தோன்றுகிற சிந்தனையை அது கவிதையோ கதையோ, நகைச்சுவைத் துணுக்கோ எதுவானாலும் அவற்றை பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு பிரசுரத்துக்காக காத்திருப்பதெல்லாம் வழக்கொழிந்து வருகிறது.

தோன்றுகிற சிந்தனையை அது கவிதையோ கதையோ, நகைச்சுவைத் துணுக்கோ எதுவா னாலும் அவற்றை பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு பிரசுரத்துக்காக காத்திருப்பதெல்லாம் வழக்கொழிந்து வருகிறது.

தோன்றுகிற சிந்தனையை அது கவிதையோ கதையோ, நகைச்சுவைத் துணுக்கோ எதுவா னாலும் அவற்றை பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு பிரசுரத்துக்காக காத்தி ருப்ப தெல் லாம் வழக்கொழிந்து வருகிறது.

இப்போதெல்லாம் படைப்பாளிகள் தங்கள் படைப்பை தாங்களே பிரசுரித்துக் கொள் வதற்கு, உடனடியாக அவற்றுக்கான விமர்சனங்களை, லைக் என்கிற விருப்பக் குறியீ டுகளைப் பெற்று மகிழ்வதற்கு, இருக்கவே இருக்கின்றன சமூகவ லைத ளங்க ள்.அத்த கையை சமூகவ லைத ளங்களில் முதன்மையாக இருக்கக்கூடியது முகநூல்! அந்த முகநூலில் தன் நட்பு வட்ட த்திலுள்ள கவிஞர்கள் பதிவிட்ட கவிதைகளிலிருந்து சொல் வளமும் கருத்தாழமும் கொண்ட படைப்புகளைத் திரட்டி நூலாக்கம் செய்திருக்கிறார் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி.

நூல் அறிமுகம்
‘விருப்பக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்கள்.’  -தொகுப்பாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி

நூலுக்கு இலக்கிய ஆளுமைகளில் ஒருவரும் திரைப்பட இயக்குநருமான ராசி. அழகப்பன் ‘கடலை கைளால் அள்ளுகிறேன்’ என்ற தலைப்பில் மதிப்புரை வழங்கியிருக்கிறார். கவி ஞர் பாலசாண்டில்யன் ‘உதிரிப் பூக்கள் உணர்வுப் பாக்கள்’ என்ற தலைப்பில் அணிந்துரை எழுதி யிருக்கிறார். இவர்கள் இருவரும் நூல் குறித்த தங்கள் கருத்துரைகளுக்கு வைத் துள்ள தலைப்பே நூலின் தரத்தை எடுத்துச் சொல்வதாக இருக்கிறது.

ஒருவருக்கு ஒரு பக்கம் என ஒதுக்கப்பட்டு நூலில் மொத்தம் 53 படைப்பாளிகளின் கவி தைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒரு பக்க அளவிலான புதுக்கவிதைகள் உண்டு. பக்கத்துக்கு மூன்று என்ற எண்ணிக்கையிலும் நற்கவிதைகள் உண்டு. ஹைக் கூக்க ளுக்கும் இடமிருக்கிறது இந்த நூலில். அங்கங்கே மரபுக் கவிதைகளும் அணிவ குக்கி ன்றன. படைப்புகள் அத்தனையும் வாசிப்புக்கும் நேசிப்புக்கும் உரியதாக உள்ளன என்பதுதான் நூலின் சிறப்பு.

அவற்றிலிருந்து மாதிரிக்கு சில…

அவன் உயரத்தைவிட
சற்றே நீளமான நூலில்
காற்றாடியை கட்டியபடி
அதிவிரைவாய் ஓடும்
சிறுவனின் கண்களில்
அமிழ்ந்திருக்கிறதந்த
நீலவானம்! -துரை. நந்தகுமார், சென்னை

விடுமுறையில் நீ
காலியாகக் கிடக்கிறது
நெரிசல் நேரப்பேருந்து! -அரவிந்தன், சென்னை

தீபங்கள் எல்லாம்
பிரகாசிக்க
காத்திருப்பவைதான்
ஆனால் ஏற்றிவிட
சரியான தீக்குச்சிதான்
கிடைப்பதில்லை
-இரா. நிர்மலா, சென்னை

பார்த்துக்கொண்டே இருக்கும்படியான அழகான அட்டைப்படம், நூலில் கவிதைகளை இடம்பெறச் செய்திருப்பதில் நேர்த்தி, பங்கேற்றுள்ள கவிஞர்கள் முகநூலில் என்ன பெயரில் இருக்கிறார்கள் என்கிற விவரத்தையும் தொகுத்திருப்பது… இவையெல்லாம் நூலாக்கத்தின் மீது தொகுப்பாசிரியர் எந்தளவு ஈடுபாடு காட்டியிருக்கிறார் என்பதை காட்டுகிறது!

ரூ. 80 மதிப்புள்ள ‘விருப்பக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்கள்’ நுலினைப் பெற: