படம் வெளி வருவதற்கு முன்பே லாபம் பார்த்த இயக்குனரின் நண்பர்

படம் வெளி வருவதற்கு முன்பே லாபம் பார்த்த இயக்குனரின் நண்பர்

சீசர் என்கிற படம் வரும் 29ம் தேதி கன்னடத்தில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது .இப்படம் நான்கு மொழியில் ரிலீஸ் பண்ணலாம் என்ற முடிவோடு வேலைகள் ஆரம்பிக்க பட்டு உள்ளன.படம் பிரம்மாண்டமாக வந்துள்ளது .இதை தமிழில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்த

போது இயக்குனரின்சிபாரிசில் அவரது  நண்பர் MR .Mohamed Shaik  (திரு .மொஹமத் சாயிக் )முன் வந்துள்ளார் .இப்படத்தின் டப்பிங் பணிகளில் (டைட்டில் டிசைன் ,கிராபிக் வேலைகள் ,வாய்ஸ் டப்பிங் ,மக்கள் தொடர்பு ,தமிழ் டீஸர் டிசைன் ,ட்ரைலர் டிசைன்  )போன்ற பல பணிகளுக்கு சம்பளம் முறையாக கொடுக்க படவில்லை .வேலை செய்ததுக்கு ஊதியம் கேட்டால் அடுத்த படத்தில் கொடுக்கிறேன் என்று சொல்கிறார் .கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் உங்க  வேலை சரியில்லை முடிச்சதை பார்த்து கொள்ளுங்கள் என்கிறார்.வேலையை மற்றவருக்கு மாற்றி கொடுக்கிறார் .ஊதியம் தரப்படவில்லை .இவ்விசயம் படத்தின் இயக்குனருக்கு சமீபத்தில் தெரிவிக்க பட்டது . படத்தின் இயக்குனர் கண்டும் காணாமல் ஒரு பதிலும் சொல்லாமல் இருக்கிறார் .படம் ரிச்சா வந்திருக்கு என சொல்லியே தமிழ் டப்பிங்கில் வேலை செய்த பலருக்கு சரியான ஊதியம் வரவில்லை.இது கன்னட தயாரிப்பாளருக்கு  தெரியுமா….?ஒரு படம் வெற்றி பெறுவதே இங்கு ரொம்ப கஷ்டம் . படம் வெளி வருவதற்கு முன்பே லாபம் பார்க்கிற இயக்குனரின் நண்பர் சாமர்த்தியத்தை கண்டு வியக்காத்தான் வேண்டும் .