புனித ஆரோக்கிய அன்னைத்திருத்தலத்தில் 10 நாள் திருவிழா சின்னமலையில் துவக்கம்

புனித ஆரோக்கிய அன்னைத்திருத்தலத்தில் 10 நாள் திருவிழா சின்னமலையில் துவக்கம்

16ம் நூற்றாண்டு போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்ட சின்னமலையில் உள்ள புனித ஆரோக்கிய அன்னைத்திருத்தலத்தில் 10 நாள் திருவிழா வெகு விமர்சியாக கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இயேசுவின் 12 சீடர்களால் ஒருவராக இருந்த புனித தோமையார் திருத்தலம் சென்னை சின்னமலையில் அமைந்துள்ளது.

இத்திருத்தலமானது 16ம் நூற்றாண்டு போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது.இயேசுவின் முக்கிய சீடர்களான புனித தோமையார் கிருஸ்துவ புகழை பரப்பிஅதிகமான மக்களை கிஸ்தவத்தை பின்பற்ற வைத்தார்.புனித தோமையாரின் 3 முக்கிய திருத்தலம் சென்னை சின்னமலை,   சாந்தோம், புனித தோமையர்மலை ஆகிய இடங்களில் உள்ளது.

சின்னமலை திருத்தலத்தில் தோமையார் வாழ்ந்த வரலாற்று சான்றுகளும், சிலுவையில் இருந்து வருடந்தோறும் டிசம்பர் 18ம் தேதி அன்று இரத்தமும், செந்நீரும் கலந்து சிந்துவதும், பாறையில் நீரூற்று, இரத்தம் படிந்த கை மற்றும் கால் தடம் உள்ளிட்ட தடையங்களும் காணப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக சின்னமலையில் உள்ள தோமையார் விழா எடுத்து கொண்டாடப்படுகிறது. 

 

(போட்டோ: புனித தோமையார் தேர் திருவிழா அழைப்பிதழ் அறிமுகம் செய்தபோது. பங்கு தந்தை லாரன்ஸ்ராஜ், உதவி பங்கு தந்தை ஜெஸ்டீன் திரவியம்).

23.6.2017 கொடியேற்றத்துடன் புனித தோமையார் திருவிழா வெகு விமர்சியாக துவங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா தேர் திருவிழாவுடன் நிறைவடைகிறது.பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு புனித தோமையரின ஆசியை பெறுமாறு பங்கு தந்தை லாரன்ராஜ் கேட்டுக்கொண்டார்.