மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு (அக்டோபர் 17) வெளியாக இருக்கிறது.
துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கபடி வீரராக நடித்திருக்கிறார் துருவ் விக்ரம்.இந்நிலையில் பைசன் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்.16) நடைபெற்றது. அதில் பேசிய மாரிசெல்வராஜ்,
“சமூகத்தில் என்னென்னமோ நடக்கிறது. அது எல்லாவற்றையும் பார்க்கின்ற, அனுபவிக்கின்ற மக்கள்தான் தீர்மானிப்பார்கள்.
அரசியல் கூட்டங்கள் நடக்கிறது, கருத்தரங்கங்கள் நடக்கிறது. இதுபோன்ற பல விஷயங்கள் நடக்கிறது. அதில் சினிமாவும் ஒரு அங்கம்.
சினிமாவிற்கு மட்டும் அதில் தூய்மையான ஒரு பிம்பம் கொடுக்கக்கூடாது. சினிமா என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது.
சினிமா என்பது ஒரு பவர்புல்லான ஒரு கலை. நான் என்ன படம் எடுத்தாலும் அதைப் பார்க்கப்போகிறது மக்கள்தான்.
அதைத் தீர்மானிக்கப்போகிறது மக்கள்தான். கொண்டாட்டம், துயரம் என பல விஷயங்களை மக்கள் சினிமாவில் பார்க்கிறார்கள்.எதில் நேர்மை, நியாயம் இருக்கிறதோ அதை மக்கள் பாராட்டுகிறார்கள். அவர்களுக்கு ஏற்றுக்கொள்கின்ற மாதிரியான கதைகள் இல்லை என்றால் அது ரஜினி படமாக இருந்தாலும் சரி மாரிசெல்வராஜ் படமாக இருந்தாலும் சரி அதனை புறக்கணித்துவிடுவார்கள்.
சினிமா என்றால் இந்தக் கருத்தைத்தான் பேசணும், இந்தக் கருத்தையெல்லாம் பேசக் கூடாது என்று சொல்வது தவறு” என்று பேசியிருக்கிறார்.துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் (காளமாடன்) திரைப்படம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அனுபாமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய இயக்குநர் மாரி செல்வராஜ், “இந்த பைசன் திரைப்படம் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தது மணத்தி கணேசன் தான்.பைசன் திரைப்பட விழா: மாரி செல்வராஜ் – மணத்தி கணேசன்
இவரை சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்தவன் நான். என்னுடைய ஹீரோவாக இருந்தவர். கபடி விளையாட்டுக்காக, இவருக்காக போஸ்டர் எல்லாம் ஒட்டியிருக்கிறேன்.
இவரின் மூலக்கதையை வைத்து ஒரு படம் உருவாக்கப்போகிறேன் என அனுமதி கேட்டபோது, என்னை நம்பி அதற்கான ஒத்துழைப்பை இதுவரைக் கொடுத்துக்கொண்டிருப்பவர் மணத்தி கணேசன்.
உழைப்பு, நேர்மை எனப் பல போராட்டங்களைக் கடந்து உயரத்துக்கு வந்தவர்களையும், பல இளைஞர்களின் கதையையும் என் ஸ்டைலில், என்னுடைய அரசியல் பார்வையில் நான் இப்படத்தில் சொல்லியிருக்கிறேன்.
இப்படத்தை பா. ரஞ்சித் உள்ளிட்ட என் நண்பர்கள் பலர் பார்த்துவிட்டு என்னை பாராட்டினார்கள். இருந்தாலும், மணத்தி கணேசன் அவர்கள் இப்படத்தைப் பார்த்துவிட்டு என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது தான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்தது.
நான் இப்போது திருநெல்வேலிக்கு செல்ல வேண்டும் என்றாலும் மனதில் ஒருபாரம் ஏறும். நண்பர்களுடன் உரையாடும்போது, அங்கிருந்து செய்திகள் வரும்போதெல்லாம் அந்தச் சூழல் பதற்றமாக இருக்கும். எனவே, இதை மாற்ற வேண்டும், ஒரு கருத்துரையாடலை முன்னெடுக்க வேண்டும் என விரும்பினேன்.இக்கதை முழுக்க முழுக்க திருநெல்வேலியில் நிகழும் சூழலை இப்பொழுது உள்ள இளைஞர்களிடம் கடத்த என் பார்வையில் எழுதப்பட்ட கதை. தென் மாவட்டத்தில் வெற்றி பெற்ற மற்றும் வெற்றி பெற முடியாத இளைஞர்கள் பற்றிய கதை. திரைத்துறையில் நான் பெற்ற வெற்றிக்குப் பிறகு என் ஊருக்காகவும், என் மாவட்ட, தென் தமிழகத்துக்காக நான் செய்திருக்கும் கதை.
