நூலக கட்டிடங்கள் புத்தக வைப்பறைகளாக இருப்பதும், சமுதாய கருவறைகளாக மாறுவதும் நூலகர்களின் கைகளிலே!

நூலக கட்டிடங்கள் புத்தக வைப்பறைகளாக இருப்பதும், சமுதாய கருவறைகளாக மாறுவதும் நூலகர்களின் கைகளிலே!

நூலக கட்டிடங்கள் புத்தக வைப்பறைகளாக இருப்பதும், சமுதாய கருவறைகளாக மாறுவதும் நூலகர்களின் கைகளிலே!

இன்றளவும், அரசுகள் புதுப்புது புத்தகங்களை கட்டமைப்பதிலும், கட்டிடங்களை புதுப்பி ப்பதிலும் சீ¡¢ய முயற்சிகள் எடுத்தாலும், நூலகர்களை மேம்படுத்துவதிலும், அவர்களிடத் தில் தலைமைப் பண்புகளை வளர்ப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டி இருப்பதா ல், அரசுடன் இணைந்து ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும், இன்னும் பிற நூலக முன்னோடிகளுடன் இணைந்து எடுத்த முயற்சியே இந்த INELI (International Network of Emergin g Library In novators project). தனிப்பட்ட முயற்சியை விட, கூட்டு முயற்சியின் மூலமே மிகப் பொய வெற்றிகள் சாத்தியம் என்பதற்கிணங்க, தெற்காசிய நூலக பிரதிநிதிகளை ஒரு குடையின் கீழ் அமர்த்தி இணைய வழி கல்வி மூலமும், அனுபவ பகிர்வு மூலமும் பொது நூலகர்களின் தலைமைத்துவ பண்பை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.

புத்தகங்களை தாண்டி, சமுதாய சேவைகளை நோக்கி நூலகங்களை நகர்த்துவதற்கு, நூலகர்களை தயார்படுத்துவதும் இதன் பிரதான குறிக்கோள்.

கற்றல் திறன், ஆர்வம், சேவை மனப்பான்மையின் அடிப்படையில் இதுவரை இந்தியா, ஆப் கானிஸ்தான், நேபாளம், பாகிஸ்தான், மாலத்தீவு, இலங்கை, வங்காளதேசம் மற்றும் மியான்மர் போன்ற தெற்காசிய நாடுகளை சேர்ந்த 63 பலதரப்பட்ட அனுபவ நூலகர்கள் ஒரு குடையின் கீழ் இத்திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தை இந்தியாவை தாண்டி வி¡¢வுப்படுத்தும் புதுவொரு முயற்சியாக, INELI தெற்காசிய நூலக பிரதிநிதிகளை அறிமுகப்படுத்தும் இணைய அறிமுக விழா, ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று (20-03-2019) இனிதே நடந்தேறியது.

இந்த விழாவிற்கு இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை பேராசி¡¢யர் ம.சா. சுவாமிநாதன் அவர்கள் தலைமையேற்றார். இந்திய பொது நூலக இயக்க தலைவர் முனைவர் பஷீர் அஹமது சாத்ராக், ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் ந. அனில்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். திரு சாய்ராம், மாவட்ட மைய நூலகர், திருவண்ணாமலை பேசுகையில் எவ்வாறு தான் இணையம் மூலம் கற்ற திறன் கொண்டு பல தொடர் சேவைகளை செய்கிறார் என்றும், புதிய சேவையான பயிர் மருத்துவ முகாம், ரத்த சோகை ஒழிப்பு குறித்த சேவைகளை மேற்கொண்டார் என்பதை விளக்கினார்,

முனைவர் தீபமாலா, ஊர்புற நூலகர், வேடப்பட்டி, கோயம்புத்தூர் பேசுகையில் இத்திட்டம் தன்னுடைய ஆளுமைத்தன்மை பேசும் திறன் ¨தா¢யத்தை தந்தது எனவும், இதன் வாயிலா க தன் நூலகத்தில் மேலும் பலரை வரவழைக்க உதவியது என்பதை பகிர்ந்துக் கொண் டா ர், திருமதி ஷோபனா, மாநில மைய நூலகர், திருவனந்தபுரம் பேசுகையில் இந்த திட்ட ம்  எவ் வாறு அவரை நூலகத்தில் சமுதாய மேம்பாட்டு செயல்களை செய்ய தூண்டியது என் பதை பகிர்ந்துக்கொண்டார், திரு பினாய் மேத்தியு, வளப்பட்டிணம் பஞ்சாயத்து நூலகர் பேசுகையில் இத்திட்டம் மூலம் தான் பயின்றவற்றை சமுதாய மக்களுக்கு முறையான வழி யில் கொண்டு சேர்த்தமைக்காகவும் மற்றும் பல சேவைகள் செய்தமைக்காக கேரளா அரசங்கம் தானாக முன் வந்து,

இது வரை சிறிய இடத்தில் இயங்கி வந்த பஞ்சாயத்து நூலகத்தை நல்ல வசதியான பொ ¢யிடத்திற்கு மாற்றிக்கொடுத்தது என்பதை மகிழ்ச்சியுடன் கூறினார், மற்றும் சண்டிகரை சேர்ந்த முனைவர் நீசா சிங் அவர்களும், இத்திட்டத்தினால் தாங்கள் பயனடைந்த அனுப வங்களை பகிர்ந்து கொண்டனர். இவ்விழாவில் திருவொற்றியூர் தாலுகா நூலகர் திரு பெனிக் பாண்டியன், ஈரோடு மாவட்ட டிஜிட்டல் நூலகத்தை சேர்ந்த திருமதி ஷீலா, ஆந்தி ரா மாநிலத்திலுள்ள விஜயாநகர மாவட்டத்தை சேர்ந்த திரு ரமணா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இருபது தெற்காசிய நூலகர்களும், எட்டு வழிகா ட்டியாளர்களும் பங்கேற்றினார்கள்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும், இத்திட்டத்தை செயல்படுத்தும் ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.