நடிகர் பார்த்திபன்-சீதா தம்பதிகளின் மூத்த மகளான அபிநயாவின் திருமணம் இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

நடிகர் பார்த்திபன்-சீதா தம்பதிகளின் மூத்த மகளான அபிநயாவின் திருமணம் இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் பார்த்திபன்-சீதா தம்பதிகளின் மூத்த மகளான அபிநயாவின் திருமணம் இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மணமகனின் பெயர் நரேஷ் கார்த்திக்.நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகள் சத்யா ஜெயச்ச ந்திரனின் மகன். (நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன்) . நடிகர் ராதா ரவி …

Read More

விழாவிற்கு வருகை தந்தவர்களை இணை தயாரிப்பாளர்ராஜசேகர்  கற்பூரசுந்தரபாண்டியன் வரவேற்றார். 

விழாவிற்கு வருகை தந்தவர்களை இணை தயாரிப்பாளர்ராஜசேகர்  கற்பூரசுந்தரபாண்டியன் வரவேற்றார்.  2 டி நிறுவனம் சார்பில் நடிகர்சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ்தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும்டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் சத்யம்திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சூர்யா, உறியடி 2 படத்தின்இயக்குனர் விஜயகுமார், படத்தின் ஒளிப்பதிவாளர்பிரவீன் குமார், படத்தொகுப்பாளர் பினு, படத்தின்இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, நடிகர்கள் ராஜ் பிரகாஷ், சங்கர்தாஸ், பாடலாசிரியர்நாகராஜி, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், விநியோகஸ்தர் சக்திவேலன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்தவர்களை இணை தயாரிப்பாளர்ராஜசேகர்  கற்பூரசுந்தரபாண்டியன் வரவேற்றார். அவர் பேசுகையில்,“ உறியடி 2 எங்களுக்குஸ்பெஷலான படம். உறியடி படத்தின் இயக்குனர் விஜயகுமார் அவர்கள் நடைபெற்ற சந்திப்பின்போது அவர் சொன்ன ஒன்லைன் எங்களைக் கவர்ந்தது. உறியடி படத்தின் முதல் பாகத்தை விடஇரண்டாம் பாகத்தில் சமூகத்துக்கு தேவையான அழுத்தமான செய்தி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தின் படபிடிப்பை திட்டமிட்டபடி 35 நாட்களுக்குள் நிறைவு செய்தார் இயக்குனர்மற்றும் அவரது குழுவினர். இதற்காகவும் அப்படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பகலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.  விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில்,‘ உறியடி படத்தின் முதல் பாகத்தில் இயக்குனர்மற்றும் அவரது குழுவினர் காட்டிய உழைப்பு மற்றும் உண்மைக்காக உறியடி– 2 படத்தி ன்வாய்ப்பு கிடைத்திருக்கிறது எனலாம். நிறைய உழைக்க வேண்டும் என்று எண்ணம்உள்ளவர்களுக்கு சூர்யாவின் 2டி நிறுவனத்தின் வாய்ப்பு உறுதி என்பது இதன் மூலம்அனைவரும் தெரிந்து கொள்ளலாம். சமுதாயத்தில் நடைபெறும் அவலங்களை இளைஞர்களின்பார்வையில் எப்படி தீர்வு காண முடியும். எப்படி அதனை முன்னெடுக்க முடியும். என்ற வகையில்உருவான படம்தான் இந்த உறியடி 2” என்றார். இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசுகையில்.“ இந்தப் படத்திற்காக இசையமைக்கஇயக்குனர் விஜயகுமார் என்னுடன் தொடர்பு கொண்ட போது, நான் 96 படத்தின் இசையமைப்புபணியை தொடங்கவில்லை. இந்த படத்தின் பாடல்களுக்கு இசையமைத்து, பின்னணிஇசையமைத்து, கிட்டத்தட்ட இறுதி நிலையில் தான் படத்தின் இணை தயாரிப்பாளரானராஜசேகர் படத்தை பார்வையிட்டார். அது வரைக்கும் எனக்கு படைப்பு சுதந்திரம் இருந்தது. இயக்குனரும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவரைப் போன்ற ஒருபெருந்தன்மையான–நேர்மையான– உண்மையான மனி தரை காண்ப து அரிது. அவ ர்  ஒ ரு  அரிய ஜீன். இந்த படம் ரசிகர்களை திருப்தி படுத்தாது. ஆனால் அவர்களின் உறக்கத்தை கெடுக்கும். அதுபோன்ற விரியுமுள்ள படைப்பு இது.” என்றார். படத்தின் இயக்குனர் விஜயகுமார் பேசுகையில்.