என்னுடைய உச்சபட்ச எமோஷ்னலும் கர்வமும் இந்தப் படம். இந்தப் படம் வெற்றிப்பெற்றது என்பதைத் தாண்டி, தமிழ் சமூகம் இத்திரைப்படத்தை எப்படி எடுத்துக் கொள்கிறது, என்ன கலந்துரையாடுகிறது என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
மாரி செல்வராஜ் என்ற ஒருவனின் அரசியல் புரிதலுக்கும், என் பார்வைக்கும் முழுக் காரணம் ராம் சார். என்னுடைய பெரும் பலம். இந்தப் படம் என்னுடைய பெஸ்ட் எனப் பாராட்டினார்.என்னுடைய இத்தனை வருட சினிமா பயணத்தில் நான் கற்றுக் கொண்ட கலைகளை எல்லாம் இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறேன். நான் இதற்கு முன்பு தீபாவளி பண்டிகையை கொண்டாடியதே இல்லை.
“பாலிய நண்பனின் மரண நினைவை போல கடந்து போகிறது தீபாவளி ” எனக் கவிதையை கூட எழுதி இருந்தேன். ஆனால், இப்பொழுது இந்த பைசன் திரைப்படத்திற்காக நான் முதன் முதலாக என் குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும் தீபாவளியை கொண்டாட காத்துகொண்டிருக்கிறேன்” என்றார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் தயாரிப்பில் விக்ரம் மகன் துருவ், அனுபமா, ரஷிஜா, பசுபதி, லால், அமீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் `பைசன்’ திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.
“சேது படம் அப்போ அந்த ரெண்டு பேருக்கு ரசிகர்கள் கூடிட்டே இருந்தாங்க; அப்போ விக்ரம் கிட்ட”
“விக்ரம் நிறைய போராடி இந்தத் துறைக்குள்ள வந்திருக்காரு. நிறைய அவமானங்கள் பட்டிருக்காரு. யார் அவரை அவமானப்படுத்தியது, அவர்களெல்லாம் இன்னைக்கு என்ன நிலையில இருக்கிறாங்க இன்றதெல்லாம் எனக்கு தெரியும்” – அமீர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் தயாரிப்பில் விக்ரம் மகன் துருவ், அனுபமா, ரஷிஜா, பசுபதி, லால், அமீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் `பைசன்’ திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
வெரிகோஸ் மற்றும் வலி நிவாரணத்திற்கான
போதி பழங்குடி காட்டு எண்ணெய்
மேலும் அறிந்துகொள்ள
மாரி செல்வராஜ் – பா. ரஞ்சித்
மாரி செல்வராஜ் – பா. ரஞ்சித்
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநரும், நடிகருமான அமீர், “ரஞ்சித்தும், மாரி செல்வராஜும் ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும் தங்களின் படைப்புகளை தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும்.
அதற்கு என்னைப் போன்றவர்கள் உறுதுணையாக பக்க பலமாக இருப்போம். யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.
உங்களுக்கெல்லாம் இந்த துருவ்-ஐ எப்போ தெரியும்னு தெரியல, நான் 1999-ல வீட்ல சின்ன வயசுல பார்த்தேன்.
அவரோட அப்பாவும் (விக்ரம்) நானும் நெருங்கிய நண்பர்கள். அது யாருக்குமே தெரியாது. அத பத்தி எங்கேயும் நாங்க பேசிக்கிட்டது கிடையாது.
அவரோட உழைப்பை பக்கத்துல இருந்து பார்த்தவன் நான். சேது பட பூஜைல இருந்து ரிலீஸ் வரைக்கும் கூட இருந்து பார்த்தவன் சேது வெற்றிக்குப் பிறகும் கூட இருந்து பார்த்தவன். அப்போ துருவ்-க்கு ரெண்டு வயசு இருக்கும். எதையாவது கேட்டு அடம்பிடிச்சிட்டே இருப்பாரு. நான்தான் கடைக்கு தூக்கிட்டு போவேன்.
