மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து ஓட்டுப் போட்ட இயக்குனர் சுசி கணேசன்

மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து ஓட்டுப் போட்ட
இயக்குனர் சுசி கணேசன்
————-

இயக்குனர் சுசி கணேசன் தனது ஜனநாயக கடைமை ஆற்றும்விதமாக ,
ஓட்டு போடுவதற்காக மும்பையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து ஓட்டுப் போட்டிருக்கிறார் .
சென்னை மடுவங்கரை ஐந்து பர்லாங் சாலையில் இருக்கும் பூத் நம்பர் 236 -ல் வாக்கு செலுத்திவிட்டு…

அவர் கூறியதாவது “ ஒவ்வொருவரும் அரசியல் அமைப்பை குறை சொல்வதை ஈசியாகவும் ஸ்டைலாகவும் ஆக்கிட்டோம் … முதல்ல நம்ம கடைமையை செஞ்சமான்னு பாக்கணும் . கடமையை செய்யாம கமெண்ட் அடிக்கக் கூடாதில்ல ….
அதுக்குதான் இந்த effort… நம்ம ஒரு ஆளு என்னத்த மாத்தப்போறோம்னு நினைக்காம , நம்மள மாதிரி ஒவ்வொரு ஆளும் சேந்தாதான் மாத்த முடியும்னு காட்டுறதுக்கு , எங்கிருந்தாலும் வந்து ஓட்டுப் போடுறது எல்லா சிட்டிசனோட கடமை“ என்றார்..