தொடர்ந்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு கோவாவில் நடந்த உண்மைச் சம்பவங்களை கொண்டு உருவாகி உள்ளது

தொடர்ந்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு கோவாவில் நடந்த உண்மைச் சம்பவங்களை கொண்டு உருவாகி உள்ளது

ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி “

Take Ok Creations என்ற பட நிறுவனம் சார்பில் பி.ராஜன் தயாரிக்கும் படம் ” மிரட்சி “

ஜித்தன் படத்தின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்த நடிகர் ஜித்தன் ரமேஷ் இந்த பட த்தின் மூலம் சவாலான வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த இனாசஹா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் அஜெய்கோஸ், சாய், சனா, நிக்கிதா அனில்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ரவி.V ,,எடிட்டர் – N.ஹரி,,,இசை – ஆனந்த்,,பாடல்கள், வசனம் – N.ரமேஷ்,, தயாரிப்பு – P.ராஜன்,,கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – M.V.கிருஷ்ணா 

படம் பற்றி இயக்குனர் M.V.கிருஷ்ணா கூறியதாவது..

முழுக்க முழுக்க திரில்லர் கதையாக உருவாக்கி இருக்கிறோம். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கோவாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடி ப்படையாக கொண்டு திரைக்கதை உருவாக்கப் பட்டுள்ளது. ஜித்தன் ரமேஷ் இதுவரை நடித்திராத ஒரு நடிப்பை இந்த படத்தில் பார்க்கலாம்.

 

 

படத்தில் உள்ள ஒட்டுமொத்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனை வரை யும் வைத்து தொடர்ந்து 3 நாட்கள் ஒருமணிநேரம் இடைவேளை விட்டு படப்பி டிப்பை நட த்தி இந்த படத்திற்கான கிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடித்தோம். தொ டர்ந்து 3 நாட் கள் படப்பிடிப்பு நடத்தியது மிகவும் சவாலானதாக இருந்தது. மிகவும் சிரமப்பட்டு எடுத்த அந்தக்காட்சிகளை திரையில் பார்க்கும் போது மிக பிரமிப்பாக இருக்கும். இந்த அதி தீவி ர திரில்லர் கதையை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது.இந்த மிரட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்து மிரளவைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. டப்பிடிப்பு முழுக்க முழுக்க கோவா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது, விரைவில் படம் வெளியாக உள்ளது என்கிறார் இயக்குனர் M.V.கிருஷ்ணா