அதுக்கு அப்றம், பைசன்-ல ஒருநாள் பார்க்கும்போது, சேது-ல எப்படி விக்ரம் பாத்தேனோ அப்டியே இருந்தது.துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் (காளமாடன்) திரைப்படம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அனுபாமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்தப் படத்தின் நாயகன் துருவ் விக்ரம் தன்னுடன் இணைந்து நடித்த சக நடிகர்கள், நடிகைகள், கபடி விளையாட்டு வீரர்கள், மேக்கப் ஆர்ட்டிஸ்ட், பிசியோதெரபிஸ்ட், ஓட்டுநர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் (காளமாடன்) திரைப்படம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அனுபாமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்தப் படத்தின் நாயகன் துருவ் விக்ரம் தன்னுடன் இணைந்து நடித்த சக நடிகர்கள், நடிகைகள், கபடி விளையாட்டு வீரர்கள், மேக்கப் ஆர்ட்டிஸ்ட், பிசியோதெரபிஸ்ட், ஓட்டுநர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
recommended by
Bodhi Tribal Herbals
வெரிகோஸ் மற்றும் வலி நிவாரணத்திற்கான
போதி பழங்குடி காட்டு எண்ணெய்
மேலும் அறிந்துகொள்ள
பைசன் பட விழா: துருவ் விக்ரம்
பைசன் பட விழா: துருவ் விக்ரம்
தொடர்ந்து பேசியவர், “பசுபதி எனது தந்தையின் முதல் படத்தில் வில்லனாகவும் அடுத்த படத்தில் அண்ணனாகவும் இப்பொழுது பைசன் படத்தில் தனக்கு அப்பாவாகவும் நடித்ததை நான் ஒரு ஸ்பிரிச்சுவல் சைக்கிளாக பார்க்கிறேன்.
மேலும், எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட சித்த மருத்துவர் ஒருவர் இதுவரை நான் எந்த ஒரு சினிமாவையும் பார்த்ததில்லை. ஆனால் இந்த பைசன் திரைப்படத்தை பார்ப்பேன் என அவர் கூறியது மிகவும் மகிழ்ச்சியளித்தது.நான் சிறு வயது முதலே என் அம்மாவை பெருமிதம் அடைய செய்ய பல முயற்சிகளை எடுத்துள்ளேன். ஆனால்,என் கல்வியின் மூலம் அதை நிறைவேற்ற முடியவில்லை. இந்த படத்தை அவர்கள் பார்த்த பிறகு பெருமிதம் அடைவார்கள் என நாம் நம்புகிறேன் என்றார்.” என்றார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பைசன்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளி ரிலீஸாக திரைக்கு வரவிருக்கிறது.
நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகியிருக்கும் பைசன்’ படத்தின் துடிப்பான பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
பைசன் படத்தில்…
கடைசியாக வந்திருந்த `தென்னாட்டு’ பாடலை பின்னணி பாடகர் சத்யன் பாடியிருக்கிறார்.
சமீபத்தில், சோசியல் மீடியாவில் பெரும் வைரல் அலையாய் வலம் வந்தவர் இந்தப் பாடல் மூலமாக தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு வாழ்த்துகள் சொல்லி அவரிடம் பேசினோம்.
உற்சாகத்தோடு பேசிய சத்யன், “மக்கள் என்னை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்திருக்காங்க. இப்படியான அளவற்ற அன்பை நான் எதிர்பார்க்கவே இல்ல.
இப்படியெல்லாம் எனக்கு லவ் கொடுப்பாங்கனு நான் நினைச்சுப் பார்த்ததும் கிடையாது. `பைசன்’ படத்துல வர்ற `தென்னாட்டு’ பாடலுக்கும் நல்ல விமர்சனங்களைக் கொடுத்து வர்றாங்க.
அந்த அன்பு இதுபோல இன்னும் ஹிட் பாடல்களைத் தரணும்னு தெம்பைத் தருது.” எனத் தொடர்ந்தவர், இந்தப் பாடலுக்கான ரெக்கார்டிங் போன வாரம்தான் நடந்தது.நான் என்னுடைய சுயாதீன பாடலை வெளியிடுறதுக்காக திங்க் மியூசிக்’ நிறுவனத்தைச் சேர்ந்த சந்தோஷுக்கு மெசேஜ் செய்திருந்தேன்.
அந்த நேரத்துலதான் பைசன்’ படத்தின் இந்தப் பாடலைப் பத்தி என்கிட்ட அவர் சொன்னார். பிறகு நிவாஸ் கே. பிரசன்னா எனக்கு கால் பண்ணி இந்தப் பாடல் தொடர்பாக சொன்னார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பைசன்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளி ரிலீஸாக திரைக்கு வரவிருக்கிறது.
நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகியிருக்கும் பைசன்’ படத்தின் துடிப்பான பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
`தென்னாட்டு’ பாடலை பின்னணி பாடகர் சத்யன் பாடியிருக்கிறார்.
