பாலாவிற்கு சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும்; ஷெரிஃப் தயாரிப்பாளரின் இயக்குனராக இருக்கிறார்! – இயக்குனர் பாலாஜி சக்திவேல்
ஜெய் கிரண் தயாரிக்க, இயக்குனர் ஷெரிஃப் இயக்க, பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் காந்தி கண்ணாடி. இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகை அர்ச்சனாவும், இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது :
தயாரிப்பாளர் ஜெய் கிரண் பேசும் போது,
அனைவருக்கும் வணக்கம். என்னுடைய அப்பா ஸ்தபதி. 50 வருடங்களாக கோவில் கட்டும் பணியில் இருக்கிறார். அவருடைய 13 வயதிலிருந்து இந்த பணியை செய்து கொண்டிருக்கிறார். அவர் தேசிய விருது வாங்கும் போது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
நான் அவருடன் இணைந்து பல வேலைகள் செய்து இருக்கிறேன். இப்போது இப்படத்தை தயாரித்திருக்கிறேன். பலர் என்னிடம், ஆம்புலன்ஸ்-ஐத் தொடர்ந்து காந்தி கண்ணாடி என்று கேட்கிறார்கள். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த இரண்டு படங்களுமே வெவ்வேறு கதை அம்சம் கொண்ட படங்கள். பாலாவை பொறுத்தவரை கேப் டிரைவராக இருந்தாலும் சரி, சிறிய கடை வைத்திருந்தாலும் சரி அவர் செய்ய வேண்டிய உதவிகளை செய்து கொண்டு தான் இருப்பார் என்றார்.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசும்போது,
அனைவருக்கும் வணக்கம் அன்பு தான் எல்லாமே அன்பில்லாமல் யாரும் இந்த உலகத்தில் வாழ முடியாது இப்படிப்பட்ட அற்புதமான ஒரு கருத்தை மையப்படுத்தி இந்த படம் வந்திருக்கிறது.
பொதுவாக நான் ஒரு படத்தைப் பற்றி பேசும் போது அது படம் அல்ல, சிற்பம் என்று தான் கூறுவேன். ஒரு சிற்பத்தில் கண்கள், மூக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்றால் அது சிற்பம் அல்ல கல் தான் என்று கூறுவேன். அப்படி ஸ்தபதியாக இருந்து பல கோவில் கட்டியவர் இன்று தயாரிப்பாளராகி இருக்கிறார் என்றால், நிச்சயம் இப்படம் நல்ல சிற்பமாக தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த படம் நிச்சயம் வெற்றி அடையும் என்றார்.
இசையமைப்பாளர் விவேக் பேசும்போது,
இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி அவர் கதை கூறும் போது மாடல் மாடர்ன் ஆன காதல் அன்பு அதைப் பற்றி கூறும் ஒரு படம். நிச்சயம் அனைவரும் இப்படத்தை அனைவரும் என்ஜாய் பண்ணுவார்கள் என்று நம்புகிறேன். புல்லட் வண்டி என்று தொடங்கும் ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகியுள்ளது அந்தோணி தாஸ் அப்பாடலை பாடியிருக்கிறார். மேலும் 3 பாடல்கள் இன்னும் உள்ளது. அது மட்டும் இல்லாமல் இவன் சங்கர் ராஜா சார் மற்றும் தேவா சார் ஆகியோரும் இப்படத்தில் வரும் பாடல்களை பாடி இருக்கிறார்கள் என்றார்.
இசையமைப்பாளர் மெர்வின் பேசும்போது,
அனைவருக்கும் வணக்கம் பாலாஜி சக்திவேல் சாரின் காதல் திரைப்படம் திரைப்படத்தால் பாதிப்படைந்த பலரில் நாங்கள் இருவரும் உண்டு. அவர் நடிக்கும் இப்படத்தில் எங்களுடைய பங்களிப்பும் இருப்பதில் என்பதில் மிகவும் மகிழ்ச்சி என்றார்.
