தமிழ் சினிமாவின் மூத்த நடிகை மனோரமாவின் மகனும் நடிகருமான பூபதி இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.


தி. நகர் நீலகண்ட மேத்தா தெரு, மனோரமா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ் மற்றும் நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