சமீபத்தில், சோசியல் மீடியாவில் பெரும் வைரல் அலையாய் வலம் வந்தவர் இந்தப் பாடல் மூலமாக தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு வாழ்த்துகள் சொல்லி அவரிடம் பேசினோம்.
உற்சாகத்தோடு பேசிய சத்யன், “மக்கள் என்னை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்திருக்காங்க. இப்படியான அளவற்ற அன்பை நான் எதிர்பார்க்கவே இல்ல.
இப்படியெல்லாம் எனக்கு லவ் கொடுப்பாங்கனு நான் நினைச்சுப் பார்த்ததும் கிடையாது. `பைசன்’ படத்துல வர்ற `தென்னாட்டு’ பாடலுக்கும் நல்ல விமர்சனங்களைக் கொடுத்து வர்றாங்க.
அந்த அன்பு இதுபோல இன்னும் ஹிட் பாடல்களைத் தரணும்னு தெம்பைத் தருது.” எனத் தொடர்ந்தவர், இந்தப் பாடலுக்கான ரெக்கார்டிங் போன வாரம்தான் நடந்தது.
நான் என்னுடைய சுயாதீன பாடலை வெளியிடுறதுக்காக திங்க் மியூசிக்’ நிறுவனத்தைச் சேர்ந்த சந்தோஷுக்கு மெசேஜ் செய்திருந்தேன்.
அந்த நேரத்துலதான் பைசன்’ படத்தின் இந்தப் பாடலைப் பத்தி என்கிட்ட அவர் சொன்னார். பிறகு நிவாஸ் கே. பிரசன்னா எனக்கு கால் பண்ணி இந்தப் பாடல் தொடர்பாக சொன்னார்.
சத்யன் மகாலிங்கம்
சத்யன் மகாலிங்கம்
பாடலின் டிராக்கையும் எனக்கு அனுப்பியிருந்தாரு. நானும் என்னுடைய ஸ்டுடியோவிலேயே அந்தப் பாடலை ஓரிரு வரிகள் பாடி அனுப்பினேன். மாரி செல்வராஜ் நான்தான் பாடலை பாடணும்னு முடிவாக சொல்லிட்டாரு.
நிவாஸ் பிரசன்னாவும் எனக்கு சப்போர்ட்டிவாக இருந்து, பாடல் நல்ல வரணும்னு உழைப்பைக் கொடுத்தார். இந்தப் பாடலுக்கு தேவையானக் குரலை இந்தப் பாடலே கொண்டு வந்திடுச்சுனு நிவாஸ் ஹாப்பியா சொன்னார்.
நிவாஸ் இசையமைப்பாளர் ஆகுறதுக்கு முன்னாடி இருந்தே அவரை எனக்குத் தெரியும். அவர் இசை மீது அதிகமாக நாலேஜ் இருக்கு.இதுக்கு முன்னாடியே அவருக்கு மெசேஜ் செய்திருக்கேன். கால் பண்ணி அவருடைய பாடல் தொடர்பாகவும் பேசியிருக்கேன். `கட்டாயமா ஒரு காலம் வரும். அன்னைக்கும் நாம சேர்ந்து வொர்க் பண்ணுவோம்’னு அவர் சொல்லியிருக்காரு.
அது இப்போ நடந்திருக்கு! இனியும் எங்க பயணம் தொடரும். இந்த மாதிரியான பாடல் பாடணும்னுங்கிறது என்னுடைய ரொம்ப நாள் ஏக்கம்னுதான் சொல்வேன். என்னை ஹீரோ என்ட்ரி பாடலுக்கு கூப்பிடுவாங்க, ஸ்டைலான பாடலுக்கு கூப்பிடுவாங்க.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பைசன்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளி ரிலீஸாக திரைக்கு வரவிருக்கிறது.
நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகியிருக்கும் பைசன்’ படத்தின் துடிப்பான பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
பைசன் படத்தில்…
கடைசியாக வந்திருந்த `தென்னாட்டு’ பாடலை பின்னணி பாடகர் சத்யன் பாடியிருக்கிறார்.
சமீபத்தில், சோசியல் மீடியாவில் பெரும் வைரல் அலையாய் வலம் வந்தவர் இந்தப் பாடல் மூலமாக தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு வாழ்த்துகள் சொல்லி அவரிடம் பேசினோம்.
உற்சாகத்தோடு பேசிய சத்யன், “மக்கள் என்னை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்திருக்காங்க. இப்படியான அளவற்ற அன்பை நான் எதிர்பார்க்கவே இல்ல.
இப்படியெல்லாம் எனக்கு லவ் கொடுப்பாங்கனு நான் நினைச்சுப் பார்த்ததும் கிடையாது. `பைசன்’ படத்துல வர்ற `தென்னாட்டு’ பாடலுக்கும் நல்ல விமர்சனங்களைக் கொடுத்து வர்றாங்க.
அந்த அன்பு இதுபோல இன்னும் ஹிட் பாடல்களைத் தரணும்னு தெம்பைத் தருது.” எனத் தொடர்ந்தவர், இந்தப் பாடலுக்கான ரெக்கார்டிங் போன வாரம்தான் நடந்தது
நான் என்னுடைய சுயாதீன பாடலை வெளியிடுறதுக்காக திங்க் மியூசிக்’ நிறுவனத்தைச் சேர்ந்த சந்தோஷுக்கு மெசேஜ் செய்திருந்தேன்.
அந்த நேரத்துலதான் பைசன்’ படத்தின் இந்தப் பாடலைப் பத்தி என்கிட்ட அவர் சொன்னார். பிறகு நிவாஸ் கே. பிரசன்னா எனக்கு கால் பண்ணி இந்தப் பாடல் தொடர்பாக சொன்னார்.
சத்யன் மகாலிங்கம்
சத்யன் மகாலிங்கம்
பாடலின் டிராக்கையும் எனக்கு அனுப்பியிருந்தாரு. நானும் என்னுடைய ஸ்டுடியோவிலேயே அந்தப் பாடலை ஓரிரு வரிகள் பாடி அனுப்பினேன். மாரி செல்வராஜ் நான்தான் பாடலை பாடணும்னு முடிவாக சொல்லிட்டாரு.
நிவாஸ் பிரசன்னாவும் எனக்கு சப்போர்ட்டிவாக இருந்து, பாடல் நல்ல வரணும்னு உழைப்பைக் கொடுத்தார். இந்தப் பாடலுக்கு தேவையானக் குரலை இந்தப் பாடலே கொண்டு வந்திடுச்சுனு நிவாஸ் ஹாப்பியா சொன்னார்.
நிவாஸ் இசையமைப்பாளர் ஆகுறதுக்கு முன்னாடி இருந்தே அவரை எனக்குத் தெரியும். அவர் இசை மீது அதிகமாக நாலேஜ் இருக்கு.
இதுக்கு முன்னாடியே அவருக்கு மெசேஜ் செய்திருக்கேன். கால் பண்ணி அவருடைய பாடல் தொடர்பாகவும் பேசியிருக்கேன். `கட்டாயமா ஒரு காலம் வரும். அன்னைக்கும் நாம சேர்ந்து வொர்க் பண்ணுவோம்’னு அவர் சொல்லியிருக்காரு.
அது இப்போ நடந்திருக்கு! இனியும் எங்க பயணம் தொடரும். இந்த மாதிரியான பாடல் பாடணும்னுங்கிறது என்னுடைய ரொம்ப நாள் ஏக்கம்னுதான் சொல்வேன். என்னை ஹீரோ என்ட்ரி பாடலுக்கு கூப்பிடுவாங்க, ஸ்டைலான பாடலுக்கு கூப்பிடுவாங்க.
சத்யன் மகாலிங்கம்
ஆனால், இப்படியான விஷயங்களோட எமோஷன் வரிகள், டிராக்ல ஏற்ற இறங்கங்கள் இருக்கிற மாதிரியான பாடல்ல பாடணும்னு ரொம்ப ஆசை. என்னுடைய பசிக்கும் இந்தப் பாடல் தீனிப் போட்டிருக்குனு சொல்லலாம்.” என்றார்.
“நான் இந்த இடத்துலதான் இருந்தேன். ஆனா, யாருக்குமே தெரியாம இருந்தேன். இப்போ வெளிச்சம் என்மேல பட்டதும் நான் எல்லோருடைய கண்ணுக்கு தெரியுறேன்னு சொல்லலாம். யாரும் என்னை ஒதுக்கல. அந்த சூழல்ல நான் யாருடைய கண்ணுக்கும் தெரியாமல் இருந்துட்டேன்.
நான் இந்த சான்ஸைப் பயன்படுத்தி மேல ஏறி வரணுங்கிறதுதான் என்னுடைய நோக்கமாக இருக்கு.
இனிமேல், எந்த வாய்ப்புகளையும் தவறவிடக்கூடாதுனு எண்ணத்தோட இருக்கேன். இனியும் சில பாடல்கள் சர்ப்ரைஸாக வரவிருக்கு. ஒண்ணு ஒண்ணா தகவல்கள் தர்றேன்.” என சிரித்தப்படி முடித்துக் கொண்டார்.