ராஜா ரங்குஸ்கி. பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

ராஜா ரங்குஸ்கி. பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
வாசன் புரொடக்சன் மற்றும் பர்மா டாக்கீஸ் தயாரிப்பில் மெட்ரோ சிரிஷ், சாந் தினி தமிழரசன் நடித்திருக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. யுவன் ஷங்கர் ராஜா இ சைய மை த்திருக்கும் இந்த படத்தை தரணிதரன் இயக்கியிருக்கிறார். வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடை பெற்றது.
தரணிதரன் சாரின் பர்மா, ஜாக்சன் துரை படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் எப்படி என்னை ஒரு போலீஸாக யோசித்தாரோ என்று தெரியவில்லை. அந்தகதா பாத்திரம் எனக்கு சவாலாக இருந்தது. முதலில் எனக்கு நம்பி க்கை யே இல்லை, ஆ னால் இயக்குனர் சொன்னபடி நடித்தேன், இப்போது படத்தில் பார்க்கும்போது நன்றாக இருக்கிறது. சாந்தினி வித்தியாசமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். சிரி ஷ் மிகவும் எளிமையாக பழகுபவர், நண் பர்களுக்கு நல்ல மரியாதை கொடுப்ப வர். யுவன் சார் படத்துக்கு தன் இசையின் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார் என்றார் நடிகர் கல்லூரி வினோத்.
 
சிரிஷ் சின்ன வயதில் இருந்தே எனக்கு பழக்கம். இந்த படத்தில் நான் நடிக்க கார ண மே சிரிஷ் தான். அவர் தான் இயக்குனரிடம் என்னை பரிந்துரை செய்தார். எ னக்கு இந் த படத்தில் பாராட்டுக்கள் கிடைத்தால் அவை இயக்குனரையே போய் சேரும் என்றா ர் நடிகர் ஜெயக்குமார்.
 
வஞ்சகர் உலகம் படத்தை தொடர்ந்து மீண்டும் இன்னொரு மர்டர் மிஸ்டரி படம். ஆ னால் இரண்டுமே வித்தியாசமான கதை. இந்த படத்திம் கதையை கூட கேட்க எனக் கு வாய்ப்பில்லை, உடனே ஓகே சொல்ல வேண்டியதாயிற்று. ஆனால் பட த்தில் நடி த்து முடித்தபோது தான் கதாபாத்திரம் பற்றி உணர்ந்தேன். சிரிஷ் நல் ல கதைகள் தேர் ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒரே டேக்கில் நடிக்கும் நடி கர். ஆனாலும் ஒரு ஷாட் டுக்கு மட்டும் 19 டேக் வாங்கினார். அது என்ன காட்சி என் பதை படத்தில் பார்த்து தெரி ந்து கொள்ளுங்கள். யுவன் ஷங்கர் ராஜா என் மு தல் படத்தில் ஒரு பாடகராக, எனக்கு ஒரு ஹிட் பாடல் கொடுத்தார், இப் போது இந்த படத்திலும் இசையமைப்பாளராக என க்கு ஒரு சூப்பர் ஹிட் பாடல் கொடுத்திருக்கிறார் என்றார் நாயகி சாந்தினி தமிழரசன்.
 
இந்த படத்தை ஆரம்பிக்கும் போது ஒரு அப்பாவியான முகம் தேவைப்பட்டது, அத ற்கு நான் பொருத்தமாக இருந்ததால் நடிக்க உள்ளே வந்தேன். முதல் விஷ யம் யுவ ன் சார் இசை தான் இந்த படத்துக்கு வேணும் என நான் ரொம்ப தீவிர மாக இருந்தேன். தயாரிப்பாளர், இயக்குனர், நான் மூவரும் அவரை போய் சந்தி த்தோம். அவர் கதை யை  கேட்டு உடனே ஒப்புக் கொண்டார். சாந்தினி நல்ல தோழி, நல்ல நடிகை. திடீ ரென ஒரு இக்கட்டான சூழலில், நான் அழை த்தத ற் காக கதையே கேட்காமல் நடிக்க வந்தார். என் மீதும், இயக்குனர் மீதும் அவர் வைத்திருந்த நம்பிக்கையை அது காட் டுகிறது. அவர் கதாபாத்திரம் மிக ச்சி றப்பாக வந்திருக்கிறது என்றார் நாயகன் மெட் ரோ சிரிஷ்.
 

மெட்ரோ படத்தின் இயக்குனர் ஆனந்த் என் நண்பர், அவர் மூலமாக தான் சிரிஷ் எனக்கு அறி மு கம். நானே இந்த படத்தை தயாரிக்கணும்னு ஆசைப்பட்றேன், எனக்கு நிதி உதவி மட்டும் தே வை என்றேன். தயாரிப்பாளராக சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்து விட் டோம். படத் துக்கு அ டையாளமாக ஒருவர் வேண்டும் என யோசித்தபோது, யுவன் சார் என் மனதுக்குள் வந்தார். பட் ஜெட் பற்றி யோசித்தோம், என்ன ஆனாலும் சரி முயற்சி செய்து பார்ப்போம் என நினை த்தோ ம். நாங்கள் எதிர்பார்த்ததை விட குறைவான தொகையை மட் டுமே கேட்டு, எங்களுக்காக பெரிய உத வியை செய்தார் யுவன். சிரிஷ் நல்ல நடிகர். திட்டமிட்டதை விட குறைந்த நாட்களில் படத் தை முடிக்க அவர் மிகப்பெரிய காரணம். சாந்தினி கற்பூரம் மாதிரி, சொன்னதை சரியாக புரிந்து கொண்டு நடிப்பை கொடுப்பார். தமி ழ் தெரிந்த நல்ல நடிகை, அவரே இந்த படத்துக்கு டப்பிங்கும் பேசியிருக்கிறார். எடிட்டர் இந்த படத்தில் தான் அறிமுகம் ஆகியிருக்க வேண்டியது, அதற்குள் மே யாத மான் ரிலீஸ் ஆகி பிரபலமாகியிருக்கிறார். கலை இயக்குனர் கபிலன் ஒரு இலங்கை தமிழர், சென் னைக்கும் இலங்கைக்கும் பறந்து பறந்து வேலை செய்திருக்கிறார். நிறைய நல்ல உ ள்ளங்களின் ஆதரவால் தான் இந்த அளவுக்கு வந்திருக்கிறது. 8 மாதத்தில் படத்தை முடித்து விட் டோம். ரிலீஸ் தேதியை நாம் முடிவு செய்தாலும் அதை இந்த சினிமாவில் சாத்தியப்படுத்த முடி வதில்லை. இதற்கு ஒரு தீர்வு கொண்டு வர வேண்டும் என்றார் இயக்குனர் தரணிதரன்.
இந்த சந்திப்பில் கலை இயக்குனர் கபிலன், எடிட்டர் முகமது அலி, நடிகர் விஜய் சத்யா, ஜெயக் குமார், தயாரிப்பாளர் சக்திவாசன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.