கடாரம் கொண்டான் – திரை விமர்சனம்

கடாரம் கொண்டான் – திரை விமர்சனம்

நடிகர்கள் :

விக்ரம், அபி ஹசன், அக்ஷராஹாசன், லேனா குமார், விகாஸ் ஸ்ரீவத்சவ், செர்ரி மார்டியா, புரவலன், சித்தார்த்தா, ஜவஹர், ரவீந்திரா

தொழில்நுட்ப கலைஞர்கள்-;

ஒளிப்பதிவு: ஸ்ரீநிவாஸ் ஆர். குப்தா,படத்தொகுப்பு கே.எல். பிரவீன்,கலை: பிரேம் நவாஸ்
சண்டை பயிற்சி : கில்ஸ் கான்செல் , நரேன் , ரோனி,நடனம்: லலிதா ஷோபி,பாடல்கள் : வி வேகா , பிரியன்,இசை ஜிப்ரான்,இயக்கம் ராஜேஷ் எம். செல்வா,மக்கள் தொடர்பு: டைம ன்ட் பாபு , பி. யுவராஜ்,தயாரிப்பு: கமல் ஹாசன்,தயாரிப்பு நிறுவனம் : ராஜ்கமல் பிலிம் இ ன்டர்நேஷனல், ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்தரன்.

திரை கதை-;

மலேசியாவில் ஓரு அடுக்கு மாடி கட்டிடத்திலிருந்து இருந்து உடலில் காயங்களுடன் குதித் து தப்பிக்கும் ‘கேகே” வை(விக்ரம்) இரண்டு பேர் துரத்தும் போது விபத்திற்குள்ளாகி மயக் கமடைகிறார். போலீஸ், மயக்கத்தில் இருக்கும் அவரை மருத்துவமனையில் சிகிச்சை க் காக சேர்க்கிறார்கள். மயக்கத்தில் இருக்கும் கேகேயை போலீசார் விசாரிக்க வேண்டும் என்பதற்காக மருத்துவமனையில் போலீஸ் அவரை பாதுகாத்து வருகிறார்கள். அதே மரு த்து வமனையில் புதிதாக வேலைக்கு சேர்கிறார்; வாசு (அபிஹாசன்). அவர் மனைவி ஆதி ராவுடன் (அக்ஷரா ஹாசன்) மலேசியாவில் தனியாக வசித்து வருகிறார்.

நிறைமாத கர்ப் பிணியான ஆதிராவை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் நைட் ஷி ப்ட் வேலைக்கு செல்கிறார் அபி. இந்நிலையில் மருத்துவமனையில் கேகேயை யாரோ கொ லை செய்ய முயலும் போது, வாசு தடுக்கிறார். உயிருக்குப் போராடும் கேகேயை வா சு காப்பா ற்றுகி றார். வேலை முடித்து வீட்டிற்கு வந்தவுடன், யாரோ ஒரு நபர் வாசுவை அடித்துவிட்டு ஆதி ராவை கடத்திச் சென்று விடுகிறான். ஆதிராவை கடத்தியவன் கைப் பேசி மூலம் வாசு விடம் கேகேயை அந்த மருத்துவமனையை விட்டு வெளியே கொண்டு வரவேண்டும், இல் லை என்றால் உன் மனைவியை கொன்று விடுவேன் என மிரட் டுகிறா ன்.

விசாரணையில் கேகே தேடப்படடும் குற்றவாளி என்பது போலீசுக்கு தெரிய வரும் அதே நேரத்தில் அபி தன் மனைவியை காப்பாற்றுவதற்காக மருத்துவமனையிலிருந்து கே கேயை தப்பிக்கவிடுகிறார். அதனால் அபியும் போலீசாரால் தேடப்படும் முக்கிய குற்ற வாளியாகிறார். கேகேயை துரத்தியது யார்? கேகே யார், அவரை போலீஸ் ஏன் தேடு கி றது? ஆதிராவை வாசு காப்பாற்றினாரா? என்பது தான் ‘கடாரம் கொண்டான்” மீதிக் கதை .பல மொழிகளில் ரீ – மேக் ஆன பிரெஞ்சு படமான Pழiவெ டீடயமெ இப்போது தமி ழில் ‘கடாரம் கொண்டான்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;

திரைப்பட விமர்சனம்-;

ஏற்கனவே பல மொழிகளில் எடுக்கப்பட்ட ஒரு கதை இப்போது ‘கடாரம் கொண்டான்’ மூ லம் தமிழுக்கும் வந்திருக்கிறது. 2010ல் À bout portant என்ற பெயரில் ஒரு ஃபிரெஞ்சுத் திரை ப்படம் வெளியானது. அந்தப் படம் 2014ல் கொரிய மொழியில் ‘தி டார்கெட்’ என்ற பெயரில் ரீ – மேக் செய்யப்பட்டது. பிறகு ஹாலிவுட்டிலும் Point Blank என்ற பெயரில் ரீமேக் செய்ய ப்ப ட்டது. இதுதான் இப்போது தமிழில் ‘கடாரம் கொண்டான்’.மலேசியாவில் ஒரு மருத் துவம னையில் ஜூனியர் டாக்டராக பணிபுரிகிறான் வாசு (அபி ஹசன்). அவனது மனைவி ஆதி ரா (அக்ஷரா ஹாசன்) கர்ப்பிணி.இந்த நிலையில், காயத்துடன் யாராலோ துரத்தப்படும் ஒரு நபர் (விக்ரம்) விபத்திற்குள்ளாகிறார்.

