“பரியேறும் பெருமாள்” சினிமா விமர்சனம்

“பரியேறும் பெருமாள்” சினிமா விமர்சனம்

நடிகர்கள் மற்றும் நடிகைகள்-;

கதிர்,‘கயல்’ ஆனந்தி, யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து,’கராத்தே’ வெங்கடேசன், மற்றும் தங்கராஜ் .பலர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்-;

இசை : சந்தோஷ் நாராயணன்,ஒளிப்பதிவு      : ஸ்ரீதர்,படத்தொகுப்பு : செல்வா R K,கலை : ரா மு,பாடல்கள்  ; விவேக் மற்றும் மாரி செல்வராஜ் ,நடனம் : சாண்டி,சண்டைப்பயிற்சி  : ஸ்ட ன்னர்’ சாம் ,இணை தயாரிப்பு : C. வேலன் மற்றும் R. ராகேஷ்  ,எழுத்து & இயக்கம் – மாரி செல் வராஜ் ,தயாரிப்பு -பா. இரஞ்சித் , நீலம் புரொடக்சன்ஸ் – பெருமையுடன் வழங்கும்   மற்றும்  பலர்.

தயவு செய்து ட்ரெய்லர் பார்க்கவும்-;

சினிமா விமர்சனம்-;

பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல் (மேலே ஒரு கோடு) என்ற அடைமொழியுடன் கம்பீரமாக சொல்லும் கதிர் தனக்கே உரித்தான கிராமத்து இளைஞனின் வாழ்வியலோடு நடக்கும் கொடுமைகளை பார்த்து கேள்வி கேட்க முடியாமல் மனதிற்குள்; புழுங்கும் ஏழை சராசரி இளைஞனாக வாழ்ந்திருக்கிறார். சமூக வேறுபாடு காரணமாக தனக்கு ஏற்பட்ட அவல ங்க ள், வேதனைகளை அவமானத்தை தாங்கிக் கொண்டு கோபத்தை அடக்கினாலும் இறு தியி ல் தன் தந்தைக்கு ஏற்படும் கொடுமையாக செயலைக் கண்டு பொங்கி எழுந்து சீறி வ ரும் காளையாக கதிர் தீப்பொறி பறக்கும் கண்களோடு ஆக்ரோஷமான நடிப்பில் மெய் சிலிர்க்க வைக்கிறார். பாராட்டுக்கள் இவரின் உயிரோட்டமான நடிப்பிற்கு விருதுகள் பல காத் திருக் கின்றன. சட்டக்கல்லூரி மாணவி ஜோதி மகாலட்சுமியாக கயல் ஆனந்தி கொஞ்சும் கிளி ப்பேச்சோடு, வெள்ளேந்தி குணத்தோடு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறி யா ககதிரை துரத்தி காதலிக்கும் அப்பாவி கிராமத்து பெண்ணாக அனைவரின் மனதில் இனி ய தோழியாக பசை போல் ஒட்டிக் கொள்கிறார்.

யோகி பாபு கதிரின் நண்பராக வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், கதிருக்கு பல விதங்களில் உதவிகள் செய்தும், சில இடங்களில் மெல்லிய புன்னகை மலரச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறார். வில்லனாக கராத்தே வெங்கடேஷ் வயதான தோற்றத்தில் தன் சமூகத்தில் வேறு சாதியில் காதலிப்பவர்களை கண்டுபிடித்து வித்தியாசமான தண் ட னை யை கொடுக்கும் பெரியவராக வரும் காட்சிகளிலெல்லாம் நடுநடுங்க வைக் கிறா ர்.கதிரை பழி வாங்க துடிக்கும் சக மாணவராக லிஜீஷ், ஆனந்தியின் அப்பாவாக பாசத்தால் தவி க்கும் மாரிமுத்து, கதிரின் அப்பாவாக ஒரு சீனில் நடித்தாலும் பளீர்ரென்று அறைந்து விட்டு போகிறார் சண்முகராஜன், கல்லூரி முதல்வராக படிப்பின் மரியாதையும், கௌ ரவத் திற் கும் எடுத்துக்காட்டாக வரும் பூராம், கதிரின் உண்மையான அப்பாவாக வரும் கரகா ட்டக் காரர் தங்கராஜ் தத்ரூபமான அற்புதமான நடிப்புக்கு அப்ளாஸ் மற்றும் எண்ணி லடங்கா கிராமத்து முகங்களோடு, கருப்பி நாய் உட்பட அனைவரின் பங்களிப்பு படத்தின் கதை யோ ட்டத்தை திக்குமுக்காட வைத்து விடுகிறது.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும் சரி, பிண்ணனி இசையும் சரி கிராமத்து யதார்த்தமான சூழலை நம் கண் முன்னே நிறுத்தி மெய் சிலிர்க்க வைத்து விடுகிறார்.
ஸ்ரீ தரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் மட்டுமல்ல படத்தின் ஒவ்வொரு காட் சிக் கும் அவரின் அபாராமான உழைப்பு தத்ரூபமான காட்சிகளை நம் கண் முன்னே கொண்டு வர எடுத்த முயற்சிகளுக்கு பாராட்டுக்களும், வெற்றிகளும் குவியும்.

