சீனாவில் பரபரப்பு கல்லறைத் தோட்டத்தில் குவியல் குவியலாகத் தங்கம்

சீனாவில் பரபரப்பு கல்லறைத் தோட்டத்தில் குவியல் குவியலாகத் தங்கம்

பீஜிங், டிச. 29, 2015 – சீனாவின் ஹேஹூன் மாகாணத்தில் அமைந்துள்ள கல்லறைத் தோட்டத்தில் இருந்து குவியல் குவியலாக தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

சீனாவின் ஹேஹூன் மாகாணத்தில் அரச குடும்பத்தினரை அடக்கம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கல்லறைத் தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தோட்டமானது ஹான் வம்சத்தினருக்காக பிரத்தியேகமாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த கல்லறைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 8 கல்லறைகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 5 ஆண்டுகளாக தீவிரமாக ஆராய்ச்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிக்கு முடிவில் அப்பகுதியை தோண்டும் பணி பல்வேறு குழுக்களால் நடத்தப்பட்டு வந்துள்ளது.

Scythian-art_1இந்நிலையில், அந்த கல்லறைகளில் இருந்து குவியல் குவியலாக தங்கம் மற்றும் வெள்ளி, இரும்பு நாணயங்களை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். சீனாவில் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள அரச கல்லறைகளில் ஹான் வம்சத்தினரின் கல்லறையே மிகவும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆய்வாளர்கள் இதுவரை தோண்டப்பட்டு ஆய்வு நடத்திய கல்லறையானது வூ பேரரசரின் பேரனான லியூ பிமீ என்பவரது கல்லறை என கருதப்படுகிறது. லியூ பிமீ என்பவர் அரசாள்வதில் திறமை மற்றும் ஒழுக்கமற்றவரானதால் பதவியேற்ற 27ம் நாளிலேயே குடும்பத்தினரால் அவரது அரச பதவி பறிக்கப்பட்டது என கூறப்படுகிறது.