ரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள் ரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள்

ரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள் ரசிகர்கள் பேனர்க ள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள்

ரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள் ரசிகர்கள் பேனர்க ள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’, செப்டம்பர் 20-ம் தேதி திரை க் கு வரவுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சா யிஷா சைகல், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கான பத்தி ரிகையாளர் சந்திப்பு வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

இதில் சூர்யா அளித்த பேட்டி: கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 3-வது தடவையாக காப்பான் படத்தில் நடித்துள்ளேன். விவசாயம், அரசியலை பின்னணியாக வைத்து தயாராகி உள் ளது. பிரபலங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிற எஸ்.பி.ஜி., என்.எஸ்.ஜியை மையப்படுத்திய படம். நான் கமாண்டோ கதாபாத்திரத்தில் வருகிறேன். நமது கமாண்டோ படை வீரர்களி ன் உழைப்பை படத்தில் பார்க்கலாம்.

டில்லியில் 2 ஆயிரம் ஏக்கரில் உள்ள என்.எஸ்.ஜி. த லைமை அலுவலகத்தில் சிறப்பு அனும தி வாங்கி 3 நாட்கள் அங்கு தங்கி கதாபாத்திரத்துக்கு ஏற்ப என் னை மாற்றிக்கொ ண்டே ன்.

காப்பான் படம் நிறைய நாடுகளில் எடுத்தோம். என க்கு தனி மனிதனின் வளர்ச்சி பற்றிய சுயமுன் னே ற்ற கதைகள் மிகவும் பிடிக்கும். சமூகத்தில் நடந்து கொண்டு இருக்கும் இதுவ ரை பதிவு செய்யாத களம் கிடைத்தால் உடனே ஒப்புக்கொள்வேன். அப்படி அமைந்தது தான் காப்பான். ஒவ்வொரு மனிதனும் ஹீரோ தான். எல்லோருமே கற்றுக்கொண்டுதான் மேலே வருகிறோம். அப்படி சமூகத்துக்கு அதிகம் தெரியாத ஒரு பணியில் இருப்பவர்க ளை  பற்றிய கதைதான் காப்பான்.

காப்பான் இசை வெளீயீட்டு நிகழ்ச்சியில் ரஜினி என்னிடம் இது எத்தனையாவது படம் என்று கேட்டார். 37 என்று சொன்னதும் 37 தானா? என்று கேட்டார். முன்பு எல்லாம் ஒரே ஆ ண்டில் 20, 25 படங்களில் நடிப்பார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை என சொன் னார். எனக்கு அரசியல் வரும் எண்ணம் துளிகூட கிடையாது. என் படத்தில் வேண்டுமா னால் அரசியல் இருக்கலாம்.

குழந்தைகள், பெண்களை மையமாக வைத்து தயாராகும் படங்கள் குறைவாக உள்ளன. எனவேதான் குழந்தைகள் படங்களை தயாரிக்கிறேன். நானும் ஜோதிகாவும் விரைவில் புதிய படத்தில் இணைந்து நடிப்போம். 14 வருடங்களாக அகரம் கல்வி அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். கல்வி பற்றிய தெளிவு இருப்பதால் புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவித்தேன்.

 

கல்விமுறை பற்றிய எனது கருத்து 14, 15 ஆண்டுகளா க நான் தினம், தினம் பார்த்து அனு பவித்ததை தான் பேசினேன். நான் பேசியதில் சிலருக்கு மாற்றுக்கரு த்து இருக்க லாம். ஆனால் எனது கருத்து என் நேரடி அனுபவத்தில் இருந்து வந்தது. ஆண்டுக்கு சுமார் 15 ஆ யிரம் மாணவர்களை பார்க்கிறோம். அவர்கள் எந் த சூழலில் இருந்து வருகிறார்கள் என் பது தெரியும். இந்த விஷயங்கள் வந்தால் பாதிக்கப்படுவோம் என்ற பயமும் கவலையும் அவர்களிடம் இருந்தது.

நான் அவர்களுக்காக பேசவேண்டிய இடத்தில் இருந்தும் பேசவில்லை என்றால் எப்படி? எனவே அவர்களது குரலாக தான் நான் பேசினேன். கல்வியாளர்கள் எல்லோரும் பேசிக் கொண்டு இருந்ததுதான். அந்த மேடையிலேயே அவர்கள் பேசிய பின்னர்தான் நான் பே சினேன். நான் வெளிச்சத்தில் இருப்பதால் அது மக்களிடம் நன்றாக போய் சேர்ந்தது. தீ மை நடக்கிறது என்று தெரிந்தும் கூட அதை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதும் தீமை தான். கல்விக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டால் அது எனது வீட்டில் நடப்பதுதான். அதற்காக நி ச்சயம் குரல் கொடுப்பேன்.

மேலும் அவர் பேசியதாவது, அனைவருக்கும் கவலையளிக்கும் விதமாக ஒரு துயர சம்ப வம் நிகழ்ந்துள்ளது. என்னுடைய ரசிகர்கள், இரத்த தானம் உள்ளிட்ட நல்ல விஷயங்கள் செய்து வருவதை கவனித்து வருகிறேன். படம் வெளியாகும் போது கொண்டாட்டத்தில் ஈடுபடும் ரசிகர்கள் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். பேனர்கள் வைத்து தான் என்னை கவனிக்க வைக்க வேண்டும் என்பதில்லை. பேனர் வைக்க வேண்டாம் என நான் அடிக்கடி கூறியிருக்கிறேன். இனிமேலும் அது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

காப்பான் படத்தில் நடித்துள்ள ஆர்யா, சாயிஷா மற்றும் இயக்குனர் கே.வி ஆனந்த் ஆகி யோரும் விழாவில் கலந்து கொண்டனர்.