எழுத்து,இயக்கம்-மாரி செல்வராஜ். தன் முதல் இயக்கத்திலேயே தயாரிப்பாளரான பா.ர ஞ்சிதிற்கு பெருமை சேர்த்து விட்டார் என்றால் மிகையாகாது. ஒவ்வொரு காட் சிக்கு ள் ளும் ஒரு கதையளவிற்கு ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது. சாதி வெறி பிடித்த மனித ர்களா ல் காதலர்கள் படும் அவல நிலையை பல படங்கள் சொல்லியிருக்கின்றன, ஆனால் த ன் தனி த்துவமான திரைக்கதையால் சுவாரஸ்யமான ஆனால் ஆழமான அப்பட்டமான காட்சி களால் அலற வைத்து விடுகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

கருப்பி நாய் மூலம் மனிதர்களின் கொடூர முகத்தை காட்டுவதும், எப்பொழுதுமே கெட்டதே நடக்கும் கதிருக்கும், எப்பொழுதுமே நல்லதே தெரியும் ஆனந்தியும், எந்த எதிர்பார்ப்பும் இ ல்லாத தன் சமூகத்தை காப்பாற்றுவதாக நினைத்து தான் எடுக்கும் காரிய த்தில் தவறு ஏற் ப ட்டால் உயிரையே மாய்த்து கொள்ளும் சாதி வெறி பிடித்த வயதான பெரியவரும், மக ளி ன் காதலுக்கும், சமூ கத்தின் அழுத்தத்திற்கும் பயப்படும் சராசரி தந்தையும், சாதியை மீறி ய நட்பும், நட்பால் ஏற்படும் அவமானத்தையும் தாங்கும் சக்தி யே பின்னர் காதலாக உரு வெ டுப்பதும், பெண் வேடம் போட்டு கரகாட்டம் ஆடி குடும்பத்தை காப்பாற்றும் பாசமிகு ஏழை த் தந் தை படும் அவலங்களை, கொடுமைகளை அழுத்தமான காட் சிகளால் தோலு றித்து காட்டியுள்ளார் இயக்குனர் மாரி செல் வராஜ்.

வித்தியாசமான கல்லூரிக் கதையை வேறு ஒரு கோணத்தில் காட்டி கனத்த இதயத்துடன் யாரையும் புண்படுத்தாத வண்ணம் ஆழ்ந்த தொலை நோக்கு பார்வையுடன் கொடுத் திரு க்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

இறுதிக் காட்சியில் தன் தந்தையை உயர்வாக நினைக்கும் ஆனந்தியின் மனதில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை கூறி எந்த களங்கமும் ஏற்படக்கூடாது என்று நினைக்கும் கதிரின் உயர்ந்த உள்ளத்தைக் கண்டு தலை குனியும் மாரிமுத்துவும், மாற்றம் ஏற்பட்டால் தான் வி டியல் எற்படும் என்பதை மாரிமுத்து, ஆனந்தி, கதிர் மூன்று பேரும் தூரத்தில் நடந்து போ க, அவர்கள் குடித்து வைத்த சாதா டீ டம்ளர், இடையேஒரு மல்லிப்பூ, பக்கத்தில் பிளாக் டீ டம் ளரை காட்டி சிம்;;;பாளிக்காக முடித்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

இக்கதை அன்றாடம் கிராமப்புறங்களில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் உண் மையான காரணத்தை காட்சிகளின் கோர்வையாக படம் முழுவதும் அள்ளித் தெளித் திரு க்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். வெல்டன் சிறப்பான படத்தை கொடுத்த இயக் குன ருக்கு வெற்றிகளும், வாழ்த்துக்களும் விருதுகளும் நிச்சயம் குவியும்.மொத்தத்தில் அனை வரும் பார்க்க வேண்டிய படம் மட்டுமல்ல ஆழ்ந்து சிந்திக்க வைக்கக் கூடிய கருத்தாழமி க்க படம் பரியேறும் பெருமாள்.

திருநெல்வேலியில் புளியங்குளத்தைச் சேர்ந்த பரியேறும் பெருமாள் (கதிர்)பாசத்தோடு வளர்க்கும் நாயை வேறு சமூகத்தைத் சேர்ந்த இளைஞர்கள் கொன்று விட, அதைத் தட்டி கேட்க முடியாமல் அவல நிலைக்கு தள்ளப்படுகிறார். தன் சமூகத்தைச் சேர்ந்த இளை ஞர்க ளின் வாழ்க்கை நிலை உயர வக்கிலுக்கு படிக்க பரியேறும் பெருமாள்(கதிர்) சட்டக்க ல்லூ ரியில் சேர்கிறார். அங்கே யோகிபாபு கதிரின் நண்பராகிறார்.கல்லூரியில் ஆங்கில த்தில் கற்க தடுமாறும் பெருமாளுக்கு(கதிர்) உதவி செய்கிறார் ஜோதி மகாலட்சுமி என்கிற ஜோ (ஆனந் தி). இந்த நட்பைக் கண்டு வெகுண்டெழும் ஆனந்தியின் சமூகம் கதிரை அவமா ன ப்படுத்தி அனுப்புகின்றனர். தனக்கு நேர்ந்த அவமானத்தை கதிர் தன் நண்பன் யோகிபா புக்கும், ஆனந்திக்கும் சொல்லாமல் மறைக்கிறார். ஆனந்தியிடம் பேசுவதை தவிர் த்து வில கிச் செல்கிறார் கதிர். ஆனால் ஆனந்தி கதிரை விரட்டி விரட்டி காரணம் கேட்க பதில் சொல்லாமல் நழுவுகிறார். இவர்களின் நட்பை காதல் என்றெண்ணி ஆனந்தியின் சமூகம் கதிரை கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர். இந்தக் கொலை வெறித் தாக்குதலிலிருந்து கதிர் தப்பித்தாரா? ஆனந்தி-கதிர் நட்பு காதலானதா? இறுதியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் நச்சென்ற க்ளைமேக்ஸ்.

This IS MY Personal Review So Please Go And Watch The Movie InTheaters Only

Written By- T.H.PRASAD -B4U-Ratting-5/5