டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் நாகன் தாங்கல் ஏரியை புத்துயிர் பெறச் செய்து செழிப்பான சுற்றுச்சூழலுக்கு உதவும் நீர்வளமாகவும், மக்கள் நல்லுறவைப் பேணும் சமூக மையமாகவும் மேம்படுத்தி இருக்கிறது!
சென்னை, அக்டோபர் 23, 2025:- உலகளாவிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக முன்னணி வகிக்கும் டாடா கம்யூனிகேஷன்ஸ் [Tata Communications], பிச்சாண்டிகுளம் வனத்துடன் (Pitchandikulam Forest) இணைந்து, தமிழ்நாட்டின் பொத்தூர் போத்தூர் ஊராட்சியில் உள்ள உப்பரபாளையம் கிராமத்தின் நாகன் தாங்கல் ஏரியை தூர் வாரி சீரமைத்திருக்கிறது. இதன் மூலம் நீண்டகாலமாக பயனற்ற நிலையில் இருந்த நாகன் தாங்கள் ஏரி இப்பொழுது பல்லுயிர்களுக்கான ஒரு செழிப்பான சுற்றுச்சூழலையும், இப்பகுதியிலுள்ள மக்களுக்கு நீர்வள ஆதாரமாகவும் புத்துயிர் பெற்றுள்ளது.
இந்த மாபெரும் தூர் வாரும் முயற்சியின் மூலம், நீர் வள பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம் மற்றும் மக்களிடையே சமூக நல்லுறவில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது, இதை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கிராமப்புற, சுற்றுச்சூழல், நீர், விவசாயம், சமூக மேம்பாடு, காலநிலை மாற்றம் தொடர்புடைய பிரச்சினைகளை அறிவியல் மற்றும் சமூகக் கோணத்தில் ஆய்வு செய்யும், மையத்தின் [W-CReS (the Watershed Organisation Trust Centre for Resilience Studies)] மதிப்பீட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. W-CReS (WOTR Centre for Resilience Studies) என்பது Watershed Organisation Trust -ன் (WOTR) ஒரு பிரதான ஆய்வு மற்றும் அறிவியல் மையம் ஆகும், இது அறிவியல், கொள்கை மற்றும் நடைமுறைகளை வகுப்பது ஆகியவற்றை, பல துறைகளுடன் ஒருங்கணைக்கும் (trans-disciplinary) ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
15.01 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர்நிலைத் தட்பவெப்ப நிலைகள், நிலத்தடி நீர் மட்டங்கள், நீரோட்ட முறைகள், நீர் பிடிப்பு திறன், புவியியல் ஆய்வுகள், புவியியல் வரைப்படம், நீர்த் தரம் மற்றும் நீர்நிலைக் குழாயின் அம்சங்கள் ஆகியவற்றின் மீது ஒரு முழுமையான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. டாடா கம்யூனிகேஷன்ஸின் நிதியுடன் நடத்தப்பட்ட WOTR- பகுப்பாய்வில், “ஒரு சிறப்பாகத் திட்டமிடப்பட்ட புத்துயிரூட்டும் முயற்சியில், நீர்ப்பிடிப்பு நீரியல் மற்றும் உள்ளூர் சமூகப் பங்களிப்புடன் இணையும் போது எதையும் சாதிக்க முடியும்” என்பதை எடுத்துக்காட்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
நாகன் தாங்கல் ஏரி, இதற்கு முன்பு ஏறக்குறைய 2,800 கிராமவாசிகளுக்கு முக்கியமான நீர் ஆதாரமாக பயன்பட்டு வந்தது. மேலும் பருவமழை காலங்களில் நீர் சென்று சேர்வதற்கும், நகர்ப்புறங்களில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கும் ஒரு முக்கிய நீர்நிலையாகவும் இருந்தது. எனினும், பல ஆண்டுகாலமாக தூர் வாரப்படாமல் இருந்ததால், வண்டல் மண் படிந்ததோடு, மாசுபட்டதால் அதன் கொள்ளளவு கிட்டத்தட்ட 75% அளவிற்கு கடுமையாகக் குறைந்துப் போனது. இதனால் இந்த ஏரியை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் சீரழிந்ததுவிட்டன. ஒரு காலத்தில் செழித்து வளர்ந்த இயற்கை வளம், சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் தேங்கி நிற்கும் நீர்நிலையாக மோசமடைந்தது.
