விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் சினிமா விமர்சனம்

விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் சினிமா விமர்சனம்

நடிகர்கள்-;

நாக அன்வேஷ் – ஹேபா பட்டேல், சுமன், ஷாயாஜி ஷிண்டே, பிரதீப்ராவத், “பிதாமகன்” மகாதேவன், கபிர்சிங், சப்தகிரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் –;

   இயக்கம்  – “பாகுபலி ” கே.பழனி….வசனம்  – வி.பிரபாகரன்…தயாரிப்பு. – “லட்சுமி கணபதி பிலிம்ஸ்….ஒளிப்பதிவு  –  குணா….   இசை  –  பீம்ஸின்…பாடல்கள்  – சினேகனின்…. மற்றும் பலர் பனியற்றனர் .

திரைபடத்தின் கதை-;

  விண்ணுலக தேவதைக்கும் மண்ணுலக நாயகனுக்குமான காதல் தான் விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் படத்தின்  கதை சொர்க்கலோகத்தில் கந்தர்வமகாராஜ் – சுமனின் ஒற்றைசெல்ல மகள் நட்சத்திரா – ஹேபா பட்டேல். தேவலோகத்து இளவரசியான இவருக்கு காதல், பாசம், அன்பு, பண்பு, கோபம், குரோதம்… எல்லாம் நிரம்பிய பூலோகத்தில் வாழ்ந்து பார்க்க வேண்டு மென்ற ஆசை .ஆனால் அதற்கு மானிடப் பதர்கள் நிரம்பிய பூலோகத்தில் உன்னால் ஒரு நாள் கூட வாழ முடியாது …. என மறுக்கின்றனர் அவரது தேவலோக பெற்றோர்கள் .அவர்களது பேச்சை மீறி பூலோகம் புறப்படுகிறார்.

நட்சத்திரா அதனால் கோபமுறும் கந்தர்வராஜ் நீ சிலையாகிப் போவாய்… என சாபமிட்டு அனுப்ப, அதன்படி அழகிய தங்க சிலையாகி பழம்பெ ருமை வாய்ந்த ஆந்திரா அமராவதி மாகாண ஆற்றுபடுகையில் புதையுண்டு போகும் நட்சத்தி ராவின் தங்க சிலையை கண்டெடுக்கும் ஹரீஷ் பாய்- ஷாயாஜி ஷிண்டே அண்ட் கோவினர் அதை பல கோடிக்கு ரூபாய்க்கு அயல் நாட்டு சிலை கடத்தல் கும்பலுக்கு விலை பேசி சென்னை க்கு நானி – நாக அன்வேஷ், கிரி-சப்தகிரி பொறுப்பில் அனுப்பி வைக்க, ஹீரோ நாக அன்வேஷின் புகழ்ச்சி உரையால் சாப விமோசனம் பெற்று, தேவதை பெண்ணாக மாறும் ஹேபா பட்டேல், நாக அன்வேஷின் அன்பிலும் ,அரவணைப்பிலும், தான்., விரும்பிய பூலோக வாழ்க்கையை விரும்பியபடியே வாழ்ந்தாரா ? இல்லையா..? என்பதும், இறுதியில் இவர்களது காதல்,பூலோக (ஷாயாஜி ஷிண்டே…) ,வின்னுலக ( சுமன்…) தடைகள் பல கடந்து கைகூடியதா? இல்லையா.? என்பதும் தான் “விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல்.”

பாடத்தின்  முன்னோட்டத்தை பார்க்கவும்-;

திரை விமர்சனம்-;

விண்ணுலக தேவதைக்கும் மண்ணுலக நாயகனுக்குமான காதல் தான் விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் படத்தின்    சொர்க்கலோகத்தில் கந்தர்வமகாராஜ் – சுமனின் ஒற்றைசெல்ல மகள் நட்சத்திரா – ஹேபா பட்டேல். தேவலோகத்து இளவரசியான இவருக்கு காதல், பாசம், அன்பு, பண்பு, கோபம், குரோதம்… எல்லாம் நிரம்பிய பூலோகத்தில் வாழ்ந்து பார்க்க வேண்டுமென்ற ஆசை .ஆனால் அதற்கு மானிடப் பதர்கள் நிரம்பிய பூலோகத்தில் உன்னால் ஒரு நாள் கூட வாழ முடியாது …. என மறுக்கின்றனர் அவரது தேவலோக பெற்றோர்கள் .அவர்களது பேச்சை மீறி பூலோகம் புறப்படுகிறார் நட்சத்திரா அதனால் கோபமுறும் கந்தர்வராஜ் நீ சிலையாகிப் போவாய்… என சாபமிட்டு அனுப்ப, அதன்படி அழகிய தங்க சிலையாகி பழம்பெருமை வாய்ந்த ஆந்திரா அமராவதி மாகாண

ஆற்றுபடுகையில் புதையுண்டு போகும் நட்சத்திராவின் தங்க சிலையை கண்டெடுக்கும் ஹரீஷ் பாய்- ஷாயாஜி ஷிண்டே அண்ட் கோவினர் அதை பல கோடிக்கு ரூபாய்க்கு அயல் நாட்டு சிலை கடத்தல் கும்பலுக்கு விலை பேசி சென்னைக்கு நானி – நாக அன்வேஷ், கிரி-சப்தகிரி பொறுப்பில் அனுப்பி வைக்க, ஹீரோ நாக அன்வேஷின் புகழ்ச்சி உரையால் சாப விமோசனம் பெற்று, தேவதை பெண்ணாக மாறும் ஹேபா பட்டேல், நாக அன்வேஷின் அன்பிலும் ,அரவணைப்பிலும், தான்., விரும்பிய பூலோக வாழ்க்கையை விரும்பியபடியே வாழ்ந்தாரா ? இல்லையா..? என்பதும், இறுதியில் இவர்களது காதல்,பூலோக (ஷாயாஜி ஷிண்டே…) ,வின்னுலக ( சுமன்…) தடைகள் பல கடந்து கைகூடியதா? இல்லையா.? என்பதும் தான் “விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல்.” படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்பு மான கதையும் களமும்! 

காட்சிப்படுத்தல்: சரஸ்வதி பிலிம்ஸ் “செந்தூரப்பூவு” கிருஷ்ணா ரெட்டியின் தயாரிப்பு மற்றும் திரைக்கதையில், “பாகுபலி “கே.பழனியின் கதை, இயக்கத்தில் வி.பிரபாகரின் வசனவரிகளில், நாக அன்வேஷ் – ஹேபா பட்டேல் எனும் அறிமுக ஜோடியுடன், சுமன், ஷாயாஜி ஷிண்டே, பிரதீப்ராவத், “பிதாமகன்” மகாதேவன், கபிர்சிங், தெலுங்கு காமெடியன் சப்தகிரி உள்ளிட்ட பிரபல நட்சத்திங்கள் நடிக்க, வெளிவந்திருக்கும் “விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல்.” திரைப்படத்தில் லவ், ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் ஆகியவற்றுடன் மெஸேஜையும் கலந்து கட்டி, அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சமாக காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டிற்குரியது. 

  வாழ்க்கை என்பது மிகவும் குறுகிய காலம். அதில் விரைந்து சம்பாதித்து செட்டிலாக வேண்டும என்ற எண்ணம் கொண்ட கதாநாயகராக நாக அன்வேஷ்,நானி எனும் பாத்திரத்தில் அசத்தி யிருக்கிறார். அவரது துறுதுறு பார்வையும், விறுவிறு நடிப்பும் இப்படத்திற்கு பெரும் பலம். ஹேபா பட்டேல் சிலையை பார்த்து போதையில், “இந்த மாதிரி பொண்ணு என் வாழ்க்கையில் கிடைச்சால் அவகாலுக்கு மண் கூட ஒட்ட விடமாட்டேன்…..” எனும் “பன்ச் ” டயலாக்குடன் கூடிய அவரது பொயடிக் காதலும், காமெடி நண்பர் சப்தகிரி உடனான சிரிப்பு சரவெடி காமெடிகளும் ஹாசம். 

  தேவலோகத்து அழகு சுந்தரி நட்சத்திராவாகவும், பூலோக நற்குணம் நிரம்பிய நந்துவாகவும் அறிமுகம் ஹேபா பட்டேல், தேவதை போன்ற அழகுமுகம் மட்டுமல்ல.. இப்படத்திற்கும் கதைக்கும் கூடுதல் பலம் சேர்க்கும் முகமும் கூட!   நாயகரின் நண்பராக வந்து எக்கச்சக்க உதார் விடும் கிரியாக தெலுங்கு காமெடியன் சப்தகிரியின் நடை, உடை, பாவனைகள் மற்றும் காமெடிகள் நிச்சயம் பெரியவர்களுக்கும் சிரிப்பு மூட்டும்… என்றால் மிகையல்ல. 

