மருத்துவ அறிவியல் இப்போதே எந்த அளவுக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது என்றால்,

மருத்துவ அறிவியல் இப்போதே எந்த அளவுக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது என்றால்,

ஊட்டி, 18 ஆகஸ்ட் 2021: மருத்துவ அறிவியல் இப்போதே எந்த அளவுக்கு வளர்ச்சி கண்டி ருக்கிறது என்றால், பல நோய்களுக்கு, வழக்கமாக செய்யப்படும் பெரிய அறுவை சிகி ச்சைகள் இல்லாமலேயே சிறப்பான சிகிச்சையை வழங்கி குணமாக்க இயலும். அத் தகை ய ஒரு சமீபத்திய மற்றும் முற்றிலும் பாதுகாப்பான செயல்முறை உத்திகளுள் ஒன் றாக கருப்பை நார்திசுக்கட்டிகளை சுருக்குதல் (UFE) என்பது இருக்கிறது. 30 – 50 வயது பிரிவிலுள்ள பெண்களில் பலர், கருப்பை நார்திசு கட்டிகள் போன்ற நோய் பாதிப்பு களா ல் அவதியுறுகின்றனர். நார்த்திசு கட்டிகள் என்பவை கருப்பைக்குள் வளர்கிற, புற்றுநோ ய் சாராத திசுக்கட்டிகளாகும். இதன் காரணமாக, அப்பெண்களின் மாதவிடாய் சுழற் சியின்போது மிக அதிக அளவில் இரத்தப்போக்கும், அடிவயிற்று வலியும் ஏற்படும். மிக முற்றிய பாதிப்பு நேர்வுகளில் பல பெண்களுக்கு அறுவைசிகிச்சை அறிவுறு த்தப்படு கிறது.

ஆனால், இப்போது, மிகச்சிறிய அளவு ஊடுருவலுடன் கூடிய சிகிச்சை செயல்முறையான கருப்பை நார்த்திசுக்கட்டிகளை சுருக்குதல் (UFE) என்ற சிகிச்சை முறையை 15 – 20 நிமிட ங்க ளில் செய்து முடிக்கக்கூடிய அளவுக்கு மருத்துவ அறிவியல் வளர்ச்சி கண்டி ருக்கி றது. UFE என்பது, நார்த்திசுக்கட்டிகளுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை குறைக்கக்கூடிய ஒரு செயல்முறையாகும். போதுமானளவு இரத்தம் கிடைக்கப்பெறாதபோது இந்த நார்த்   திசுக்கட்டிகள் சுருக்கம் அடையும் மற்றும் அளவில் குறைந்து விடும். இதன் மூலம் இதன் பாதிப்பு அறிகுறிகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

கேரளாவின் கோட்டக்கல்-ல் அமைந்துள்ள ஆஸ்டர் MIMS மருத்துவமனையில் இதயவியல் துறையில் முதுநிலை நிபுணராகத் திகழும் டாக்டர். டக்சின் நெடுவஞ்சேரி, இத்தகைய சிகிச்சை செயல்முறைகளை 1000-க்கும் அதிகமான எண்ணிக்கையில் வெற்றிகரமாக செய்திருக்கிறார். இந்தியாவில் இந்த புதிய சிகிச்சை செயல்முறையை அறிமுகம் செய்த சில மருத்துவர்களுள் இவரும் ஒருவர். வரும் ஞாயிறு அன்று (22/08/2021, காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை) ஊட்டி, குன்னூர் சாலை, பிஎஸ் சர்ஜிகேர் என்ற முகவரியிலுள்ள எஸ்எம் மருத்துவமனைக்கு டாக்டர் டக்சின் வருகை தரவிருக்கிறார் மற்றும் இனிமேல் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அவர் வருகை தந்து சிகிச்சையளிப்பார்.

முன்பதிவுசெய்ய தொடர்புகொள்ள வேண்டிய எண்: 9656000737