ஜி.டி. நாயுடு பேரில் விருது வழங்க தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி கோரிக்கை

ஜி.டி. நாயுடு பேரில் விருது வழங்க தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி கோரிக்கை

தமிழகத்தில் தெலுங்கு மொழியை தாய்மொழியாக தெலுங்கு மொழியை கற்கும் வண்ணம் இரண்டாவது விருப்பபாடமாக அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ள்து . இது தொடர்பாக அக்கட்சியின் பொதுசெயலாளர் அனந்த நாராயணன் மற்றும் நிர்வாகிகள் அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

 ..பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனந்தநாரயணன் 

தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் தெலுங்கு மொழியை இரண்டாவது விருப்ப பாடமாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளதாகவும் 

 

 

 

 

 

 

 

விஞ்ஞானி ஜி.டி. நாயுடு பேரில் விருது வழங்க வேண்டும், என்றும் மதுரை விமான நிலையத்திற்கு திருமலை நாயக்கர் பெயரை சூட்ட வேண்டும், குடிநீர் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி எஸ் டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு குடிநீர் தேவைக்காக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தங்கள் கட்சி சார்ப்பில் சந்திக்க உள்ளதாக கூறினார்.துணை தலைவர் பிரதாப் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்

பேட்டி…. அனந்த நாராயணன், பொது செயலாளர், தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி