பங்குனி 15 ஞாயிற்றுக்கிழமை, சிட்னியில் பிளாக்டவுனில் அமைந்திருக்கும் “போமன்” மண்ட பத்தில் ஆஸ்திரேலிய

பங்குனி 15 ஞாயிற்றுக்கிழமை, சிட்னியில் பிளாக்டவுனில் அமைந்திருக்கும் “போமன்” ம ண்ட பத்தில் ஆஸ்திரேலிய

ATFIA 2020 விருது நிகழ்வு விமர்சனம்:

பங்குனி 15 ஞாயிற்றுக்கிழமை, சிட்னியில் பிளாக்டவுனில் அமைந்திருக்கும் “போமன்” ம ண்ட பத்தில் ஆஸ்திரேலிய தமிழ்த்திரை கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக ATFIA 2020 விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் திரைத்துறை கலைஞர் களை கௌரவிக்கும் முகமாக நடந்த முதல் நிகழ்வு இதுதான் எனலாம், ஆகவே இவ்விழா வை நிகழ்த்திய நண்பர் சிட்னி பிரசாத் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும்.

அரங்கை அடைந்து உள்நுழைந்தோம், சிவப்பு கம்பள வரவேற்பு, ஒலி, ஒளிப்பதிவு கருவி களுடன் கலைஞர்களை கேள்விக்கணைகளுடன் வரவேற்றனர் குழுவினர். முடிந்து உள்நு ழைந்தோம், மீண்டும் சிவப்பு கம்பளம், எம்மை வெண்ணிறத்தில் அலங்கரிக்கப்பட்ட மே சை நாற்காலியில் அமரவைத்தனர். பொதுவாக, எம்மவர் நிகழ்வுகளில், நிகழ்ச்சியின் பெ யர் அச்சடிக்கப்பட்ட பதாகை (Name Banner), மேடையின் பின் திரையில் தொங் கவிட ப்ப ட்டிருக்கும், மேடையின் முன்புறம் இருபக்கமும் மின்விளக்கு கம்பங்கள் (Light Stands) மே டைக்கலைஞர்களை மறைத்தவாறு இருக்கும், அவ்வாறு இல்லாமல், புதிய தொழி ல்நுட்ப இலக்கமுறை திரையும் (Digital Screen), வண்ண வண்ண மின்விளக்குகளும், எதிர் பார் த்ததைவிட சிறப்பாகவும், கவர்ச்சியாகவும் இருந்ததோடு, எமது எதிர்பார்ப்பையும் அதி கரித்தது.

சரியாக ஐந்து இருபது மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது, ஆரம்பத்தில் பாதி நிரம்பி காட் சியளித்த மண்டபம், போகப்போக மீதியும் நிறைந்து, மண்டபம் நிறைந்த நிகழ் வாகவே அமைந்தது. மக்களுக்கு பரிச்சயமான இசைக்கலைஞர் சாரு ராமும், பல நாடக, நடன மே டைகளில் மக்களுக்கு அறிமுகமான சகோதரி நர்த்தனா பார்த்தீபனும் கலக லப் புடனும் நகைச்சுவையுடனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஏறக்குறைய ஐம்ப து திரை ப்ப டக் கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது, இத்தனை உள்ளூர் திரைப்பட படை ப்பா ளிகளும் கலைஞர்களும் ஆஸ்திரேலியாவில் ஒன்றாக கூடிய முதல் நிகழ்வு இதுவரை இதுவே என்று கூறலாம். விருதுகளுக்கிடையில் உள்ளூர் கலைஞர்களின் நடன நிகழ்ச் சிகளும், பாடகர்களின் அசத்தலான பாடல்களும் இடம்பெற்றன, கண்களுக்கும் செவி களுக்கும் வர்ண, வண்ண சுவையாக அமைந்திருந்தது, கண்ணுக்கும் செவிக்கும் மட்டு மல்ல, நிகழ்ச்சி முடிவில், வாய்க்கும் வயிற்றுக்கும் கூட சுவையான உணவு உபசரிப்பு அருமை, அருமை. கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட விருது கோப்பையின் தரம், திரைத் துறை வளர்ந்த நாடுகளில் திரைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் கோப்பைக்கு இணை யாக உயர்ந்ததாக இருந்தது.

