இயக்குனரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய ஆறாவது கவிதை தொகுப்பு
எழுத்து பிரசுரம் வெளியிட்ட மேகங்களின் பேத்தி எனும் நூல் அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னாவின் (fetna) 34வது பேரவை விழாவில் வெளியிடப்பட்டது.
முதல் பிரதியை வட அமெரிக்க தமிழ் சங்கத்தின் தலைவர் விஜய் மணிவேல் வெளியிட முன்னாள் தலைவர் பால சாமிநாதன் பெற்றுக் கொண்டார். உடன் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் எழுத்தாளர் சு வேணுகோபால் ஆகியோரும் நூலின் பிரதியை பெற்றுக் கொண்டனர்