அந்த நபர் வாசு பணியாற்றும் மருத் துவம னையில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப டுகி றா ர்.திடீரென ஆதிராவைக் கடத்தும் சில மர்ம நபர்கள், மருத்துவமனையில் சிகிச் சை பெ றும் நபரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வாசுவுக்கு நிபந்தனை விதிக் கிறா ர் கள்.அதன்படியே வாசு செய்ய முயலும்போது, நடுவில் சிலர் குறுக்கிட, எல்லாம் குளறுபடி யா கி விடுகிறது. முடிவில் வாசுவின் மனைவி மீட்கப்பட்டாளா, மருத்துவமனையில் சே ர்க் கப்ப ட்டிருக்கும் மர்ம நபர் யார், அவரைத் துரத்தியது யார் என்பதெல்லாம் மீதிக் க தை. ஒரு முழு நீள ஆக்ஷன் – த்ரில்லர் திரைப்படத்தை முடிந்த அளவு சிறப்பாகச் செய் திரு க்கி றார் ராஜேஷ். படத்தின் முதல் காட்சியிலிருந்து முடியும்வரை ஒரே வேகத்தில் தட தடக் கி றது திரைக்கதை.

ஆனால், படத்தின் பிற்பகுதியில் காவல்துறை அலுவலகத்திற்குள் நடக்கும் காட்சிகள் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றன.நாடு முழுவதும் தேடப்படும் இரண்டு குற்றவா ளிகள் சர்வ சாதாரணமாக காவல்துறை அலுவலகத்திற்குள் நுழைந்து, அடித்து துவம்சம் செய்கிறார்கள். அதேபோல, ஒரு சாதாரண ஜூனியர் டாக்டர், தன் மனைவியைக் காப் பாற்ற காவல்துறையின் கண்காணிப்பில் இருக்கும் ஒரு மர்ம நபரை, அதுவும் மயக் கத்தி லிருப்பவரை வெளியில் கொண்டுவந்து ஒப்படைக்க ஒப்புக்கொள்வாரா என்ற கேள் வி யும் இருக்கிறது. ஆனால், இந்த லாஜிக் மீறல்களையெல்லாம் கண்டுகொள்ளாவிட்டால் ரசி க்கக்கூடிய திரைப்படம் இது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, விக்ரமிற்கு சொல்லும்படியான ஒரு திரைப்படம். இந்தப் பட த்தில் அவருக்கான வசனம் பத்து வரிகள்தான் இருக்கும். இருந்தபோதும், பல காட் சிக ளில் உள்ளம் கவர்கிறார்.வாசுவாக வரும் நாசரின் மகன் அபிஹசனுக்கு இது நல்ல அறி முகம். மனைவியைத் தேடும் பரிதவிப்பை படம் முழுக்க சிறப்பாக செய்திருக்கிறார். அக் ஷரா ஹாசன் சில காட்சிகளிலேயே வந்தாலும் சொல்லத்தக்க பாத்திரம்.இந்தப் படத்தில் பின்னணி இசையும் ஒரு முக்கியப் கதாபாத்திரத்தைப் போலவே படம் முழுக்க வருகிறது. ஆனால், பல சமயங்களில் வசனங்கள் காதில் விழாத அளவுக்கு இருப்பதுதான் பிரச்ச னை .

ஒரு காட்சியில், எதிரியைத் தேடிப்போகும் விக்ரம், அங்கிருப்பவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்திவிடுகிறார். அந்தக் காட்சியில் பின்னணி இசை உச்சத்தில் ஒலிக்கிறது. எல்லோ ரையும் சுட்டு வீழ்த்திய பிறகு, அருகிலிருக்கும் ஒரு பெட்டியைப் பார்த்துச் சுடுகிறார். சட் டென இசை நின்றுவிடுகிறது. அந்தப் பெட்டியை படத்தின் துவக்கத்திலேயே சுட்டிருந் தால், வசனங்கள் ஒழுங்காகக் கேட்டிருக்குமே என்று தோன்றுகிறது.

இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற் திரை ப்படத்தை பார்க்கவும்

எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு 3/5