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் மாபெரும் கலைஞர் திரு. ஏ. ரகுநாதன் அவர்களுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது, அத்தருணம் திரு. ஏ. ரகுநாதன் அவர்கள் அனுப்பிவைத்த நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்த ஒளிநாடா ஒளிபரப்பப்பட்டு, சபை யில் அனைவரும் எழுந்து நின்று கௌரவப்படுத்தியது மனதை தொடும் வண்ணம் இருந் தது. திரு. ஏ ரகுநாதன் அவர்கள், 2009 தில் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்து, நான் இயக் கிய, 2012 ல் திரையிடப்பட்ட, ஆஸ்திரேலிய முதல் தமிழ் திரைப்படமாகிய “இனியவளே காத்திருப்பேன் ” திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் 2018 ல் எனது இயக்கத்தில் உருவாகி வெளியான “சாட்சிகள் சொர்க்கத்தில்” படத்திலும் ஒரு முக் கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் அவருடைய பாகம் பிரான்ஸ் நா ட்டில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திரு. ஏ. ரகுநாதன் அவர்கள் 1963 இல் இலங்கையில் உருவாக்கப்பட்டு வெளியான நான் காவது படமான “கடைமையின் எல்லை” எனும் திரைப்படத்தில் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார், இப்படத்தை திரு. வேதநாயகம் அவர்கள் இயக்கி இருந்தார், பின் 1968 இல் “நிர்மலா” எனும் திரைப்படத்தை தயாரித்தார். தொடர்ந்து 1978 இல் வெளியான, இலங் கை யில் முதல் சினிமாஸ்கோப் திரைப்படமான “தெய்வம் தந்த வீடு” எனும் திரைப்படத் தில் நடித்திருந்தார். 05.05.1935 இல் பிறந்து, 84 வயதை தொட்டிருக்கும் அவர், 57 வருடங்க ளு க்குமேல் திரைத்ததுறையில் பயணித்து வருகிறார், இதுவரை 25 துக்கும் மேற்பட்ட தி ரை ப்படங்களிலும் 50 துக்கும் மேற்பட்ட குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். இப்படி ப்பட்ட ஒரு மாமனிதண் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததே எமக்கு பெருமை, அதிலும் அவ ருடன் பயணித்திருக்கிறோம் என்றால் அது நிச்சயம் எமது பாக்கியமே. திரு. ஏ ரகுநாதன் ஐயா அவர்களின் விருதை பெற, என்னை மேடைக்கு அழைத்திருந்தனர், அதனை நான் எனது வாழ்நாள் பெருமையாக எண்ணுகிறேன்.

சில வருடங்களுக்கு முன்வரை திரைத்துறை அநேகமானோரின் கனவுலகமாகவே இரு ந்தது, இன்று தொழில்நுட்பம் திரையுலகை, உள்ளங்கையில் கொண்டுவ ந்திருந்தாலும், கலைநுட்ப நிலைமாற்றம், ரசிகர்களின் ரசனையின் உருமாற்றம் போன்றவை, வெற்றி யை, எட்டித்தொடும் தொலைவிலன்றி, சற்று தொலைவிலேயே வைத்திருக்கின்றன என லாம். உழைப்பு, அர்ப்பணிப்பு, உண்மை, இவையுள்ள நேர்த்தியான ஒரு குழுவின் தெளி வான படைப்புகளே வெற்றியை எட்டித்தொடும் படைப்புகளாக அமைகின்றது. “இனிய வளே காத்திருப்பேன்” திரைப்படத்தை தொடர்ந்து, ஜூலியன், இளந்திரையன், N.S. த னா, மதிவாணன், தினேஷ் போன்றவர்கள் சில படைப்புகளை படைத்து திரைக்கு கொண்டு வந்தனர், மெல்ல மெல்ல திரைக்கலைஞர்கள் உருவாகினர். இதற்கிடையில் நான் இயக்கி ய ஐந்து குறுந்திரைப்படங்கள் சர்வதேச விருதுகள் பெற்றன.