“ இசையமைப்பாளரைத் தேர்வு செய்யும் முன்ஒரு மூன்று விஷயங்களை மனதில் கொள்வோம். ஈகோ இருக்கக் கூடாது. திறமை இருக்கவேண்டும். டெடிகேஷன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். இந்த மூன்றும்இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவிடம் இருந்தது. இந்த படத்தில் மூன்று பாடல்கள் மற்றும்ஒரு செய்யுள் (POEM) இசையமைத்திருக்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜேனரில் இருக்கும். முதன்முறையாக இந்த படத்தில் இரண்டு பாடல்களை கோவிந்த் வசந்தா பாடியிருக்கிறார். நடிகர் சூர்யா ஏன் உறியடி 2 வை தயாரிக்க வேண்டும், என்று நிறைய பேர் கேட்கிறார்கள், கேட்கநினைக்கிறார்கள், நடிகர் சூர்யா மக்கள் மீதும் சினிமா மீதும் பேரன்பு கொண்ட மனிதன். அவரது நம்பிக்கையை உறியடி 2 படம் காப்பாற்றும். இந்த படம் மக்களுக்கான படம் என்றநம்பிக்கையும் காப்பாற்றும்.தமிழ் திரையுலகிலுள்ள ஒவ்வொரு இயக்குனரும், ஒவ்வொருநடிகரும் இந்த நிறுவனத்தில் படம் பண்ண வேண்டும் என்ற கனவு இருக்கிறது. ஏவிஎம்நிறுவனத்தை போல் ஒரு படத்தை தொடங்கியது முதல் அதனை திரைக்கு கொண்டுவந்துகொண்டு வருவது வரை சரியானமிக சரியான திட்டமிடல் இந்த நிறுவனத்தில் இருக்கிறது. படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றியை கூறி படைப்பைஎனதாக்கிக் கொள்ள விரும்பவில்லை. தென்காசியில் படப்பிடிப்பு நடைபெற்ற பொழுது, ஒருகலவர காட்சியை படமாக்கினோம். அப்போது உதவி இயக்குனர்களை போலீசாகநடித்தவர்களிடம்  உண்மையான தடியைக் கொடுத்து அடிக்க வேண்டும் என்று சொன்னோம். அதேபோல் உதவி இயக்குனர்கள் யார் என்பதையும் போலீஸ்காரர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, காட்சியின் போது உதவி இயக்குநர்களிடம் ‘கையைத் தூக்குங்க’ என்றுஒரு சைகையை சொல்லியிருந்தோம். ஆனால் படப்பிடிப்பு நடந்தபோது அந்த கூட்டத்தில்உள்ளவர்கள், துணை நடிகர்கள், ஒவ்வொருவரும் அவர்கள் கையை தூக்கி அந்த அடியைவாங்கிக் கொண்டு இந்த காட்சியை உயிர்ப்புடன் படமாக்க உதவி புரிந்தார்கள். அதற்காகயாருக்கும் நன்றியை தெரிவிக்க விரும்பவில்லை. இது அனைவருக்குமான படம் என்பேன். அத்துடன் இந்த படத்திற்காக நீங்கள் செலவழிக்கும் நேரத்தையும், பணத்தையும், புத்திசாலித்தனத்தையும் 100 சதவீதம் மதிக்கும் ஒரு படமாக உறியடி-2 இருக்கும்.” என்றார். நடிகர் சூர்யா பேசுகையில்,“ நான் நடிக்கும் படத்தின் வெளியீடு தாமதமாகிக் கொண்டேபோனாலும், இதுபோன்று சந்தர்ப்பங்களில் உங்களை எல்லாம் சந்திப்பது சந்தோஷமாகஇருக்கிறது. கேரளாவில் நடைபெற்ற ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன். அங்குதான்இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவை சந்தித்தேன். அவருடைய இசையையும்வீடியோவையும் பார்த்தேன். அதில் ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனால் அவர் இவ்வளவு தெளிவாகபேசியது எம்மை ஈர்த்தது. அவர் படத்தைப் பற்றி கூறிய வார்த்தை, இந்த படம் உங்க ளைஎண்டர்டெ யின் பண்ணாது. ஆனால் டிஸ்டர்ப் பண்ணும். என்று சொன்ன வார்த்தைகள்தெளிவாகவும் தீர்க்கமாகவும் இருந்தது. இங்கு வந்தவுடன் ஒரு தொழில்நுட்ப கலைஞர் என்னிடம் ‘நீங்கள் ‘காக்க காக்க’ படத்தில்நடிக்கும்போது, நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறேன் சார் ’ என்றுசொன்னபோது, என்னுள் நாம் சீனியராகி விடுகிறோமோ..! என்ற எண்ணம் எழுந்தது. இதுவரைதிரையில் நான் என்ன செய்திருக்கிறேனோ அவை எல்லாம் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்களின் கற்பனையில் உருவானது. எங்களுக்கான அடையாளம், இமேஜ் இதெல்லாம்தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் அளித்தது– இந்நிலையி ல் அ வர்களுடையவே லை யில் சென்று குறுக்கீடு செய் யவும், ஆலோசனை செய்ய வும், என் னை  நான் தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். அது தேவையற்றது என்றும்நினைக்கிறேன். ஆனால் நல்ல விஷயங்களை ரசிக்க பிடிக்கும். நல்ல விசயங்களுக்குதுணையாக= உடன் நிற்க பிடிக்கும் .