நடிகர் மதன் பேசும்போது,
இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனர் தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி . இப்படத்தில் நான் பாலா அண்ணனின் கவுண்டரை எடுத்து பயன்படுத்தி இருக்கிறேன் பாலா அண்ணன் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார் நிறைய கற்றுக் கொடுத்தார் அவர் மட்டுமல்ல இப்பாடக் குழுவினர் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகை ஆராத்யா பேசும் போது
எல்லோருக்கும் வணக்கம் நீங்கள் அனைவரும் மதிமாறன் குற்றம் தவிர் அனைத்தையும் பார்த்திருப்பீர்கள். ஆனால் காந்தி கண்ணாடி விழா மேடை எனக்கு மிகவும் சிறப்பானது. இந்த படத்தில் எனக்கு உணர்வுபூர்வமான கதாபாத்திரம் என்னை நானே திரையில் பார்க்கும்போது கண்ணை எடுக்கத் தோன்றவே இல்லை. பார்க்கும் அனைவரின் இதயத்திலும் நான் ஒட்டிக் கொண்டது போல ஒரு உணர்வு. அதிலும் சக்திவேல் சார் மற்றும் அர்ச்சனா மேடம் உடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததை என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன். இதற்கு ஷெரிஃப் சாருக்கு மிகவும் நன்றி.
தயாரிப்பாளருக்கும் நன்றி. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியில் நானும் ஒரு சிறிய பங்காக இருப்பதற்கு நன்றி. எனக்கு சினிமா தான் எல்லாமே. சினிமா என்னை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி கொண்டு வருகிறது. நான் இன்னும் நிறைய கற்றுக் கொண்டு மேலும் வளர உங்களுடன் எல்லாருடைய ஆசீர்வாதமும் எனக்கு தேவை. பாலா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நான் ஒரு சிறிய உறுப்பாக இருப்பதற்கு மகிழ்ச்சி என்றார்.
நடிகர் அமுதவாணன் பேசும்போது,
அனைவருக்கும் வணக்கம். இப்படத்தில் பாலாவும் கதாநாயகியும் காதலராக நடிப்பது போல தோன்றவில்லை, இயல்பாக இருக்கிறது. எனக்கு முதன் முதலாக ரசிகர் மன்றம் வைத்தது பாலா தான். பாலா கதாநாயகனாக வருவான் என்று அவனே எதிர்பார்க்கவில்லை. அவனுடைய குணமும் செயல்களும் தான் பிரபஞ்சம் இந்த இடத்திற்கு கொண்டு வந்து கொண்டு வந்திருக்கிறது. மேலும், இன்னொரு முக்கிய காரணம் ஊடக நண்பர்கள் தான். ஏனென்றால், அவர்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், பாலாவின் செயலை நேரிலும் சரி, பத்திரிகையிலும் சரி அவர்களுடைய பாராட்டுதல் தான் இந்த உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது என்றார்.
நடிகர் மனோஜ் பேசும்போது,
அனைவருக்கும் வணக்கம். இவ்வளோ பெரிய லெஜென்ஸ் எல்லோரும் நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த வாய்ப்பு கொடுத்து செரிப் அண்ணாவிற்கு நன்றி எல்லாருடைய ஆதரவும் எனக்கு வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி பேசும் போது,
அனைவருக்கும் வணக்கம் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இயக்குனர் ஷெரிஃப், இந்த படத்திற்காக கதாநாயகி தீர்வுக்காக நாங்கள் 50 கதாநாயகி அழைத்தோம். 51 வது நபராக உங்களை இந்த படத்திற்காக நாயகியாக தேர்வு செய்து இருக்கிறோம் என்று கூறினார். அந்த 50 பேரும் 50 ஆசீர்வாதமாக நான் நினைக்கிறேன். அது தவிர இங்கும் நிறைய ஆசிர்வாதங்கள் இருக்கிறது பாலாஜி சக்திவேல் சாரும் அர்ச்சனா மேடம் சொல்லிக் கொடுத்த பல விஷயங்கள் தான் இந்த படத்தில் நான் செய்திருக்கிறேன் ஆகையால் அவங்களுடைய ஆசிர்வாதமும் எனக்கு இருக்கிறது.
எல்லாருடைய இதயத்திற்கும் பிடிக்கும் விதமாக இப்படத்தை ஷெரிஃப் சார் எடுத்து இருக்கிறார். பாலாவுடன் நடித்ததில் அவர் மனிதநேயமிக்க மனிதன் என்பது தெரிந்தது அவருடன் நான் திரையை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேல் சார் அவர்களுக்கும் தயாரிப்பாளர்கள் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நடிகர் பாலா பேசும்போது,
அனைவருக்கும் வணக்கம், நான் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறேன். இன்று இங்கு வரும்போது போஸ்டரை பார்த்ததும் எனக்கு அடிவயிற்றில் அயன் பாக்ஸ் வைத்து தேய்த்தது போல இருந்தது. நான் நடித்த படத்தின் போஸ்டர் என்று வியப்பாக இருந்தது. இன்று நான் இங்கு நிற்கிறேன் என்றால் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தான் காரணம் என்று நம்புகிறேன்.
