கருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு கலைப்புலி எஸ். தாணு அவர்கள்..

கருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு கலைப்புலி எஸ். தாணு அவர்கள்..

அணி கிரியேஷன்ஸ் சார்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன் G, தயாரித்து இயக்கும் புதிய படத்தின் தலைப்பை பிரம்மாண்ட திரைப்படங்களைத் உருவாக்கித்தந்த பெருமைமிக்க தயாரிப்பாளர் திரு கலைப்புலி எஸ். தாணு அவர்களால் இணையதள பக்கங்களில் வெளி யிடப்பட்டது.

இப்படத்திற்கு படக்குழுவினர் “கருப்பு கண்ணாடி” என தலைப்பிட்டு இருக்கின்றனர். கருப்பு கண்ணாடி திரைப்படம் சைக்கோ த்ரில்லர் வகையை சார்ந்தது. இப்பட த்தில் கலைஞர் டிவி தொகுப்பாளர் தனிகை கதாநாயகனாகவும், புதுமுக நடிகை குவின்ஸி கதாநாயகியாகவும் நடிக்க உள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் சரன் ராஜ், நடிகர் கஜரஜ் , பாடகர் வேல்முருகன் நடிகை சுபாஷினி மேலும் சில முக்கிய பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

சம்சாத் இப்படத்தில் ஒளிப்பதிவாளராகவும், சித்தார்த்தா பிரதீப் இப்படத்தின் இசை அமை ப்பாளராகவும். . எழுமின், உருமி ஆகிய திரைப்பட ங்க ளின் படத்தொகுப்பாளராக பணியாற்றிய கார்த்திக் ராம் இப்படத்திற்கு படத்தொகுப்பா ளர் ஆகவும், மெட்ரோ மகே ஷ் இப்படத்திற்கான சண்டை காட்சிகள் வடிவமைப்பாளர் ஆகவும் பணியாற்ற உள்ள னர். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அதி விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.