பிற நட்சத்திரங்கள்: நாயகியின் தேவலோகத்து அப்பா கந்தர்வராஜ் ஜாக சுமன், சிலை கடத்தல் ஹரிஷ் பாயாக ஷாயாஜி ஷிண்டே, கிராமத்து வட்டி ராஜா -பிரதீப்ராவத், பூலோகநாயகி நந்துவின் அப்பா – “பிதாமகன்” மகாதேவன், கழுகு-கபிர்சிங், ஆகிய நட்சத்திங்கள் அனைவரும் இயக்குனர் எதிர்பார்த்ததை சிறப்பாக செய்து ரசிகனை திருப்திபடுத்தியிருக்கின்றனர் சபாஷ்! 

தொழில்நுட்பகலைஞர்கள்: வி.பிரபாகரின் வசனவரிகளில் “லட்சுமி கணபதி பிலிம்ஸ் தயாரிப்பில், “சொர்க்கலோகத்து ராணி கேனப் பய ஞானி… ” என்பது உள்ளிட்ட ‘டயமிங்’ வசனங்களும், “லைப்ல சின்ன சின்ன ஆனந்தத்தை தேடித்திரிந்த நான், கூட வே இருந்த இந்த அற்புதத்தை கண்டுக்காம விட்டுட்டேன்….” என்பது உள்ளிட்ட அர்த்தபுஷ்டி வசனங்களும், கிடைத்த கேப்பில் கிடாவெட்டும் அரசியல் நையாண்டிகளும் படத்திற்கு பெரிய ப்ளஸ்! குணாவின் ஒளிப்பதிவில் பெரிதாக குறை ஏதுமில்லை! பீம்ஸின் சினேகனின் வரிகளில், “சின்ன சின்ன கண்களாலே…. “, “ஏ புள்ள அமராவதி… ” , “ஹாயி ஹாயி ஏஞ்சல்….” உள்ளிட்ட பாடல்கள் ஹம்மிங் செய்ய தூண்டும் ராகங்கள். பின்னணி இசையும் பீம்ஸை தமிழ் திரையுலகில் பேச வைக்கும். 

  வி.பிரபாகரின் வசனவரிகள் படத்திற்கு பலம். அதே மாதிரி, “மொக்க வண்டிக்கு என்னால் தனியா பஞ்சர் போட முடியாது 4 பேர் வேணும் என்றபடி சின்னவன், பெரியவன், நடுவுள்ளவன்…..”என குவாட்டர் பாட்டில், வாட்டர் பாட்டில், கூல்ட்ரிங்ஸ் பாட்டில்களை அடுக்கி சிலேகிக்கும் ஒப்பனிங் காமெடியில் தொடங்கி” இந்த பொண்ணு எங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக் இல்லையான்னு… பார்க்க வந்த பொண்ணு… என புருடா விடுவதில் தொடர்ந்து நித்யானந்தா சாமியாரின் சீடர் என கூசாமல் பீத்திப்பது வரைகிரியாக வரும் சப்தகிரி ஜமாய்த்திருக்கிறார். காமெடியில் கலாய்த்திருக்கிறார்…. என்பது கூடுதல் பலம்.   வசன உச்சரிப்புகளில் சற்றே தெலுங்கு வாடை வீசுவது மட்டும் கொஞ்சம் பலவீனம். 

  இப்படத்திற்கு, கதை எழுதி இயக்கியிருக்கும் கே.பழனி “பாகுபலி” படத்தில் ராஜமெளலியின் உதவியாளராம். மெகா பட்ஜெட் குருநாதரின் பெயரை இந்த மினிமம்பட் ஜெட்டில் பெரிதாகவே காபந்து செய்திருக்கிறார் “பாகுபலி” கே.பழனி என்றால் மிகையல்ல! வின்னுலகம் பற்றிய, புராண கதையோடு பூலோக வாழ்க்கையையும் கலந்த முழு நீள லவ், ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் கலந்த கதையில் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், விவசாயிகளின் இன்றைய நிலையையும் மிக அழகாக பேசி அவர்களுக்கு, அனைவரையும் ஆதரவு அளிக்கக் கோரும், சாமர்த்தியத்திற்காகவே இயக்குனர் கே.பழனியையும் இப்படத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.   மொத்தத்தில், சூப்பர் மெஸேஜ் உடன் வெளிவந்திருக்கும் “விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் – ‘தியேட்டரில் நிச்சயம், வசூலில் ஏஞ்சல்! “

இது எனது  தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரை அரங்குக்கு   சென்று திரைப்படத்தை பார்க்கவும்

எழுதியவர்-டி.ஹைச்.பிரசாதத்..பி4யு/ ரேட்டிங்- 2/5