தமிழகத்தில் முதல்முறையாக நேர்மையாக நடைபெற்ற சிலம்பம் போட்டி

தமிழகத்தில் முதல்முறையாக நேர்மையாக நடைபெற்ற சிலம்பம் போட்டி: தமிழ்நாடு சிலம்பம் பேரவையின் முதலாவது மாநில அளவிலான சிலம்பம் போட்டி 2023-2024

தமிழ்நாட்டின் பராம்பரிய விளையாட்டு கபடி, ஜல்லிக்கட்டு போன்றதுதான் சிலம்பம். இத்துறையைப் பற்றி யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஏனோதானா என்றிருந்த நிலை மாறி முறைப்படி முதல்முறையாக எந்த ரெக்கமண்டஷன் இல்லாமல் நடுவர்களுக்கே தனிப்போட்டி வைத்து செலக்ட் பண்ணி அதன்பின்பே தமிழ்நாடு சிலம்பம் பேரவையின் (Tamilnadu Silambam Peravai )முதலாவது மாநில அளவிலான சிலம்பம் போட்டி 2023-2024 (First State Level Silambam Championship 2023-24 ) பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில்Tamilnadu Physical Education and Sports University, melakkkotayur, சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிலம்பத்தை என்றென்றும் நேசிக்கின்ற உலக சிலம்ப ஆசான்களின் ஓருங்கினணந்த தலைவரும் NRD சேர்மன் திரு. N. R. தனபாலன் அவர்கள் விழாவை கொடியசைத்து துவக்கி வைத்தார்.விழாவில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பாலாஜி எம் எல் ஏ விழாவில் கலந்து கொண்டு பேசியதோடு மட்டுமல்லாமல் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் மாணவர்களோடு கம்பு சண்டையில் ஈடுபட்டார்.

இப்போட்டியில் மினி சப்ஜுனியர், சப் ஜுனியர் & ஜுனியர்(மாணவ மாணவியர்), சீனியர் & சூப்பர் சீனியர் (ஆடவர் & மகளிர்) என பல பிரிவுகளில் இப்போட்டி நடைபெற்றது.
இவற்றில் இங்கு நடை பெற்ற போட்டிகள் ஒற்றை சிலம்பம், நடுங்கம்பு சிலம்பம், இரட்டை கம்பு சிலம்பம், ஓற்றை சுருள்வாள், இரட்டை சுருள்வாள், ஒற்றை வாள்வீச்சு, இரட்டை வாள்வீச்சு, வேல் கம்பு வீச்சு, மான் கொம்பு விளையாட்டு, நெடுங்கம்பு அடிமுறை, செடிகுச்சி அடிமுறை, மான்கொம்பு அடிமுறை, வாள் கேடையம் அடிமுறை, குத்துவரிசை கை விளையாட்டு, நேரடிப்போட்டி நடந்தது.

திமுக / பாஜக இரு தேர்தல் அறிக்கையிலும் தேசிய அளவில் சிலம்பத்தைக் கொண்டு செல்வோம் என அறிக்கையில் உள்ளது எங்களுக்கு சந்தோஷமே என சிலம்பச் செம்மல் |கலைமுதுமணி R. முருககனி ஆசான் (அகில பாரத சிலம்பம் கவுன்சில், சர்வதேச நடுவர்\தொழில்நுட்ப இயக்குனர்)கூறினார்.

எங்களுக்கான பராம்பரிய உரிமையை கொடுங்கள். நேர்மையாக நடந்துங்கள். தமிழகத்தில் முறையான அங்கிகாரம் வேண்டும். காலமாற்றத்திற்கு ஏற்ப சிலம்பத்துக்கான அடிப்படை விதிகளை கொண்டு வர அரும்பாடுபட்டவரும், எல்லா நடுவர்களும் ஏற்றுக்கொள்ளக்ககூடிய புதிய விதிகளை பல உருவாக்கியவருமான தமிழ்நாடு சிலம்பம் பேரவையின் தலைவருமான அண்ணாவி J. ஈசன்(ESAN) அவர்கள் உயிரே போனாலும் பரவாயில்லை. நேர்மையாக சிலம்பப்போட்டி நடக்க வேண்டும் என திரும்பத்திரும்ப அழுத்தத்திருத்தமாக சொன்னார். பொதுச்செயலாளர் நாஞ்சில் மு. சுரேஷ் அவர்கள் எல்லாமே முறையாக முறைப்படி நடந்தால் மட்டுமே சிலம்பக்கலை வளரும் என கூறினார். இவ்விழாவில் 14க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பாராட்டு பதக்கங்களை பெற்றனர்.

இவ்விழாவில் ஓவ்வொரு நடுவர்களும்
தங்களுக்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு இருந்தனர்.இவ்விழாவிற்கு அயராது பாடுபட்ட துணைப்பொதுச்செயலாளர் சண்முகப்பிரியா,துணைத்தலைவர் ராஜேந்திரன், ஆசான் நந்தகுமார், ஆசான் சரவணன்,, ஆசான் NG. ராஜேந்திரன்,ஆசான் ஹிமையவள் மற்றும் பல ஆசான்கள் இரவு பகல் பாராமல் இப்போட்டிக்கு உழைத்துள்ளனர்.

தமிழ்நாடு சிலம்பம் பேரவையின் போட்டி விதிமுறைகளின் படி அனைத்து போட்டிகளும் நடத்தப்பட்டன.பொதுவிதிமுறைகள், தொடுமுறைவிதிகள், தனித்திறமை விதிகள் என பிரிக்கப்பட்டு இப்போட்டிகள் நடைபெற்றன. ஆசான்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டன. நடுவர்களுக்கு நினைவுப்பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டன.இப்போட்டி நடந்த உதவியாக இருந்த Akila bharatha silambam council,International silambam federation,Tamilnadu physical education and sports university,Chengalpattu district silambam peravai,International silambam federation,ABSC ஆகியவற்றிற்கு நன்றியை விழாக்குழவினர் தெரிவித்தனர்.