என்னைப்போன்ற அனைத்துக்கலைஞர்களுக்கும் ATFIA விருது அங்கீகாரத்தையும் உற்சா க த்தையும் தந்தது என்றால் மிகையாகாது. தமிழர்களை ஒன்றிணைப்போம், தமிழ் கலை கலாச்சாரத்தை வளர்ப்போம் என்ற போர்வையில், மக்களிடையே பிரிவினைகளை வி தைத்து, அவரவர் வளர்ச்சிக்காக மட்டும் இயங்கிக்கொண்டிருக்கும் பல குழுக்களுக்கு வ ராத ஒரு சிந்தனை நண்பர் சிட்னி பிரசாத் அவர்களுக்கு தோன்றியது நிச்சயம் பாரா ட்டு க்குரியது. வெளிநாட்டுக் கலைஞர்களுக்கு ஆயிரம் ஆயிரமாக செலவுசெய்ய தயாரா க இருக்கும் பலர், உள்ளூர் கலைஞர்கள், கலைமூலம் பொருள் சேர்த்து, கலையை ஒரு துறை யாக அமைக்க உதவாமல், சமூகத்தொண்டு என்ற பெயரில், பணம் சேர்ப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, கலைஞர்களின் கலைத்துறை வளர்ச்சிக்கு தடையாக நிகழ்த் தப்படும் பல நிகழ்வுகள் மத்தியில், கலைஞர்கள் பெருகுவதற்கும், கலைத்துறை வளர்வத ற்கும் வழிவகுக்கும் விதத்தில் இந்நிகழ்ச்சி ஒரு ஆரம்பமாக அமைந்தது என்பது உண்மை. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், விருதுகளும் கலைஞர்களை ஊக்குவித்து மேலும் மே லும் வளர தூண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிகழ்வு மட்டுமல்ல இதுபோன்ற பல நிகழ்வுகள் நடாத்தப்பட வேண்டும், மேலும் திறன் பட சிறப்பாக அமையவேண்டும் என்பதே என்னைபோன்றவர்களின் பிரியம், அது, கலை யை ஒரு துறையாக அமைக்க ஊக்குவிப்பாகவும் உறுதுணையாகவும் இருக்கும். அப்படி எதிர்காலத்தில் அமையும் நிகழ்வுகள் மேலும் சிறப்பாக அமைய ஒருசில விடயங்களில் க வனம் செலுத்தவும் தேவைப்பட்டால் மாற்றங்களும் அவசியம் என்பது எனது கருத்து மட் டு மல்ல, பல கலைஞர்களின் கருத்தும் கூட. அவை குற்றாச்சாட்டுகள் அல்ல, நிகழ்வுகளி ன் தரம் மேன்படவேண்டுமென்ற தாகம்.

ஒலி அமைப்பு பொறுப்பாளராக இருந்த திரு. பப்பு அவர்கள் காலகாலமாக நம்மவர் நம்பி க்கைக்குரிய சிறந்த ஒலி அமைப்பு வல்லுநர், அவரிடம் எமக்கு அதிக எதிர்பார்ப்பும் நம்பி க்கையும் உள்ளது. இந்நிகழ்வில் ஒலிபெருக்கி ஒத்திகை முறைப்படி நடைபெ றவில் லை யோ என்ற சந்தேகம் எழுந்தது, குறிப்பாக நிகழ்ச்சி ஆரம்பத்தில் தொகுப்பாளர் நண்பர் சாருராம் பேசிய வார்த்தைகளை பார்வையாளர்களால் தெளிவாக புரிந்துகொள்ள முடி யவில்லை, தொடர்ந்தும் கூட, சில பாடகர்கள் பாடும்போது, இசைக்கும் குரலுக்கும் இடை யிலான சமநிலை சரிபட அமையவில்லை, இதற்கு ஒலிபெருக்கி கருவிகளின் ஆழ சக்தி (Depth,Power) குறைவாக இருந்ததோ என்று தோன்றியது.

மக்கள் இல்லாத மண்டபத்தில் ஒலி சமநிலை (Sound Balance ) செய்து ஒத்திகை பார்க்கும் போது இருக்கும் தரத்திற்கும், ஆழ சக்திக்கும், மக்கள் நிறைந்த மண்டபத்தில் ஒலிக்கும் தரத்திற்கும் பெரும் வேறுபாடு இருக்கும், இதனை, ஒலி அமைப்பு வல்லுனர்களும், கலை ஞர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்து ஒத்திகை பார்த்து திட்டமிட்டி ருந்தால், நிகழ்ச்சி மேலும் பூரணமடைந்திருக்கும். நண்பர் சாருராம் ஒரு தலைசிறந்த க லைஞன், பல மேடைகள் பார்த்தவர், இசை, நடிப்பு தொழில்நுட்பம் அனைத்திலும் தேர்ந்த வர், அவரிடம் எப்பொழுதும் மக்களுக்கு