ஏண்டா தலையில எண்ண வெக்கல …திரைபட விமர்சனம்-;

ஏண்டா தலையில எண்ண வெக்கல …திரைபட விமர்சனம்-;

நடிகர்கள் , நடிகையர் -;

 அஸ்ஸார், சஞ்சீதா ஷெட்டி, யோகி பாபு, மன்சூர் அலி கான், உமா பத்மநாபன், முத்துராமன், அஸ்ஹார், ஈடன் குரியகோஸ், சிங்கப்பூர் தீபன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் –;

இயக்குனர்- விக்னேஷ் கார்த்திக் ,, தயாரிப்பாளர்-ஏ. ஆர். ரெஹான், சுபா தம்பி பிள்ளை, இண்ட்ரான் அசிர்தம், இசை – ஏ.ஆர். ரெஹானா, ஒளிப்பதிவு வம்சிதரன் முகுந்தன், எடிட்டர்- சி. பிரேம், தயாரிப்பு நிறுவனம்-யோகி மற்றும் பங்குதாரர்கள் மற்றும் பலர் பனியற்றனர்
 

திரைபடத்தின் கதை-;

சஞ்சிதா ஷெட்டிக்கும் அதே, அதே .இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணத்திற்கு சில நாட்களே இருக்கும் சமயத்தில் ஹீரோவுக்கு அசரீரி மாதிரி , நான் தான் எமன் பேசுகிறேன் என ஒரு அபசகுணவாய்ஸ் கேட்கிறது .இன்னும் நான்கு நாட்களில் ., “நீ சாகப்போகிறாய் …..” அது நடக்கக்கூடாதென்றால் நான் சொல்லும் டாஸ்க்கை எல்லாம் நீ செய்தாக வேண்டும் ….. என்கிறது. நாயகர் அசார் ., அந்த வாய்ஸ் சொன்ன கடினமான டாஸ்க்குகளை எல்லாம் செய்தாரா ?உயிர் பிழைத்தாரா ..? சஞ்சிதாவை கரம் பிடித்தாரா …? இல்லையா ….? என்பது தான் “ஏண்டா தலையில எண்ண வெக்கல … “. படத்தின் மீதிக் கதை மொத்தமும்! 

பாடத்தின்  முன்னோட்டத்தை பார்க்கவும்-;

 திரைபட விமர்சனம்-;

    ஜோலி இல்லாத ஜாலி நாயகனின் காதல, விதி, மதி, சதியைத் தாண்டி கைகூடியதா ? இல்லையா ..? என்பதே இப்படக்கரு!   இன்ஜினியரிங் படித்திருந்தும், இங்கிலீஷையே தமிழில் பேசினால் தான் புரிந்து கொள்ளும் ஞான சூன்யங்கள்… நாயகர் அசாரும் , அவரது நண்பர் சிங்கப்பூர் தீபனும்.வேலை வெட்டித் தேடி ஐ.டி கம்பெனிகள் படி ஏறி இறங்கும் இவர்களில் ஹீரோ அசாருக்கு ஐ.டி அழகி சஞ்சிதா ஷெட்டி யைக் கண்டதும் காதல். 

 

சஞ்சிதா ஷெட்டிக்கும் அதே, அதே .இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணத்திற்கு சில நாட்களே இருக்கும் சமயத்தில் ஹீரோவுக்கு அசரீரி மாதிரி , நான் தான் எமன் பேசுகின் என ஒரு அபசகுணவாய்ஸ் கேட்கிறது .இன்னும் நான்கு நாட்களில் ., “நீ சாகப்போகிறாய் ” அது நடக்கக்கூடாதென்றால் நான் சொல்லும் டாஸ்க்கை எல்லாம் நீ செய்தாக வேண்டும் ….. என்கிறது. நாயகர் அசார் ., அந்த வாய்ஸ் சொன்ன கடினமான டாஸ்க்குகளை எல்லாம் செய்தாரா ?உயிர் பிழைத்தாரா ..? சஞ்சிதாவை கரம் பிடித்தாரா …? இல்லையா ….? என்பது தான் “ஏண்டா தலையில எண்ண வெக்கல … “. படத்தின் மீதிக் கதை மொத்தமும்! 

  அசார் , சஞ்சிதா ஷெட்டி , சிங்கப்பூர் தீபன் ,ஈதள், யோகி பாபு , உமா பத்மநாபன் , முத்து ராமன் , அர்ச்சனா , ஸ்ரீராம் , மாயா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடிக்க ., சுபா தம்பி பிள்ளை , யோகி தம்பி பிள்ளை தயாரிப்பில் “கிரிடிட் டைட்டில்ஸ்” எனும் பேனரில் ஏ.ஆர் ரெஹானா இசையில் , விக்னேஷ் கார்த்திகின் எழுத்து இயக்கத்தில் வந்திருக்கும் “ஏண்டா தலையில எண்ண வெக்கல .. ” வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து சற்றே மாறி ,வித்தியாசமான கதையம்சத்துடன் காட் சிப்படுத்தப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது! 

