பிரபல நடிகர் பிரபு மற்றும் நடிகை மதுபாலா நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

கடந்த 1996ம் ஆண்டு இயக்குநர் சீமான் இயக்கத்தில் வெளியான ‘பாஞ்சாலங்குறிச்சி’ திரைப்படத்தில் நடிகர் பிரபுவும், அவருக்கு ஜோடியாக நடிகை மதுபாலாவும் நடித்தி ருந்தனர்.

தற்போது 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரபு மற்றும் மதுபாலா புதிய திரைப்படத்தில் இணையவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கன்னடத்தில் வெளியான ‘காலேஜ் குமாரா’  திரைப்படத்தின் ரீமேக் படமாக இப்படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு மற்றும் மதுபாலா நடிப்பதாகவும், ஹீரோவாக தெலுங்கு நடிகர் ராகுல் விஜய் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவர் தெலுங்கு சினிமாவின் பிரபல சண்டை காட்சி இயக்குநர் விஜய்யின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இபடத்தில் நடிக்கவிருக்கும் இதர கதாபாத்திரங்கள் மற்றும் தொழி ல்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது.