தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்

சென்னை, பிப். 12– தமிழக சட்டசபையில் இன்று நடந்த கோலாகல விழாவில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முழு உருவப்படம் திறக்கப்பட்டது.முதலமை ச்சர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால், ஜெயலலிதா படத்தை திறந்து வைத்தார்.அப்போது அவையில் பங்கேற்ற அனைவரும் ‘அம்மாவின் புகழ் ஓங்குக’ என்று குரல் எழுப்பி கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.இந்த நிகழ்ச்சியின்போது, சட்டசபையில் ஜெயலலிதா பேசிய பேச்சுக்கள் ஒலிபரப்பப்பட்டன.

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்

சட்டசபையில் ஏற்கனவே 10 தலைவர்கள் படம் வைக்கப்பட்டுள்ளது. இன்று 11வது படமாக ஜெயலலிதாவின் முழு உருவ படம் திறக்கப்பட்டுள்ளது.6 முறை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, சட்டசபையில் மக்கள் நலனுக்காக தமிழக வளர்ச்சிக்காக ஏராளமான புதுப்புது திட்டங்களை அறிவித்து நிறைவேற்றினார்.உலகம் போற்றும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். பல்வேறு துறைகளில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்கி சாதனை படைத்தார்.

புதிய வரலாறு படைத்த ஜெயலலிதாவின் படம் சட்டசபையில் திறக்க முடிவு செய்யப்ப ட்டது.அதன்படி இன்று காலை சட்டசபையில் ஜெயலலிதாவின் முழு உருவ படம் திறக்கப்ப ட்டது.இந்த நிகழ்ச்சிக்கு காலை 9.29 மணிக்கு வந்த சபாநாயகர் தனபால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பார்லிமெண்ட் துணை சபாநாயகர் மு. தம்பிதுரை, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் ஆகியோரை சட்டசபை செயலாளர் க. பூபதி உள்ளே அழைத்து வந்தார்.அப்போது அவைக்கு வந்திருந்த அனைவரு ம் எழுந்து நின்றார்கள். பின்னர் 6 பேரும், வழக்கமாக சபாநாயகர் இருக்கும் மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தனர்.

பின்னர் தமிழ்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது.சபாநாயகர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உட்பட 6 பேருக்கும் மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தி யநாதனுக்கும் சட்டசபை செயலாளர் பூபதி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
இதன் பின் 9.34 மணிக்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்று பேசினார். இதனையடுத்து படத்திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. சபாநாயகர் தனபால் பொத்தானை அழுத்தி ஜெயலலிதா படத்தை திறந்து வைத்தார்.ஜெயலலிதாவின் படம் சபாநாயகர் இருக்கைக்கு வலது புறம், ஆளுங்கட்சி வரிசையின் மேலே, எதிர்க்கட்சி வரிசைக்கு நேர் எதிரே வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா படம் திறக்கப்பட்ட போது மங்கல இசை இசைக்கப்பட்டது ஜெயலலிதா விரும்பும் பச்சை கலர் புடவையுடன் அவரது படம் மிக அருமையாக வரையப்பட்டிருந்தது. சிரித்தபடி அவர் கம்பீரமாக நிற்பது போன்று அந்த படம் மிக அழகாக வரையப்பட்டிருந்தது. படத்தை சுற்றி மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பெரிய ராட்சத ரோஜா மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.ஜெயலலிதா படம் திறந்தபோது, பட்டி தொட்டி எங்கும், கட்சி நிகழ்ச்சிகளிலும் ஏராளமானவர்களின் செல்போனில் ரிங்டோனாக உள்ள பிரபலமான பாடலான ‘‘தங்கத்தாரகையே வருக வருக, தமிழ் மண்ணின் தேவதையே வருக, வருக’’ பொன்மனம் இன்னொரு பொன் மனம் தானே’’ என்ற பாடல் ஒலிக்கப்பட்டது.அப்போது அங்கிருந்தவர்கள் கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.ஜெயலலிதா படத்தின் கீழ் அமைதி, வளம், வளர்ச்சி என்ற அவரது தாரக மந்திரம் எழுதி வைக்கப்பட்டிருந்தது.


விழாவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்று பேசினா ர். முத லமை ச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினா ர்கள் . ஜெயலலிதா படத்தை திறந்து வைத்து சபாநாயகர் ப. தனபால் பேசினார். இறுதியாக அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் நன்றி கூறினார்.நாட்டுப் பண் இணைக்க விழா நிறைவடைந்தது. 9.30 மணிக்கு துவங்கிய படத் திறப்பு விழா 10.53 மணிக்கு முடிடைந்தது.
விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர்ஓ .பன்னீ ர்செல்வம், பார்லிமெண்ட் துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு சபாநாயகர் தனபால் நினைவு பரிசு வழங்கினார்.

சபாநாயகர் தனபாலுக்கு முதலமைச்சரும், துணை முதல மைச்சரும் சேர்ந்து நினைவு பரிசு வழங்கினார்கள்.ஜெயலலிதா படம் 7 அடி உயரம் 5 அடி அகலமாகும். இந்த படத்தை மிகவும் தத்ரூபமாக, அழகாக சென்னையை சேர்ந்த ஓவியர் டி. மதியழகன் வரைந்திரு ந்தார். இந்த படம் வரைய 3 மாதம் காலம் ஆனது என்றும், இதுபோன்று பல்வேறு தலை வர்களின் படங்களை வரைந்திருப்பதாகவும் மதியழகன் கூறினார்.விழாவில்  ஓவியர் மதியழகனுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசை சபாநாயகர் வழங்கி பாராட்டி னார்.விழா முடிந்ததும், விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பேர், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், பார்வையாளர்கள் அனைவரும் ஜெயலலிதா படத்தை தங்கள் செல்போனில் படம் பிடித்து கொண்டார்கள். பலர் ஜெயலலிதா படத்துடன் மகிழ்ச்சியாக ‘செல்பி’ எடுத்து கொண்டனர்.சட்டசபைக்கு வெளியே அண்ணா தி.மு.க.வினர் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

படத்திறப்பு விழாவில் அனைத்து அமைச்சர்கள், அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பி னர்கள், பார்லிமெண்ட் உறுப்பினர்கள், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய் சுந்தரம், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் இ.மதுசூதனன், ஆர். வைத்திலிங்கம் எம்.பி., பொன்னையன், கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், பா.வளர்மதி, எஸ். கோகுல இந்திரா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.கந்தன்,   கே.குப்பன், சுப்பு ரத்தினம், ராஜலட்சமி, பளையங்கோட்டை தர்மலிங்கம், முன்னாள் துணை  சபா நாயகர் வரகூர் அருணாசலம்,

முன்னாள் வக்ப் வாரிய தலைவர் அ. தமிழ்ம கன் உசேன், முன்னாள் வாரிய தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான நா.பாலகங்கா, முன்னாள் எம்.பி.க்கள் சிட்லபாக்கம் ராஜேந்தி்ரன், மனோஜ் பாண்டியன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் டி.சிவராஜ், நீலாங்கரை முனுசாமி, எம்.எம்.பாபு, வேளாங்கண்ணி, அஞ்சுலட்சுமி மற்றும் அட்வகேட் ஜெனரல் விஜயநாராயணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வி.எஸ். சேதுராமன், அரவிந்த் பாண்டியன், சம்பத், எஸ்.ஆர். ராஜகோபால், எஸ்.டி. மூர்த்தி, மணி சங்கர், பப்ளிக் பிராசிகியூட்டர் எமிலியாஸ் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்து கொண்டனர்.