 இன்ஜினியரிங் படித்திருந்தும் ., இங்கிலீஷையே தமிழில் பேசினால் மட்டுமேபுரிந்து கொள்ளும் ஞான சூன்யமா க… நாயகர் அசார் கச்சிதம்., வேலை வெட்டித் தேடி இவர் பண்ணும் அலப்பறையில் தொடங்கி ., டாஸ்க் கட்டளைக்கு பயந்து இவர் பண்ணும் கலாட்டாக் கள் வரை சகலமும் ரசனை  நாயகியாக ஐ.டி அழகியாக சஞ்சிதா ஷெட்டி ., யூத்துக்கு ஏற்றதாய் படம் முழுக்க பூத்து குலுங்குகிறார். காமெடியன்ஸ் : நாயகரின் காமெடி நண்பர் சிங்கப்பூர் தீபனும்.

வேலை வெட்டி இல்லாத வாலிபராக பல இடங்களில் காமெடியாக கவருகிறார். ஆனால், படம் முழுக்க வரும் இவரைக் காட்டிலும் ., ரோட்டில் நாயகருக்கு ” பச்சக் “என லிப் டூ லிப் முத்தம் கொடுத்து விட்டு எல்லாம் டாஸ்க் , டாஸ்க் எனும் விஜய் டி.வி- “கே.பி.ஒய் ” ராமரும், “செய்வதெல்லாம் நன்மை ” எனும் டி.வி. ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் பாத்திரத்தில் வந்து அந்த ப்ளாஷ்பேக் காட்சியில் அர்ச்சனாவுடன் லூட்டி அடித்து விட்டு வந்து டி.வி.ரிப்பேர் என்றாலே அலறும் யோகி பாபுவும் செம காமெடி மிரட்டல் .   மற்றொரு நாயகியாக மந்திரி மகளாக ஈதள், நாயகரின் அம்மா உமா பத்மநாபன் , அப்பா முத்துராமன் , யோகியின் கள்ள ஜோடிஅர்ச்சனா , ஸ்ரீராம் , மாயாஉள்ளிட்ட நட்சத்திரங்கள் மொத்த பேரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ள னர். 

  சி.எஸ்.பிரேமின் படத்தொகுப்பில் முன் பாதியைக் காட்டிலும் பின் யாதி ஹாசம்!வம்சி தரன் முகுந்தனின் ஒளிப்பதிவு ஓவிய ப்பதிவாக ஒளிருகிறது! ஏ.ஆர் ரெஹானா இசையில் , “இமைக்காமல் கண்கள் நின்றது … “, “மனது தாயின் … ” ஆகிய பாடல்கள் மெலடி மிரட்டல்! 
  “ஏண்டா தலையில எண்ண வெக்கல … ” எனும் டைட்டிலும் , மொத்தப் படத்தின் புதுமைன காட் சிப் படுத்தலும் படத்திற்கு பெரும் பலம்.   அதே போன்று மேற்படி இரண்டு விஷயங்கள் தான் சற்றே இப்படத்திற்கு பலவீனமும் கூட . இயக்கம் : விக்னேஷ் கார்த்திக் ., தனது , எழு த்து இயக்கத்தில் “பசங்க இதைப் படிச்சா லட்ச லட்சமா சம்பாதிக்கலாம்னு சொன்னது …படிக்கிற நம்மை அல்ல,

நம்மை வைத்து காலேஜ் நடத்துறவனுங்கலை”, “நாலு முறை தற்கொலை செய்தும்தப்பிச்சுட்டேன்னா, எமனுக்கே உன் மூஞ்சி பிடிக்கலைன்னுதானே   “சாகனும்னு முடிவு செய்தவ.,அப்புறம் ஏன் ஆயுத பூஜைக்கு மாலை போட்ட லாரி மாதிரி இவ்ளோ அலங்காரம் பண்ணிருக்க?” என்பது உள்ளிட்ட காமெடி “பன்ச் ” கள் வாயி லாகவும், சில பல காம நெடி டயலாக்குகள் வாயிலாகவும் , யோகிபாபு – அர்ச்சனாவின் ஒற்றை காமெடி காட்சி வாயிலாகவும் இருபால் யூத் ரசிகர்களை பெரிதும் சுவர்ந்தி ருக்கி றார். அதே நேரம் சில டபுள் மீனிங் டயலாக்குகள் , காட்சிகள் .. குடும்பத்தோடு வந்திரு ப்போரை நெளிய வைப்பதை இயக்குனர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்.   “ஏண்டா தலையில எண்ண வெக்கல … ‘- ‘ பெருசா, ரசிகர்கள் தலையையும் .தடவுல .,’ – ‘அதே மாதிரி நெஞ்சையும் தொடலை !”

 இது எனது  தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரை அரங்குக்கு   சென்று திரைப்படத்தை பார்க்கவும்.

எழுதியவர்-டி.ஹைச்.பிரசாதத்..பி4யு/ ரேட்டிங்- 3/5