: கோவை காவல்துறை ஆணையரின் சிந்திக்க வைக்கும் எச்சரிக்கை

இளைஞர்களே உஷார்: கோவை காவல்துறை ஆணையரின் சிந்திக்க வைக்கும் எச்சரிக்கை

இளைஞர்களே உஷார்: கோவை காவல்துறை ஆணையரின் சிந்திக்க வைக்கும் எச்சரிக்கை
ளைஞர்களே உஷார்: கோவை காவல்துறை ஆணையரின் சிந்திக்க வைக்கும் எச்சரிக்கைகோவை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், போராட்டத்தின் போது கிடைத்த புதிய நட்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் கூறியுள்ளார்.

கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் நேற்று முடிவுக்கு வந்த நிலையில், கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், இணையதளங்களில் வெளியாகும் அனைத்து தகவல்களும் உண்மையானவை அல்ல. அவற்றின் நம்பத்தன்மையை இளைஞர்கள் ஆராய வேண்டும். சமூக தளங்களில் வெளியாகும் தகவல்கள் அனைத்தையுமே இளைஞர்கள் நம்ப வேண்டாம். அவற்றை பரப்பவும் வேண்டாம்.

மேலும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது ஏராளமானோர் புதிதாக நட்பாகியிருப்பார்கள். அதுபோன்ற நட்பு வட்டத்தில் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட சிலர், இளைஞர்களை தொடர்பு கொண்டு தொலைபேசி எண்களைக் கொடுத்து பேசச் சொல்வார்கள். அதுபோன்ற புதிய நட்புகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். பெற்றோர்களும், பிள்ளைகளின் நட்பு வட்டத்தை அறிந்து கவனமாக இருங்கள் என்று தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம்  நோட்டீஸ்
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம்  நோட்டீஸ்

புதுடெல்லி, சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது நடைபெற்ற தடியடி சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து, தமிழக அரசின் தலைமை செயலாளர், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் நடைபெற்ற தடியடி சம்பவங்கள் குறித்து ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை ஆணையம் கவனமாக பார்த்ததில், எவ்வித தூண்டுதலும் இன்றி போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளது.

தமிழக மக்கள், குறிப்பாக சென்னையை சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவது தொடர்பாக மிகவும் அமைதியான போராட்டத்தை ஒரு வாரத்துக்கும் மேலாக மேற்கொண்டு வந்தார்கள். மெரினா கடற்கரையில் போராட்டக்காரர்களை பாதுகாக்க வேண்டியவர்களே அவர்களுடைய அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.

சென்னையில் பல தெருக்களில் குடிசைகள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள், தெருவோரம் அமைந்த காய்கறி கடைகள் மற்றும் இதர சொத்துகள் மீது போலீசாரே தீயிட்டுக்கொளுத்தியதை தொலைக்காட்சிகளில் தெளிவாக காணமுடிந்தது. மாணவர்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள ரத்தம் சொட்டச்சொட்ட அலறி அடித்துக் கொண்டு ஓடுவதையும் காணமுடிந்தது.

போலீசார் பல வீடுகளில் அத்துமீறி நுழைந்து பலரையும் கடுமையாக தாக்கி இருக்கின்றனர். சென்னை நகரம் மற்றும் மெரினா கடற்கரைக்கு செல்லும் சாலைகளை போலீசார் போக்குவரத்துக்கு தடை விதித்து இதுபோன்று அத்துமீறல்களில் ஈடுபட்டனர்.

எனவே, தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் மேற்கண்ட சம்பவம் குறித்து இரு வாரங்களுக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு விரிவான அறிக்கையை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி மீனாகுமாரி, தாமாக முன்வந்து ஒரு வழக்கு பதிவு செய்தார். மெரினா கடற்கரையில் நடந்த தடியடி சம்பவம் குறித்து அனைத்து விவரங்களுடன் 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த கலவரம் குறித்து தனியாக விசாரணை நடத்தி அறிக்கை தருவதற்காக, மாநில மனித உரிமை ஆணையத்தின் பதிவாளர் மாவட்ட நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, உதவி பதிவாளர் பி.சி.கோபிநாத் மற்றும் மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அம்ரேஸ் பூஜாரி ஆகியோரை கொண்ட ஒரு துணை குழுவை அமைத்தும் உத்தரவிட்டார்.