எனக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்தது எப்படி இருக்கிறது என்றால் வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு வேர்ல்ட் கப் கொடுத்தது போல இருக்கிறது.
கனவில் கூட நினைத்து பார்க்காத ஒன்று எனக்கு நடந்திருக்கிறது போல் தோன்றுகிறது. காரைக்காலில் பிறந்த நான் ஒருவரின் உறுதுணையால் இங்கு நிற்கிறேன். காரைக்கால் பாலாவாக இருந்த நான் காந்தி கண்ணாடி பாலாவாக மாறியதற்கு காரணம் அமுதவாணன் அண்ணன்தான்.
நான் எதற்கு முன்பு சிறு சிறு கதாபாத்திரங்களை சுமார் 19 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனா 11 படங்களில் நான் வரவில்லை பட தொகுப்பில் என்னுடைய காட்சி தேவை இல்லை என்று நீக்கி விட்டதாக கூறுவார்கள் அதனால், அவர்களை நான் குறை சொல்லவில்லை.
ஷெரிஃப்-ம் நானும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அப்போதே எனக்கு ஒரு கதாபாத்திரம் கொடுங்கள். ஐந்து அல்லது ஆறு காட்சிகள் கதாநாயகனுடன் நண்பனாக காதலி சேர்த்து வைக்கும் படியான இப்படி ஏதாவது வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டேன். அவரும் சரி என்று கூறினார்.
அதன் பிறகு ஒரு நிகழ்ச்சியின் போது ராகவா லாரன்ஸ் நீ என்ன ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டார். நான் கதாநாயகன் என்று கூறினேன். அதற்கு அவர் வாழ்த்தினார். மேலும், நான் ஏன் உன்னை கதாநாயகனாக வேண்டும் என்று கூறுகிறேன் என்றால், நீ கதாநாயகனாக வளர்ந்தால் இன்னும் பலருக்கு உன்னால் உதவி செய்ய முடியும் என்று கூறினார். அந்த வார்த்தையை நான் பிடித்துக் கொண்டு கதாநாயகன் ஆவதற்கான எல்லாம் முயற்சிகளையும் செய்தேன்.
அதுமட்டுமல்லாமல் மேடையிலேயே எல்லோரை பார்த்தும் இவனுக்கு யாராவது கதாநாயகன் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டார்.
அதன் பிறகு சில வருடங்கள் கழித்து மீண்டும் ஷெரிஃபை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். நிகழ்ச்சிகள் தான் என்று கூறினேன். படம் நடிக்கிறாயா? என்று கேட்டார். நான் உடனே சம்மதித்தேன். தயாரிப்பாளர் உன்னை வைத்து படம் எடுக்க சம்மதித்து விட்டார். நீ தான் கதாநாயகன் என்று கூறினார்.
அதேபோல் என்னை கதாநாயகனாக ஆக்குவதில் விருப்பம் தெரிவித்த முதல் தயாரிப்பாளர் ஜெய் கிரண் சார் தான். நம்முடைய குடும்பத்தாரும் உறவினர்களும் 5 லட்சங்கள் நம்மை நம்பி கொடுத்தாலே பெரிய விஷயம். ஆனால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சிலர் உதவுவார்கள், இல்லையா! அப்படித்தான் பல கோடிகளை என்னை நம்பி செலவழித்திருக்கிறார். அவருக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
பாலாஜி சக்திவேல் சாரிடம் கதை கூறிய போது நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். நான் கதாநாயகன் என்றது மறுத்துவிடுவார் என்று தயங்கினேன். ஆனால், இந்த சாதாரண ஒரு ஆளுக்காக அவர் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
அதேபோல் தான் அர்ச்சனா அம்மாவும் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
அடுத்ததாக, கதாநாயகி தேர்வு நடைபெற்றது. அப்போது எல்லோரும் கதை கேட்பார்கள். நன்றாக இருக்கிறது என்பார்கள். கதாநாயகன் நான்தான் என்றதும் யோசித்து சொல்கிறேன் என்று சென்று விடுவார்கள். இப்படி 50 பேருக்கு பிறகு நமீதா கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தில் என்னுடன் நாயகியாக நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார், அவருக்கு மிக்க நன்றி.
மேலும், இப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகைகளுக்கும், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.