‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தன்பாலின சேர்க்கையாளர்களின் உணர்வைப் பேசும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’

இரண்டு இளம் பெண்கள் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலித்து வாழும் வாழ்க் கையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் தி ரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஷார்ட்ஃபிளிக்ஸ் எனும் ஒ.டி.டி த ளத்தில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆணும், பெண்ணும் காதலிப்பது இயற்கை. எனினும் இந்த சமூகத்தில் இயற்கையான உற வுகளை மீறி ஆணும் ஆணும்… பெண்ணும் பெண்ணும்… என தன்பாலின ஈர்ப்பும், அவர் க ளின் சேர்க்கையும் பல இடங்களில் நிகழ்கிறது. இந்நிலையில் இரண்டு வெவ்வேறு மத பி ன்னணியில் பிறந்து, ஆச்சார அனுஷ்டானங்களுடன் வாழும் இரண்டு இளம் பெண்கள், வி த்தியாசமான சூழலில் சந்தித்து, காதல் வயப்பட்டு, தன்பாலின சேர்க்கையாளர்களாக மாறுகிறார்கள்.

இவர்களின் காதலை இந்த சமூகம் அங்கீகரித்ததா? அல்லது புறக்க ணி த் ததா? என்பது குறித்தும், சமூகத்தின் எதிர்ப்புகளை மீறி இவர்களின் காதல் என்ன ஆனது? என்பது கு றி த்தும் விவரிப்பது தான் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’. அறிமுக இயக்குநர் ஜெயராஜ் பழனி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த தொடரில் சு ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத் ஃபராஸ், ஆறுமுக வேல், பிரதீப், நிர ஞ் சன் உள்ளிட்ட பலர் நடித்தி ருக்கிறார்கள்.

சதீஷ் கோகுலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய் திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தர்ஷன் ரவிக்குமார் இசையமைத்திருக்கிறார். ஆர்.எல். விக்னேஷ் படத்தொகுப்பு பணிகளை கவ னிக்க, ரவி பாண்டியன் கலை இயக்கத்தை கவ னித்திருக்கிறார். லெஸ்பியன் உறவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரை ப் படத்தை ஷார்ட்ஃப்ளிக்ஸ் நிறுவனத் துடன் இணைந்து இசை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரி த்திருக்கிறது. நடிகை நீலிமா இசை இப்படத்திற்கு இணை தயாரிப்பாளராக பணி யாற் றியிருக்கிறார்.

காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப் ப ட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் கதையின் நாயகிகளின் முகங்கள் வண்ணமயமாக இட ம் பெற்றிருப்பதால் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. காதலைப் பற்றி காமத்தை க டந்து உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தியிருப்பதால் ‘வாழ் வு தொடங்குமிடம் நீதானே’ எனும் திரைப்படத்திற்கு டிஜிட்டல் தள பார்வையாளர்களி டத் தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.