இந்த துணை குழு நேற்று மெரினா கடற்கரையில் தடியடி சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியது.

சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

201612231455416106_mambalam-inspector-take-action-165-person-jail-in-thug-law_secvpf
165 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த மாம்பலம் இன்ஸ்பெக்டர் 

சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்து வருகிறார்கள். இப்படி கைது செய்யப்படும் நபர்கள் ஓராண்டு தடுப்பு காவலில் வைக்கப்படுவார்கள்.

சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனராக ஜார்ஜ் பொறுப்பேற்ற பின்னர், குண்டர் சட்டத்தில் குற்றவாளிகளை கைது செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இதற்கு முன்னர் ஜார்ஜ் கமி‌ஷனராக இருந்த போது போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தீவிரமாக செயல்பட்டு தங்கள் பகுதியில் தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் அதிகமாக அடைத்தனர். இப்போதும் அதுபோன்ற நடவடிக்கை தொடர்கிறது.

கடந்த 2011, 2012, 2013-ம் ஆண்டுகளில் ரவுடிகள் பலரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். இந்த நடவடிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து வருகிறது.

மாம்பலம் போலீஸ் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து தற்போதுவரை 95 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் 165 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி முதலிடத்தில் உள்ளார்.

இதுதொடர்பாக அவருக்கு வாட்ஸ் அப்பில் வாழ்த்துக்களும் குவிகின்றன.

இதுபற்றி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி கூறும் போது, இது என்னுடைய தனிப்பட்ட முயற்சியால் நடந்தது இல்லை. உயர் அதிகாரிகளின் ஊக்கமும் எனக்கு கீழ் பணியாற்றிய போலீசாரின் கூட்டு முயற்சியுமே இதற்கு காரணமாகும் என்றார்.

இரவுக்காவலர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி தமிழில் எழுத படிக்க தெரிய வேண்டும்.

இரவுக்காவலர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி தமிழில் எழுத படிக்க தெரிய வேண்டும்.

இரவு காவலர் பணியிடத்திற்கு கீழ்கண்ட விபரப்படி தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

இரவுக்காவலர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி தமிழில் எழுத படிக்க தெரிய வேண்டும். தாழ்த்தப்பட்டவர் 01.07.2016 தேதியன்று 18 வயதுக்கு குறையாமலும் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை தளர்வு.

மேற்கூறிய பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் வயது, கல்வி தகுதி மற்றும் இனம் ஆதிதிராவிடர் முன்னுரிமை பெற்றவர் ஆகியவற்றை குறிப்பிட்ட அதற்கான சான்றொப்பம் இட்ட நகல்களுடன் 21.12.2016 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் பின்வரும் முகவரிக்கோ, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தகுதியுள்ள நபர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், நாள் ஆகியவை குறித்து தனியே கடிதம் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். விண்ணப்பங்களை “மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தூத்துக்குடி, தொலை பேசி எண்: 0461-2340626” என்ற முகவரிக்கு அனுப்பவும்.

போலீசார் முறையாக பணி செய்கின்றனரா என்பதை கண்காணிக்க துணை கமிஷனர் தலைமையில் வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது

போலீசார் முறையாக பணி செய்கின்றனரா என்பதை கண்காணிக்க துணை கமிஷனர் தலைமையில் வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது

images
வாட்ஸ்அப் குழு உருவாக்கம் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளுடன் துணை கமிஷனர் தலைமையில் – குற்றங்களை தடுக்க நடவடிக்கை 

