செந்தா (பரிசுத்தமான கலங்கமற்ற கதை)

செந்தா (பரிசுத்தமான கலங்கமற்ற கதை)

சூர்யா, சிவா இரு நண்பர்கள்.இவர்களுடன் படித்த செந்தாமரையும் உற்ற தோழியாக இருக்கிறாள். சிவாவும் செந்தாமரையும் காதலிக்க இவர்களின் காதலுக்கு உறுதுணை யாக இருக்கிறான் சூர்யா. இவர்களின் காதலை செந்தாமரையின் பெற்றோர்கள் ஏற்க மறுக்கவே சிவாவுடன் பழகுவதை நிறுத்தி விடுகிறாள் செந்தாமரை. ஆனால் சூர்யாவும் செந்தாமரையும் எப்பொழுதும் நண்பர்களாகவே இருக்கிறார்கள். செந்தாமரைக்கு வேறு ஒருவரை மணமுடிக்க பெற்றோர்கள் முயற்சி எடுக்கிறார்கள். முடிவு என்ன என்பதை காதல் ரசம் சொட்ட சொட்ட சொல்லும் கதையே செந்தா.

ஸ்ரீசித்ரா பெளர்ணமி பிலிம் சார்பில் கதை எழுதி தயாரித்து அதிரடி ஆக்ஷன் ரோலில் நடித்திருக்கிறார் வி.மணிபாய்.

பிரபு சாலமன், “மஞ்சப்பை”ராகவன் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சகாயநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கதாநாயகர்களாக டிட்டோ, ஶ்ரீ மகேஷ் நடிக்க கதாநாயகியாக தீபா உமாபதி நடித்துள்ளார். மேலும் வி.மணிபாய், சாம்ஸ், மதுமிதா, அஸ்மிதா, செந்தமிழர, “தெய்வமகள்”புஷ்பலதா, சாப்ளின் சுந்தர், அபிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பால் லிவிங்ஸ்டன், இசை – டி.எஸ் முரளிதரன்,பாடல்கள்- நா.முத்துக்குமார், ராபர்ட், வி.மணிபாய், சகாயநாதன்,எடிட்டிங் – புவன்,நடனம் – பாபி ஆண்டனி சண்டை பயிற்சி – ஓம் பிரகாஷ்,திரைக்கதை வசனம்-செந்தமிழா ,கதை தயாரிப்பு – வி.மணிபாய்,இயக்கம் -சகாயநாதன்

ஹீரோ, ஹீரோயினை கடத்தி வைக்கும் வில்லன் மற்றும் வில்லன் ஆட்களை மணிபாய் துவம் சம் செய்யும் செயயும்  இந்த சண்டைக் காட்சி பாண்டிச்சேரி சுதேசி மில்லில் ஏரா ளமான சண் டைக் கலைஞர்களுடன் படமாக்கப்பட்டது. நா.முத்துக்குமாரின் பாடல் வரி களில் ஆயிரம் பூ க்கள் ஒன்றாய் கூடி பெண்ணாய் மாறியதோ… எனும் மனதை வருடும் பாடலும், புன்னகையில் பூப்பறிக்கும் காதல்… எனும் பாடலும்,கட்டு கட்டு கமரகட்டு… எனும் துள்ளல் இசை பாடலும் கேட்போரை கிரங்கடிக்கும்.பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம், சென்னை போன்ற இடங்களில் 40 நாட்களில் ஒரேகட்ட படப்பிடிப்பாக நடைபெற்ற து.நி றைவுகட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் வெளிவர உள்ளது.   வெங்கட் பி.ஆர்.ஓ