அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் த யாரிப்பில், நடிகர் விமல் நடிக் கும்

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் த யாரிப்பில், நடிகர் விமல் நடிக் கு ம், காமெடி எண்டர்டெயி னர் தி ரைப்படம், பூஜையுடன் துவங்கி யது !!

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் பு ரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் சா ர்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விம ல் நாயகனாக நடிக்க, அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனி ஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராம ப்புற பின்னணியில், கா மெடி எ ண்டர்டெயினராக உரு வாகும் பு திய படம், பூஜையுடன் துவங் கி யது.

காரைக்குடியில், படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இப்படத்தின் படப்பி டிப்பு இனிதே துவங்கியுள்ளது.

மலையாளத் திரையுலகில் சமீ பததில் வெளியாகி, பெரும் வெ ற்றி பெற்ற “ககனச்சாரி, பொன் மேன்” படங்கள் உட்பட, பத்துக்கு ம் மேற்பட்ட வெற்றிப்படங் க ளைத் தயாரித்துள்ள அஜித் வி நாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பி ரைவேட் லிமிடட் நிறுவனம், இ ந்த புதிய படம் மூலம், தமிழ் தி ரையுலகில் கால்பதித்துள் ள னர். தயாரிப்பாளர் விநாயகா அ ஜித் இப்படத்தை, பெரும் பொரு ட்செ லவில் பிரம்மாண்டமாக தயாரி க்கின்றார்.

இப்படத்தில் கதாநாயகனாக விமல் மற்றும் கதாநாயகியாக முல்லை அரசி நடிக்க, ‘விடுத லை’ சேத்தன், ‘பருத்திவீரன்’ சரவணன் உட்பட மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து, நடித்து வருகிறா ர்கள்.

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, குடும்பங்களோடு அனைவரும் கொண்டாடும் வகையில், ஒரு அசத்தலான காமெடி எண்டர்டெயினராக இப்படத்தை, அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்குகின்றனர்.

எழுத்தாளர் பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்கள். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்துள்ளார். பார்க்கிங் வெற்றிப்பட ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரான்சிஸ் நெல்சன் சேவியர் மற்றும் மருது பெரியசாமி வசனம் எழுதியுள்ளனர். எடிட்டிங் மதன், கலை இயக்கம் ராஜ்கமல், ஸ்டண்ட் பீனிக்ஸ் பிரபு, எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் ரஞ்சித் கருணாகரன் ஆகியோர், தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.

கிராமத்து பின்னணியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை, காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த மற்ற தகவல்கள், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.