சென்னை, -போலீசார் முறையாக பணி செய்கின்றனரா என்பதை கண்காணிக்க துணை கமிஷனர் தலைமையில் வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது.வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னையில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுப்பது குறித்து கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது கூடுதல் கமிஷனர் சங்கர், குற்றங்களை தடுக்க ஒரு யோசனையை தெரிவித்தார். அதன்படி, போலீசார் முறையாக பணி செய்கிறார்களா என்பதை கண்காணிக்கும் வகையில் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் அடங்கிய வாட்ஸ்அப் குழு ஒன்று தொடங்கலாம் என தனது கருத்தை தெரிவித்தார். இதற்கு கமிஷனர் ஜார்ஜ் அனுமதி அளித்தார்.இதையடுத்து முதல்கட்டமாக மயிலாப்பூர் துணை கமிஷனர் தலைமையில் மயிலாப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட 8 ஆய்வாளர்கள், பீட் ஆபீசர்கள், ரோந்து போலீசார் மற்றும் குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் அடங்கிய வாட்ஸ்அப் குழு ஒன்று தொடங்கப்பட்டது.

இக்குழுவில் உள்ள ரோந்து போலீசார், நாள்தோறும் தாங்கள் செய்யும் பணி விவரங்களை பதிவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குற்றச்சம்பவங்கள் குறித்து உடனக்குடன் தகவல் தெரிவிக்குமாறு குழுவில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் சமீபகாலமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் அதிக குற்றங்கள் நடக்கிறது. அதனால் தான் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை குழுவில் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்கட்டமாக மயிலாப்பூரில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த வாட்ஸ்அப் குழு நடவடிக்கை படிப்படியாக சென்னையின் அனைத்து பகுதிக்கும் அறிமுகப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை மூலம் ஆய்வாளர்களின் கட்டப்பஞ்சாயத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இருந்து வாகனங்கள் ஜோதி வெங்கடாசலம் தெரு வழியாக வெளியே செல்கிறது.

சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இருந்து வாகனங்கள் ஜோதி வெங்கடாசலம் தெரு வழியாக வெளியே செல்கிறது.

25th_cop_1630346f
2 கி.மீ. தூரம் காரில் துரத்திச் சென்று கொள்ளையனைப் பிடித்த போலீஸ்காரர் 

சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இருந்து வாகனங்கள் ஜோதி வெங்கடாசலம் தெரு வழியாக வெளியே செல்கிறது. அந்த தெருவில் கமி‌ஷனர் அலுவலக 4-வது கேட் அருகே இன்று காலை 7 மணி அளவில் ஒரு பெண் நடந்து சென்றார்.

அப்போது 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் அந்த பெண்ணிடம் இருந்த கைப் பையை பறித்துச் சென்றனர்.

அப்போது தென் சென்னை கூடுதல் கமி‌ஷனர் சங்கரின் டிரைவரான போலீஸ்காரர் மாரி காரை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். கொள்ளை சம்பவத்தை நேரில் பார்த்த அவர் கொள்ளையர்களை காரில் துரத்தி சென்றார். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தப்பிச்சென்ற கொள்ளையர்கள் பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது போலீஸ்காரர் மாரி காரில் சென்று மோட்டார் சைக்கிளை மடக்கினார். இதனால் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இறங்கி ஓடி னார்கள்.

போலீஸ்காரர் மாரி காரை நிறுத்தி விட்டு ஓடிச்சென்று கொள்ளையர்களில் ஒருவனை மடக்கி பிடித்தார். அவனது பெயர் ஹெவின். ஓட்டேரியை சேர்ந்தவன். மற்ற 2 கொள்ளையர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

கொள்ளையர்களை விரட்டி சென்றபோது போலீஸ்காரர் மாரியின் கை, கால்களில் காயம் ஏற்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல் கொள்ளையன் ஹெவினை அவர் மடக்கி பிடித்தார். பிடிபட்ட ஹெலினை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

கொள்ளையனை துணிச்சலாக விரட்டி பிடித்த போலீஸ்காரர் மாரியை தென்சென்னை கூடுதல் கமி‌ஷனர் சங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.

« Older Entries