எனக்கான நிலையிலிருந்து, என்ன வகையான உதவிகளைசெய்ய முடியுமோ, அதைத்தான் இந்த படத்திற்கு செய்திருக்கிறேன். இசை அமைப்பாளர்கோவிந்த் வசந்தாவுடன் தொடர்ந்து 2டி நிறுவனம் பயணிக்கும். அத்துடன் எங்கள் நிறுவனத்தில்முதன் முதலாக அவர் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார் அதுவும் எங்களுக்குசந்தோஷமே. 2டி நிறுவனம் 10 படங்களுக்கு மேல் தயாரித்திருக்கிறது என்றால், அதற்கு காரணம்ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் அவரது குழுவினரின் உழைப்பு தான், இயக்குனர்விஜயகுமார், என்னைப் போலவே அவரும் ஒரு இன்ட்ரோவெர்ட் (introvert). மனதில் நினைத்ததைடக்கென்று வெளிப்படுத்த மாட்டார். விவாதிக்க மாட்டார். அனைத்தையும் புரிந்து கொள்வார். ஒரு அறிமுகத்திற்கு பிறகு இயக்குனர் விஜயகுமாரின் உறியடியை பார்த்தேன். அதன் பின்னர்அவருடைய முதல் சந்திப்பிலேயே நான் எப்படி ராஜா சாருடன் பழகுகிறேனோ அதேபோல்இயக்குனர் விஜயகுமாரிடமும் பழகினேன். ஒருவர் சினிமாவுக்காக இவ்வளவு உண்மையாகஇருக்க முடியுமா…? என்ற பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் என்னுள் ஏற்படுத்தினார். ஒருவிஷயத்தை எடுத்துக்கொண்டு அதனுள் எவ்வளவு தூரம் உண்மையாக பயணிக்க முடியும்என்பதையறிந்து, அந்தளவிற்கு பயணித்து அதை வெளிக்கொணர்பவர் விஜயகுமார்.  அவர்சினிமாவிற்காக குடும்பத்தை விட்டு பிரிந்து, குழந்தைகளை விட்டுப் பிரிந்து, அவ்வளவுநேர்மையாக இருக்கும் ஒருவரை நான் விஜயகுமாரிடம் பார்த்தேன். எங்க அப்பா படப்பிடிப்புதளத்திற்கு வந்ததில்லை. எனக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்டது கிடையாது. ஒரு இயக்குனரைசந்தித்தது கிடையாது. கதை கேட்டது கிடையாது. தயாரிப்பாளரை சந்தித்தது கிடையாது. இருந்தாலும் நான் ஒரு நடிகரின் மகன் என்ற அடையாளம் எனக்கிருக்கிறது.. ஆனால் எந்த ஒருஅடையாளமும் இல்லாமல் உறியடி என்ற படத்தை எடுத்த விஜயகுமார் அனைவரையும்ஆச்சரியப்படுத்தினார். அதை நான் பாராட்டுகிறேன். திரையில் ஒரு ஒரு உண்மைவெளிப்பட்டது. அதன் ஆயுள் அதிகம். உறியடி 2 ஏன் வரவில்லை? என்ற வினா எழுந்தது. உறியடிவந்து நான்கைந்து வருடங்களுக்கு பிறகு, 2டி நிறுவனத்தின் மூலமாக உருவானதற்கு நான் நன்றிதெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் எண்டர்டெயின் பண்ணாது. டிஸ்டர்ப் பண்ணும். யோசிக்க வைக்கும். எப்போதும் போல் நியாயமான தீர்ப்பை வழங்கும் படிகேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.இறுதியான படத்தின் டீஸர் மற்றும் பாடல்களை நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யாவெளியிட்டார்.முன்னதாக படத்தின் டீஸர் மற்றும் இரண்டு பாடல்காட்சிகள் திரையிடப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.

Read More

Vellai Pookal First Look Released By Actor Suriya

Vellai Pookal First Look Released By Actor Suriya – @Actor_Vivek *ing #VellaiPookal #வெள்ளைப்பூக்கள் FirstLook முதல் பார்வை Released By @suriya_offl#Clue10 @IndusCreations @Tentkotta @iamrascalpapa @tridentartsoffl @Cinemainmygenes @gopalbalaji @kunal_rajan @madhankarky @varusath2003 @dhigha @vivekelan @onlynikil 

Read More

பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஜீவா பேசியவை : 

பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஜீவா பேசியவை :  ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்  “கீ” “கீ “திரை ப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!  நாடோடிகள் , ஈட்டி  ,மிருதன் , போன்ற வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவ னம் குளோபல் …

Read More