இந்த நிலைமையில், டாடா கம்யூனிகேஷன்ஸின் ‘ப்ராஜெக்ட் நன்னீர்’ (தமிழில், ‘நல்’ என்றும் ‘நீர்’ என்றும் பொருள்படும்) எனும் மறுசீரமைப்புத் திட்டம், 2022-ல் ஏரியை மீட்டெடுக்கத் தொடங்கப்பட்டது. ‘நன்னீர்’ என்ற இத்திட்டத்தின் பெயர் நல்ல நீரைத் திரும்பக் கொண்டுவரும் நோக்கத்தை மிகச் சரியாகப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
15.01 ஏக்கர் பரப்புள்ள ஏரிக்கு சிறப்பான வகையில் திட்டமிடப்பட்ட நில வடிவமைப்பு உத்தி பின்பற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நாகன் தாங்கல் ஏரியில் இப்போது மேடைகள், ஒரு தீவு, மற்றும் நடைபாதைகளுடன் கூடிய இரண்டு சிறிய குன்றுகள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நிலத்தை வடிவமைக்கு கட்டத்தில், ஏரியின் 4 ஏக்கர் பரப்பளவிற்கு 1.5 மீட்டர் ஆழம் வரை கவனமாக தூர் வாரப்பட்டு வண்டல் நீக்கப்பட்டது. இங்கு தோண்டி எடுக்கப்பட்ட வண்டல் மற்றும் மண், பின்னர் குன்றுகள், தீவுகள் மற்றும் கரைகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டன. இது ஏரியின் சுற்றுச்சூழல் அமைப்பின் புத்துயிர் பெறுவதற்கு பங்களித்தது வண்டல் நீக்கப்பட்ட ஏரிப் பகுதியில் உள்ள கரைகள், மேடைகள், தீவு மற்றும் குன்றுகளில் 4,000-க்கும் மேற்பட்ட பூர்வீக இனத்தாவரங்கள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நடப்பட்டுள்ளன.


நாகன் தங்கால் ஏரியின் புத்துயிர்ப்பு பணி, ஏரியின் நீர் சேமிப்புத் திறன் மற்றும் வருடாந்திர நிலத்தடி நீர் மறுஊட்டம் ஆகியவற்றை கணிசமாக அதிகரித்துள்ளது என W-CReS அறிக்கை தெரிவித்திருக்கிறது. மேலும், இப்பணி தாவரங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதன் மூலம் நிலப் பயன்பாட்டு முறைகளிலும் நேர்மறையான தாக்கத்தை உருவாக்கியுள்ளன.
இந்த புத்துயிர்ப்புப் பணி, நிலத்தடி நீர் அளவைக் கணிசமாக அதிகரித்திருக்கிறது. மேலும், கால்நடைகளுக்கான குடிநீர் விநியோகத்தையும், அவ்வப்போது மீன் பிடிக்கும் வாய்ப்புகளையும், சமூக பொழுதுபோக்கு வசதியையும் மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏறக்குறைய 12,000 நபர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது, இவர்களில் 60% பேர் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்கள். நுண்ணுயிரியல் நீர்த் தரக் குறிக்காட்டிகளும் குறைந்த முதல் மிதமான மாசு அளவுகளைக் காட்டுகின்றன, இது தொடர்ச்சியான சமூக விழிப்புணர்வு மற்றும் பராமரிப்பு முயற்சிகளின் தேவையை எடுத்துக்காட்டுகிறது.


புதுப்பிக்கப்பட்ட ஏரி, அருகிலுள்ள ஒரு டஜன் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அனுபவக் கல்வி வாய்ப்புகளையும் வழங்குகிறது. ஏரிக்கு அடுத்தாற்போல் கட்டப்பட்ட ஒரு கற்கும் மையம், இங்குள்ள சமூகத்தால் வழிநடத்தப்படும் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் தொடர்பு மையமாகவும் செயல்பட்டு வருகிறது. இம்மையம் உள்ளூர் நிர்வாகத்தை ஊக்குவிப்பதோடு, குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு
