மக்களிடையே தர்மசிந்தனை, சேவை மனப்பான்மையை வளர்க்க வேண்டும்: காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர்

மக்களிடையே தர்மசிந்தனை, சேவை மனப்பான்மையை வளர்க்க வேண்டும்: காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர்

பம்மல், சங்கரா மருத்துவ குழும விழா

மக்களிடையே தர்மசிந்தனை, சேவை மனப்பான்மையை வளர்க்க வேண்டும்:

காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் சென்னை, பம்மல், சங்கரா மருத்துவ குழுமம் சார்பில், பம்மல், பி.பி.ஜெயின் மருத்துவமனையின் பவள விழாவும், சங்கரா கண் மருத்து வமனையின் வெள்ளி விழாவும், காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் முன்னிலை யில், நேற்று நடந்தது. இதில், சங்கரா மருத்துவ குழுமத்தின் செயலர், விஸ்வநாதன், கிண் டி, எம்.ஜி.ஆர்., பல்கலை து ணைவேந்தர், சுதா சேஷையன், பொருளாளர், லக்ஷ்மணன், நிர் வாக அறங்காவலர், பி.பி.ஜெயி ன், நிர்வாக இயக்குனர், வி.சங்கர் மற்றும் பலர் பங்கேற்ற னர்.

விழாவில் டாக்டர். சுதா சேஷையன் பேசியதாவது:

கடந்த, 1970களில் பம்மல் மற்றும் நா கல்கே ணி ஆகியவை, வளர்ந்து வந்த கிராம பகு திகள். அந்த காலத்திலேயே, சங்கரா மருத்துவமனை துவக் கப்பட்டு, இன்று வரை மக் களுக்கு சேவை செய்து வருகிறது என் றால், அதற்கு, பலதரப் பட்டவர்களின் ஒத்துழைப்பு தான் காரணம். ராமாயணத்தில், ரா மருக்கு அணில் உத வியது போல், ஏழை, எளியோ ருக்கு நாம் உதவ வேண்டும்.சங்கரா குழுமம் இந்த அள விற்கு வளர காரண ம், காஞ்சி பெரியவரின் ஆசீர்வாதம் தான். இவ்வா று அவர் பேசினார்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் பேசியதாவது:

இன்று நடக்கும் இரண்டு விழாக்களும், காஞ்சிபுரம் மற்றும் சென்னைக்கு பெருமை சேர்க் கும் வகையில் அமைந்துள்ளன. 70க்கும் மேற்பட்ட மருத்துவ சேவை களில் ஈடுபட்டு வரும் சங்கரா குழும நிர்வாகிகள், நன்கொடையாளர்கள், ஊழியர்களுக்கு மரியாதை செய்தது, பெருமை அளிக்கிறது. ஒடிசாவில், சங்கரா மருத்துவமனை துவக் கப்பட்டு இயங்கி வருகி றது. விரைவில், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களிலும், இந்த மருத்துவ மனை யின் கிளைகள் துவங்க உள்ளன.நம் நாட்டில், சேவை மனப் பான் மை இயற்கையாகவே உள்ளது. தனியாக கட்டடங்கள், மண்டபங்கள் கட்டி, சேவை செய் வதை, சங்கரா நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.தமிழக மக்களின் மனதில், கருணை, ஈரம், பிறருக்கு உதவி செய்வது என்பது, அந்தந்த குடும்பத்தின் மூதா தையர் களால் கற்றுத் தரப்படு கிற து.தர்ம சிந்தனை, சேவை மனப்பான்மை வளர்க் கப்படுவது, கிராம, நகர இணை ப்புகளு க்கு பாலமாக அமை யும்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சி யில், பவள விழா குறித்த புத் தகத்தை காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் வெளி யிட்டார். சங்கரா குழும, மூத் த நிர்வாகிகள், நன்கொடையாளர்கள், பணியாளர்கள் உள் ளிட்ட அனைவரும் கவுரவிக்க ப்பட்டனர்.