ONDC வலையமைப்பில் கிரெடிட் கடன் சேவைகளை அனைவருக் கும் கிடைக்கச்செய்கின்ற முய ற்சியில் டாடா டிஜிட்டல் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது
· திறந்த டிஜிட்டல் நிதித் துறையில் அதன் முதன்மை நிலையை வலுப்படுத்துகின்ற ONDC வலையமைப்பில், வழங்கல்கள் மற்றும் பயனாளர்களின் மிகப்பெரிய பங்கிற்கு பங்களிக்கிறது.
· ஒரு வெளிப்படையான மற்றும் போட்டித்தன்மை மிக்க டிஜிட்டல் கடன் சந்தையை உருவாக்குகின்ற 14 கடன் வழங்கும் நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.
· வெறும் 3 மாதங்களுக்குள் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தனிநபர் கடன் விண்ணப்பங்களை ஈர்த்துள்ளது.
சென்னை, டாடா டிஜிட்டல்* நிறுவனம் ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (ONDC) இன் ஆரம்ப கட்ட மற்றும் தாக்கம்நிறைந்த ஏற்றுக்கொள்ளல் மூலம், இந்தியாவில் கடன் அணுகலை அனைவருக்கும் கிடைக்க செய்கின்ற இயக்கத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விரைவாக உருவெடுத்து வருகிறது. ONDC இல் நிதி சேவைகளுக்கான முதல் மற்றும் மிகப்பெரிய வாங்குபவர் தளங்களில் ஒன்றாக, ONDC நெட்வொர்க்கில் விண்ணப்பங்கள், பயனர்கள் மற்றும் கடன் வழங்கல்கள் ஆகியவற்றில் மிகப்பெரிய பங்கை வகிக்கின்ற டாடா டிஜிட்டல் கடந்த 3 மாதங்களுக்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்களை ஏற்கனவே வழங்கியுள்ளது.
இந்த குறிப்பிடத்தக்க ஆரம்ப ஈர்ப்பு, டாடா டிஜிட்டல் இன் விரிவான அளவிலான அமைப்பு, நுகர்வோர் நம்பிக்கை மற்றும் பரந்த அளவிலான அணுகல் ஆகியவற்றின் ஒரு நேரடியான விளைவாக இருக்கிறது. டிஜிட்டல் சேவைகளுக்கான ஒரு திறந்த, இடைச்செயல்பாட்டு மற்றும் உள்ளடக்கிய கட்டமைப்பை உருவாக்குகின்ற ONDC இன் மைய தொலைநோக்குடன் சீராக
பொருந்துகிறது. இந்த முயற்சியின் மையத்தில் டாடா நியூ தளத்தில் இயங்குகிற டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் வலுவான கடன் சந்தை உள்ளது. இந்த சந்தை தற்போது ONDC வலையமைப்பு மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இரண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய14 நிதி நிறுவனங்களைக் கடன் கூட்டாளர்களாகக் கொண்டுள்ளது. இந்த பல-கடன் வழங்குநர் அமைப்பு, கடனுக்கு புதியவர்கள் உள்ளடங்கிய சம்பளம் பெறும் மற்றும் சுயதொழில் செய்கிற தனிநபர்கள் ஆகியோருக்கு அதிக நெகிழ்வுத்தன்மை, போட்டி விலை நிர்ணயம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கடன் விருப்பங்களை உறுதி செய்கிறது.
“ONDC நெட்வொர்க்கில் எங்கள் பங்கேற்பு, இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை ஆதரிப்பதற்கும் மற்றும் நிதி தயாரிப்புகளுக்கான அணுகலை அனைவருக்கும் கிடைக்க செய்வதற்குமான டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது” என்று டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் நிதி சேவைகள் தலைவர் கௌரவ் ஹஸ்ரதி கூறினார். “டாடா நியூ வில் உள்ள எங்கள் கடன் சந்தையில் இப்போது பல்வேறு தயாரிப்பு வகைகளில் 14 கடன் வழங்குநர்கள் உள்ளனர். குறிப்பாக தங்கக் கடன்களில் ஒரு வலுவான வரவேற்பை நாங்கள் கண்டுள்ளோம், இது மாறிவரும் சந்தை விருப்பத்தேர்வுகள் மற்றும் வளர்ந்து வரும் நுகர்வோர் தேவைகளுக்கு ஏற்ப தளத்தின் தகவமைப்புத் திறனை பிரதிபலிக்கிறது. ONDC நெட்வொர்க்கின் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் தடையற்ற, டிஜிட்டல் மற்றும் தொந்தரவு இல்லாத கடன் அனுபவத்தை வழங்குவது மட்டுமல்லாமல், நமது நாட்டின் பின்தங்கிய பிரிவுகளுக்கு சேவை செய்யவும் தீவிரமாகச் செயல்படுகிறோம்.”
ONDC யின் பொறுப்பு தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை செயல்பாட்டு அதிகாரியான விபோர் ஜெயின் கூறுகையில், “ONDC நெட்வொர்க், இந்தியாவில் கடன் எவ்வாறு அணுகப்படுகிறது மற்றும் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை மாற்றியமைக்கிறது. ஒரு ஒற்றை மற்றும் தடங்கலற்ற ஒருங்கிணைப்பின் மூலம், நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடன் வழங்கும் பல கூட்டாளர்களின் ஒரு பரந்த வலையமைப்புடன் மற்றும் அதன் நேர்மாறாகவும் உடனடியாக இணைக்க முடியும், அதேநேரம், நுகர்வோர் தனித்தனியாக ஒவ்வொரு கடன் வழங்குநரையும் அணுகாமலேயே பல கடன் விருப்பங்களுக்கு வெளிப்படையான அணுகலைப் பெறுகிறார்கள். பெறப்பட்ட தரவின் திறனைப்
பயன்படுத்துவதன் மூலம், உண்மையான நிதிச் சேர்க்கையை பரந்த அளவில் ஊக்குவிக்கின்ற இந்த திறந்த மற்றும் இணைந்து செயல்படக்கூடிய நெட்வொர்க், சேவை செய்யப்படாத மற்றும் போதுமான சேவை குறைந்த பிரிவினருக்கு பொறுப்பான முறையில் கடனை ஒப்புக்கொண்டு விரிவாக்குவதை சாத்தியமாக்குகிறது. கடன் வசதியை எளிமையான, தடையற்ற மற்றும் உலகளாவியமாக அனைவரும் அணுகும் வகையில், ஒரு திறம்பட்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கடன் சூழலமைப்பை உருவாக்குவதே எங்கள் இறுதிக் குறிக்கோளாக இருக்கிறது.”என்று கூறினார்.
இந்த சக்திவாய்ந்த பொது-தனியார் கூட்டு முயற்சியின் மூலம், டாடா டிஜிட்டல் நாடு முழுவதும் நிதிச் சேர்க்கையில் முன்னோடியாக உள்ளது. எந்தவொரு சிரமமான காகிதப் பணிகளும் இல்லாமல், விண்ணப்பம் செய்வதிலிருந்து கடன் வழங்குவது வரையிலான கடன் செயல்முறை முழுவதும் முழுமையாக டிஜிட்டல் முறையில் உள்ளது. பணம் வழங்கல்கள் ஏறக்குறைய உடனடியாக செயல்படுத்தப்படுகின்றன.
*டாடா டிஜிட்டல் என்பது பல கடன் வழங்குநர்களுடன் இணைந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கடன்களை வழங்குகிற ஒரு கடன் சேவை வழங்குநர்/டிஜிட்டல் கடன் வழங்கும் செயலியாகும்.