சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம்

சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம்

சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம்

சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.மேலும், கிராமப்புறங்களில் “முதல மை ச்சரின் வீட்டுக் காய்கறி உற்பத்தித் திட்டம்’ என்ற புதிய திட்டம் செயல்படுத்த ப்படும் எனவும் அவர் அறிவிப்புச் செய்தார்.

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு நிறைவு விழா, சென்னை நந்தனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. இந்த விழாவில் எம்.ஜி.ஆரின் முழு உருவப் படத்தைத் திறந்து வைத்து, அவரது உரைகள் அடங்கிய நூல்களையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார். இ தை த் தொடர்ந்து, அவர் ஆற்றிய உரையில் சென்னை மற்றும் பிற இடங்களுக்கு புதிய அறி விப்புகளை வெளியிட்டார். அவரது அறிவிப்புகள் விவரம்:-

சென் னையில் வசிக்கும் மக்களின் வீட்டுவசதித் தேவையை நிறைவேற்றும் வகையில், அனைத்துத் தரப்பினரையும் இலவசமாக அனுமதிக்கப்படும் தளப் பரப்பு இப்போதுள்ள 1.5-லிருந்து 2.0 ஆக மாற்றியமைக்கப்படும். ஊக்க தளப் பரப்பும் குறியீடும் உயர்த்தப்படும். இந் த மாற்றங்கள் வரும் திங்கள்கிழமை (அக்.1) முதல் நடைமுறைக்கு வரும்.

புதிய பன்னாட்டு விமான நிலையம்: சென்னை விமான நிலையம் வரும் 2024-ஆம் ஆண் டில் பயணிகள், சரக்கு போக்குவரத்து அம்சங்களில் முழு நிறைவை அடையும் என்பதால் புதிய விமான நிலையம் அமைப்பது அவசியமாகிறது. சென்னைக்கு அருகில் உலகத்தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.

தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளைச் சீரமைக்கும் பணி களைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளைச் சீரமைத்தல் கழகம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். இந்தக் கழகம் செய ல்பட ஏதுவாக, முதன்மைச் செயலாளர் நிலையில் தலைவர் மற்றும் நிர்வாக இயக் குநர் உடனடியாக நியமிக்கப்படுவர்.

காய்கறி உற்பத்தித் திட்டம்: தமிழகத்தில் கிராம ப்புற ங்களில் வசிக்கும் மக்கள், விவ சாயி கள் தங்களது வீடு அல்லது நிலத்தின் ஒரு பகுதியில் காய்கறிகள் உற்பத்தி செய்வதை ஊ க்க ப்படுத்த “முதலமைச்சரின் வீட்டுக் காய்கறி உற்பத்தித் திட்டம்’ என்ற புதிய திட் டம் ஏற்ப டுத்தப்படும். இந்த நிதியாண்டில் அது கிரா மப்புறங்களில் தொடங்கப்படும்.

புறநகர் மருத்துவமனை: தென்சென்னை புறநகர் பகுதியில் வசிக்கும் மக்களின் நலன் கரு தி, பள்ளிக்கரணையில் புறநகர் மருத்துவமனை அமைக்கப்படும். கீழ்ப்பாக்கம் அரசு மரு த்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆறு தளங்களைக் கொண்ட புதிய கட்டடம் கட்ட ப்ப டும்.

ரூ.482.22 கோடி சாலைத் திட்டங்கள்: சென்னை புறநகர் பகுதிகளில் ஏற்படும் போ க்கு வர த்து நெரிசலைக் குறைக்கும் விதத்தில், 45.15 கிலோமீட்டர் நீள முக்கிய சா லை களை அக லப்படுத்தி ரூ.344 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். விரிவாக்கப்பட்ட சென்னை மா ந கராட்சிப் பகுதியில் மூன்றாம் கட்டமாக ரூ.125.87 கோடியில் சாலை கட்டமைப்பு வச திகள் செய்யப்படும்.

தாம்பரம் கிழக்கு புறவழிச் சாலை ரூ.33.35 கோடியில் அமைக்கப்படும். மவுண்ட்-பூந்த ம ல்லி ஆவடி சாலையில் ஆவடி அருகே ரூ.12 கோடியில் ரயில்வே மேம்பாலம் அக லப் படுத் தப்படும். தில்லை கங்கா நகரில் ரயில்வே கீழப் பாலத்துக்குக் கூடுதலாக மேம் பாலம் கட் டும் பணி, சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி, சென்னை – திருத்தணி ரேணிகுண்டா சாலையில் ரயில்வே மேம்பாலம், சென்னை உள் வட்டச் சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகே நடை மேம்பாலம் ஆகிய வற்றுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அறிக்கை பெறப் பட்டவு டன் நிதிகள் ஒதுக்கி பணிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இந்த விழாவுக்கு, சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமை வகித்துப் பேசினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து உரையாற்றினார். மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முன்னதாக, தலைமைச் செய லா ளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார். தமிழ் வளர்ச்சி-செய்தித் துறை செயலாளர் ஆர். வெங்கடேசன் நன்றி தெரிவித்தார்.

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர்

ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள சுமார் 20.8 கிலோமீட்டர் நீளமுள்ள மவுண்ட்-பூந்த மல் லி-ஆவடி நெடுஞ்சாலைக்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நெடுஞ்சாலை என பெய ர் சூட்டப்படும்.சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்படும்.