உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியிக்கும்

உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியிக்கும் ” போகி ” ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகிறது.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகும் ” போகி “

V i குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் படத்திற்கு “போகி “என்று பெயரிட்டுள்ளனர்

இந்தப் படத்தில் நபி நந்தி, சரத், லப்பர் பந்து படத்தில் சிறப்பான தோற்றத்தில் நடித்த சுவாசிகா, பூனம் கவூர், வேலாராமமூர்த்தி, சங்கிலி முருகன், மொட்டை ராஜேந்திரன், எம். எஸ்.பாஸ்கர், முரு ஸ்டார் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு – ராஜா C சேகர்
இசை – மரியா மனோகர்
பாடல்கள் – சினேகன்
வசனம் – S.T. சுரேஷ்குமார்
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
கலை இயக்கம் – A. பழனிவேல்
ஸ்டண்ட் – அன்பறிவ், மிராக்கிள் மைக்கேல்,
நடனம் – அசோக் ராஜா
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரிப்பு – V i குளோபல் நெட்வொர்க்ஸ்

கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் – S. விஜயசேகரன்.

படம் பற்றி இயக்குனர் S. விஜயசேகரன் பகிர்ந்தவை….

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன்.

சென்னை நகரம் தற்போது உலகத்தரம் வாய்ந்ததாகவும், தொழில்நுட்பம் வானத்தை விட்டும் அளவிற்கு வளர்ந்துள்ள இந்த சூழ்நிலையில் Ai என்ற புதிய தொழில்நுட்பம் மக்களை மிரட்டும் சூழ்நிலையில் பெண் பிள்ளைகளை பெற்ற தாய், தந்தை,சகோதரர்கள் நாளுக்கு நாள் பதட்டத்துடன் வாழும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சுமார் 6000 அடி உயரத்தில் எந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத மலை கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர் சைக்கிள் கூட செல்ல முடியாத இந்த மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் கனவாக இருக்கிறது அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த நாயகன் அழகர் தனது தங்கை கவிதா மூலமாக தனது கிராமத்தின் மருத்துவ தேவையை சரி செய்ய விரும்புகிறான் சில கிலோமீட்டர் மலையில் கால்நடையாக சென்று படித்துவிட்டு வீடு திரும்பி மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரிக்கு செல்ல அந்த மலை கிராமமே பெரும் கனவோடு வழி அனுப்பி வைக்கிறார்கள்.

இறுதியில் கவிதா மருத்துவம் படித்து கிராம மக்களுக்கு சேவை செய்தாரா என்ன நடந்தது என்பதே இந்த படத்தின் திரைக்கதை.

படம் துவங்கி கிளைமாக்ஸ் வரை விறுவியிருப்பான திரைக்கதை இருக்கும்.

இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் பொதுமக்கள் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்கிறார் இயக்குனர் S.விஜயசேகரன்.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்தை PGP எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் P. G. பிச்சைமணி இந்தியா முழுவதும் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா தயாரிப்பதை தான்டி வெளியிடுவதில் தான் பல்வேறு சிக்கல்களை தமிழ் சினிமா சந்தித்து வருகிறது இந்த சூழ்நிலையில்

PGP எண்டர்பிரைசஸ் P. G. பிச்சைமணி இந்த போகி படத்தை தொடர்ந்து இது போன்ற நல்ல சினிமாக்களை தொடர்ந்து வெளியிட இருக்கிறார் என்பது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெரிய பலம்.