பிரபல வினியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குநர் கேயாரின் ( KR ) மனைவி திருமதி இந்திரா காலமானார்.

பிரபல வினியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குநர் கேயாரின் ( KR ) மனைவி திருமதி இந்திரா காலமானார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சவுத் இந்தியன் பிலிம் சாம்பர் ஆப் காமர்ஸ் ஆகியவற்றில் முன்னாள் தலைவராக பணி புரிந்தவரும், பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தரான கேயாரின் மனைவி திருமதி இந்திரா கேயார் சிறுநீர க கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 24, 2021) மாலை 4.45 மணிக்கு அவர் கால மானார். அவரது வயது 67.

இவர்களுக்கு ஒரு மகனும் 3 மகள்களும் உள்ளனர்

அவரது இறுதி சடங்கு நாளை (செப்டம்பர் 25, 2021) மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.

முகவரி: பழைய எண் 11, புதிய எண் 14, முதல் பிரதான சாலை, சீதம்மாள் காலனி எக்ஸ் டென்ஷன், SIET கல்லூரி அருகில், தேனாம்பேட்டை, சென்னை.